»   »  திருப்தியான சிவாஜி .. சந்தோஷ ஷங்கர்

திருப்தியான சிவாஜி .. சந்தோஷ ஷங்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தில் ரஜினி போட்டுள்ள ஒரு கெட்டப்புக்கு எம்.ஜி.ஆர். என்று பெயர் வைத்துள்ளார்களாம். ரஜினிக்கு சிவாஜி, மிகப் பெரிய இமயப் படமாக இருக்கும் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

இதோ, இதோ என கூறப்பட்டு வந்த சிவாஜி ஒரு வழியாக ஜூன் 15ம் தேதி திரைக்கு தெறித்தோடி வருகிறது. ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் கூட ஆர்வத்தோடு இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் முதல் முறையாக சிவாஜி படம் பற்றிய நிறைய செய்திகளோடு வாய் திறந்துள்ளார் மெகா இயக்குநர் ஷங்கர்.

சிவாஜி படம் குறித்து நமக்காக அவர் கொஞ்சம் போல வாய் திறந்து பேசுகையில்,

இது ஒரு அசல் பொழுது போக்குப் படம், பக்கா என்டர்டெய்னராக இருக்கும். ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமாவை விரும்பும், ரசிக்கும் அனைவருக்கும் இந்தப் படம் மிகவும் பிடிக்கும், ரசிக்க வைக்கும்.

ரஜினி படங்களுக்கு ஒரு இமயம் போல சிவாஜி அமையும். சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வேலை பார்ப்பது சாதாரண காரியமல்ல. ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு அது நல்ல அனுபவமாக அமைந்தது. ரஜினி சாரின் ஒத்துழைப்புதான் அதற்குக் காரணம்.

ரஜினியுடன் ஷூட்டிங்கில் பங்கேற்ற ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து செய்தேன்.

ரஜினியின் கெட்டப், ஸ்டைல் குறித்து பலரும் கேட்கிறார்கள். இன்னும் 20 நாள்தானே, அதுவரை பொருத்திருங்களேன். படம் வந்த பிறகு உங்களுக்கே தெரியப் போகிறது.

சென்சார் போர்டின் கருத்துக்கள், கட்கள் குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ஷங்கர்.

சிவாஜியில், ரஜினி சில வித்தியாசமான கெட்டப்களிலும் வருகிறாராம். அதாவது எம்.ஜி.ஆர்., சிவாஜி போல கெட்டப்களில் வருகிறார். தெலுங்குப் பதிப்பில், என்.டி.ஆர்., சிரஞ்சீவி போல கெட்டப் போட்டுள்ளாராம்.

தெலுங்குப் படத்தை டப்பிங் படம் போன்ற உணர்வு வந்து விடக் கூடாது என்பதற்காக மெனக்கெட்டிருக்கிறாராம் ஷங்கர். சில காட்சிகளைக ஒரிஜினலாகவே தெலுங்குக்காக எடுத்தாராம்.

சிவாஜி குறித்து திருப்தியாக இருக்கிறீர்களா என்று கேட்டபோது, எனது படத்தில் எந்த ஒரு சீனும் வீணாக இருக்காது, எனக்குத் திருப்தி இல்லாமல் திரைக்கு வராது. அதில் சிவாஜியும் விதிவிலக்கில்லை, இப்படம் எனக்கு பரிபூரண திருப்தியைத் தந்துள்ளது என்றார் ஷங்கர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil