»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

மர்ப நபர்கள் டெலிபோன் செய்து என்னை மிரட்டுகிறார்கள், என்னை வாழ விடுங்கள் அல்லது சாக விடுங்கள்என்று கவர்ச்சி நடிகை ஷகிலா கூறினார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

என் வீட்டுக்கு அடிக்கடி மர்ம டெலிபோன்கள் வருகின்றன. பேசுவது யார் என்று தெரிவிக்காமல், என்னைக் கைதுசெய்ய போலீஸார் வருவதாகக் கூறிவிட்டு கட் பண்ணிவிடுகிறார்கள்.

போலீஸாருக்குப் பயந்து நான்ஆந்திராவிற்கு ஓடிவிட்டதாகப் பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள்.

என் போன்ற நடிகையை வாழ விடுங்கள் அல்லது சாக விடுங்கள்.

இதுபோல் உண்மைக்கு மாறான செய்திகளைஎழுதி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, சித்தரவதை செய்ய வேண்டாம்.

இதனால் எனக்கு வரவிருந்தபடவாய்ப்புகள் கைநழுவிப் போய்விட்டன.

இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும், நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்திடமும் புகார் கொடுக்கஉள்ளேன்.

நான் கவர்ச்சியாக நடித்துள்ளேனே தவிர, ஆபாசமாக நடித்ததில்லை.

இதுபோல் அனைத்துக் கதாநாயகிகளும்நடித்துள்ளனர். மலையாளப் படங்களில் நடித்ததால் எனக்கு செக்ஸ் நடிகை என்ற பெயர் வந்துவிட்டது.

இனி அதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன்.

காமெடி, அம்மா மற்றும் குணசித்திர வேடங்களில் மட்டுமே நடிக்க உள்ளேன். தமிழில் இப்போது ‘நியூ’ படத்தில்நடித்து வருகிறேன். திருமணம் செய்து கொண்டால் என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களைப் பார்த்து எனது கணவன்டைவர்ஸ் செய்துவிட்டு ஓடி விடுவான் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil