பிணந்தின்னி கலையரசன் டேஞ்சரான ஆளு.. விஜய் டிவிக்கு அழிவு காலம்.. ஷகிலா ஆதங்கம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிறார். இதில், திவாகர், நடிகர் கம்ருதீன், நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, விக்கல்ஸ் விக்ரம், பிரவீன் ராஜ், இன்ஸ்டாபிரபலம் கலையரசன், எஃப் ஜே, கானா வினோத், துஷார் என மொத்தம் 10 ஆண் போட்டியாளர்களும், கனி, சுபி, விஜே பார்வதி, வியானா, நந்தினி, கெமி, அரோரா, ஆதிரை, ரம்யா ஜோ என 9 பெண் போட்டியாளர்களும், அப்சரா என்கிற திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் இருந்தார். இதில் நந்தினி தானாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் நடிகை ஷகிலா Tamil Movie World Media யூடியூப் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு அழிவு காலம் என்று சொல்வேன். விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் மூலம் என் மீதான கண்ணோட்டமே மாறியது. அந்த டிவியால் முன்னுக்கு வந்த நான், இன்று விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை பார்த்து வயிற்று எரிச்சலாக இருக்கிறது. ஆணவ படுகொலையை நியாயப்படுத்த வகையில் பேசி இருந்த திவாகர் மீது புகார் அளித்து இருக்கிறேன் அப்படி இருந்தும் எப்படி திவாகர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனார். அவர் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார். தற்போது வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அவரை கார்னர் செய்கிறார்கள், அப்படி அனைவரும் அவரை கார்னர் செய்ய செய்ய திவாகர் வீட்டிற்குள் தான் இருப்பார்.

பிணந்தின்னி: அதேபோல அகோரி கலையரசனை பற்றி அவரது மனைவி பலவிதமான புகார்களை கூறினார். அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தான், கோவிலேயே அசிங்கமாக நடந்து கொண்டார் என மாறி மாறி இருவரும் மீடியா மீடியாவாக சென்று பேட்டி கொடுத்தார்கள். அது மட்டுமல்லாமல் கலையரசனே ஒரு பேட்டியில், நான் பிணத்தை தின்று இருக்கிறேன் என பேட்டி கொடுத்திருந்தார். அப்படிப்பட்ட ஒருவனை விஜய் டிவி எப்படி தேர்வு செய்து பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பியது. விஜய் டிவியில் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் சேர்ந்து ஆலோசனை நடத்தித்தான் ஆட்களை தேர்வு செய்வார்கள். இவர்கள் ஒருவருக்கும் அறிவு இல்லையா? ஒரு பிணந்தின்னியை எப்படி பிக் பாஸ் வீட்டில் அனுப்பினார்கள்.
ஷகிலா பேட்டி: வெளியில் சண்டை போட்டுக் கொண்டு பிரச்சனை செய்தால், அதன் மூலம் பிரபலமாகி விடலாம், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விடலாம் என ஒரு தவறான முன் உதாரணத்தை விஜய் டிவி ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு பெரிய தகுதி, திறமை ஒன்றும் தேவை இல்லை, பிக் பாஸ் வீட்டில் திறமையை நிரூபிக்க கூடிய வகையில் அங்கு எதுவும் நடக்காது. இதனால் தான் பெரிய நடிகர்கள் யாரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல முன்வரவில்லை. அதனால் தான், இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பவர்களை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறார்கள் என ஷகிலா அந்த பேட்டியில் பேசினார்.


Click it and Unblock the Notifications











