»   »  சிவாஜி-மனம் திறக்கும் ஷங்கர்

சிவாஜி-மனம் திறக்கும் ஷங்கர்

Subscribe to Oneindia Tamil

ஏவிஎம்மின் பிரமாண்ட தயாரிப்பான சிவாஜி வெளியாக இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஷங்கர் அளித்த பேட்டி:

சிவாஜி பெரிய வெற்றி பெறும் என்று எனக்கு தெரியும். ஆனால் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பது தெரியாது. சிவாஜி படத்தை பொருத்தவரை எல்லாமே புதுசாக இருக்கும்.

சிவாஜி ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தை பற்றிய பரபரப்பு அதிகாரித்து கொண்டே இருக்கிறது. எனவே வெற்றியின் அளவை தீர்மானமாக சொல்ல முடியவில்லை என்றாலும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதில் ரஜினி பல வேடங்களில் நடித்துள்ளாரா?

ரஜினி ஒரே ஒரு வேடத்தில் தான் நடிக்கிறார். ஆனால் கதைப்படி அவர் 3 விதமான தோற்றங்களில் வருவார். பாடல் காட்சிகள்ல் 13 விதமான தோற்றங்களில் வருவார்.

படத்தை ரஜினி பார்த்து விட்டாரா?

முதல் பிரதி தயாரான பின் அவர் முழு படத்தையும் பார்க்கவில்லை. ஆனால் டப்பிங் பேசும்போது படத்தை பார்த்தார். முழுமையான திருப்தி அடைந்தார். படம் சுப்பர் ஹிட் ஆகும் என்றார். படத்தின் முதல் பாதி படுவேகமாக இருக்கிறது. இரண்டாம் பாதி இன்னும் சூப்பராக இருக்கிறது என்றார்.

கதை கல்வி சம்மந்தப்பட்டதா?

சமுதாய அக்கறை உள்ள ஒரு மனிதனின் கதை இது. இந்த மண் மீது அக்கறை கொண்ட ஒருவரின் கதை. நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய நினைக்கிறார் ரஜினிகாந்த்.

அதற்கு நிறைய தடைகள் வருகிறது. மற்றவர்கள் என்றால் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கி போவார்கள். ஆனால் ரஜினிகாந்த் ஒதுக்கி போகாமால் நல்லது செய்ய முயன்று வெற்றி பெறுகிறார்.

ஸ்ரேயாவின் கேரக்டர் என்ன?

ஸ்ரேயா ஒரு மியூசிக் ஷாப்பில் வேலை செய்யும் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணின் பாத்திரத்தில் வருகிறார். ரஜினியும், ஸ்ரேயாவும் அறிமுகமானதுமே அவர்களுக்கிடையே காதல் வந்து விடுகிறது.

ஸ்ரேயா மாடர்ன் கேரக்டர்களுக்கு பொருந்துகிறார். குடும்ப பங்கான தோற்றத்திற்கும் பொருந்துகிறார். துடுக்குதனம், அமைதி, கோபம் ஆகிய எல்ல உணர்ச்சிகளும் அவருக்கு சுலபமாக வருகின்றன. ரஜினி என்ற சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடிக்கக் கூடிய அளவுக்கு கனமான கதாபாத்திரத்தை தாங்க கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. நன்றாக நடனமும் ஆடுகிறார்.

படத்தில் எத்தனை பாடல்கள், சண்டைகள்?

மொத்தம் 5 பாடல்களும், 5 பிரமாண்டமான சண்டை காட்சிகளும் உள்ளன.

உங்கள் அடுத்த படம்?

சிவாஜி ரிலீசாகி 2 மாதங்கள் கழித்து அடுத்த படம் பற்றி முடிவுக்கு வருவேன்.

பிறமொழி படங்களை இயக்கும் திட்டமுண்டா?

மற்ற மொழி படங்களை டைரக்ட் செய்ய வேண்டும் என்றும் இல்லை, செய்யக் கூடாது என்றும் இல்லை. எப்படி சூழ்நிலை அமைகிறதோ அதற்கு தகுந்த மாதிரி படம் செய்வேன். ஆனால் நான் ரொம் விரும்பி செய்ய ஆசைப்படுவது தமிழ் படம் தான்.

ஒவ்வோறு படம் முடிந்ததும் வெளிநாடு செய்வீர்களே. இப்போது எந்த நாட்டிற்கு செல்கிறீர்கள்?

அதுபற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதுகுறித்து முடிவு எடுப்பது என் மனைவியும், குழுந்தைகளும் தான் என்றார் ஷங்கர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil