»   »  ஷெரீனின் உற்சாகம்

ஷெரீனின் உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் இமல்டா மார்க்கோஸ் ஆகி வருகிறார் கண்ணழகி ஷெரீன்.

துள்ளுவதோ இளமையில் துள்ளிச் சென்ற ஷெரீன் இப்போது ஓய்ந்து போன அலையாக மாறியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் தனது அதிர்ஷ்டத்தைப் பரீட்சித்து தோல்வி அடைந்து விட்ட ஷெரீன் கையில் ஒரிரு படங்கள் மட்டுமே உள்ளன.

தமிழில் உற்சாகம் என்ற படத்தில் படு உற்சாகமாக நடித்து வருகிறார் ஷெரீன். பீமா படத்தில் விக்ரமுடன் ஆடிய குத்துப் பாட்டும் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம். தொடர்ந்து குத்துப் பாட்டுக்கு ஆடும் வாய்ப்பு வந்தால் அதைத் தவிர்க்க மாட்டேன் என்கிறார்.

சில படங்களிலும், பல விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் ஷெரீனுக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு வித்தியாசமான ஹாபி இருக்கிறதாம்.

அதாவது கண்ணில் பட்ட செருப்புளை காசு கொடுத்து வாங்கி விடுவாராம். சாதாரண செருப்பு முதல் விலை உயர்ந்த செருப்புகள் வரை எக்கச்சக்கமான செருப்புகள் ஷெரீன் வீட்டில் குவிந்து கிடக்கிறதாம்.

செருப்பு தவிர பெல்ட்டுகளும் ஷெரீனின் மனம் கவர்ந்த ஹாபி பொருட்களாம். சின்ன சின்னதாக வாங்க ஆரம்பித்து இப்போது 300க்கும் மேற்பட்ட பெல்ட்டுகளையும், 500க்கும் மேற்பட்ட பெல்ட்டுகளையும் ஸ்டாக் வைத்துள்ளாராம் ஷெரீன்.

பிலிப்பைன்ஸின் முன்னாள் அதிபர் மார்க்கோஸின் மனைவி இமெல்டாதான் இப்படி செருப்புகளாக வாங்கிக் குவித்தார். ஆனால் அவர் வைத்திருந்ததெல்லாம் தங்கம், வைரத்தால் ஆன காஸ்ட்லி செருப்புகள், ஷூக்கள். ஆனால் ஷெரீன் வைத்திருப்பது ஜாலி செருப்புகள்.

மகளுடன் முன்பு பிணக்கு கொண்டிருந்த ஷெரீனின் அம்மா யசோதா இப்போது சமரசமாகி விட்டாராம். படப்பிடிப்புக்கு ஷெரீனுடன் வரும் யசோதாம்மா, ஷெரீனா தனது ஹேண்டிகாமில் சுட்டபடியே உள்ளார்.

ஏன் இப்படி என்று கேட்டால், எனது மகளின் ஒவ்வொரு அசைவையும் நான் ரசிக்கணும், அதற்காகத்தான் இப்படி ஹேண்டிகேமில் சுட்டுக் கொள்கிறேன் என்கிறார் புன்னகையுடன்.

வித்தியாசமான அம்மா, வினோதமான மகள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil