»   »  விஜய் நடிக்க வந்தது ஆச்சரியமே.. ஷோபா சந்திரசேகர்

விஜய் நடிக்க வந்தது ஆச்சரியமே.. ஷோபா சந்திரசேகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்ஸ் ஆபிஸ், ரசிகர் வட்டம் இந்த இரண்டு விஷயங்களிலும் தல, தளபதியை அடித்துக் கொள்ள முடியாது.

அதிலும் இருவரின் படங்கள் வெளியாகும் சமயங்களில், ரசிகர்களுக்கிடையே இணையத்தில் நடக்கும் போர்களைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்நிலையில் விஜய்க்கு, அஜீத் போட்டியா? என்று விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிலிருந்து சில சுவாரசியமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

விஜய்

விஜய்

விஜய் இன்று பின்னணிப்பாடகர், நடிகர் என்று அசத்திக் கொண்டிருந்தாலும் அவரை முதன்முதலாக நாங்கள் நடிகராகத் தான் பார்த்தோம். மிகவும் அமைதியாக இருந்த விஜய் நடிக்க வந்தது ஆச்சரியமே, சினிமாவில் விஜய் நுழைய மாட்டார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். அப்படியே வந்தாலும் ஒரு டெக்னீஷியனாக விஜய்யின் சினிமா என்ட்ரி இருக்கும், என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது.

அண்ணாமலை

அண்ணாமலை

விஜய் தனது நடிப்பு ஆசையை வெளிப்படுத்தியபோது, ரஜினி நடிப்பில் வெளியான, 'அண்ணாமலை' வசனத்தை அவர் அப்பாவிடம் பேசிக் காண்பித்தார். ஆக்ஷன் ஹீரோவாக இருந்த விஜய்யை பேமிலி ஹீரோவாக மாற்றியதில் 'பூவே உனக்காக' படத்திற்கு முக்கிய பங்குண்டு. கமலா தியேட்டரில் அந்தப் படத்தை 21 முறை பார்த்திருக்கிறேன். 275 நாட்கள் ஓடிய படமென்பதால் எனக்கு தோன்றும் நேரங்களில் அந்தப் படத்தின் கிளைமாக்ஸ், காட்சியை பலமுறை பார்த்து ரசித்துள்ளேன்.

துப்பாக்கி

துப்பாக்கி

60 படங்கள் வரை விஜய் நடித்து விட்டார். விஜய்யின் எல்லா படங்களும் எனக்குப் பிடிக்கும் என்றாலும் குஷி, பூவே உனக்காக, துப்பாக்கி இந்த 3 படங்களும் என்னுடைய பேவரைட். குஷி படத்தை டிவியில் எப்போது போட்டாலும் பார்த்து விடுவேன். பூவே உனக்காக படத்துக்குப் பின் நான் அதிகமுறை பார்த்த படம் துப்பாக்கி. இதுவரை 50 தடவைக்கு மேல் துப்பாக்கியை பார்த்திருக்கிறேன்.

அஜீத் vs விஜய்

அஜீத் vs விஜய்

அஜீத்தை விஜய்க்கு போட்டியாக நான் பார்ப்பது கிடையாது. அஜித்துக்கு குழந்தை பிறந்தபோது கூட போய் பார்த்து விட்டு வந்தோம். அஜீத் நடித்த படங்களில் வாலி, காதல் கோட்டை, ஆசை மூன்றும் எனக்குப் பிடித்தமான படங்கள். குறிப்பா வாலி படம் ரொம்பப் பிடிக்கும்.

சிம்ரன்

சிம்ரன்

விஜய்க்கு சரியான ஜோடி சிம்ரன்தான் ஒன்ஸ்மோர், பிரியமானவளே ரெண்டு படமுமே ரொம்ப நல்லா இருக்கும். உதயா, ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே படங்களில் விஜய்-சிம்ரன் இணைந்து நடித்திருக்கின்றனர்.

ஆக்ஷன் காட்சிகள்

ஆக்ஷன் காட்சிகள்

விஜய் ஆக்ஷன் காட்சிகள் பண்ணும்போது எதுவுமே எங்களிடம் சொல்ல மாட்டார். அப்புறம் நாங்க கண்டுபிடிச்சு கேட்கும்போது அது ஒண்ணுமில்ல அப்படின்னு சொல்லிடுவார். குஷி படத்துல 'மொட்டு ஒன்று' பாடல் காட்சியில் விஜய் பண்ண பங்கி ஜம்ப் பார்த்து நான் பயந்துட்டேன். அதுபத்தி கேட்கறப்ப 'ஒண்ணும் இல்லமா அங்க வர்ற டூரிஸ்ட்ங்களே பண்றாங்க' அப்படின்னு கேஷுவலா சொன்னாரு.

ஒவ்வொருமுறை

ஒவ்வொருமுறை படங்களில் பாடி முடித்த பின்னும், என்னைக் காரில் கூட்டிப்போய் வாக்மேன்ல அந்தப் பாட்டை போட்டுக் காட்டுவாரு.

சுதியோட பாடியிருக்கிறேனா இல்லை என்றால் சொல்லுங்கள் நான் மறுபடியும் சென்று அந்தப் பாடலை பாடிவிட்டு வருகிறேன் என்று என்னிடம் கருத்துக் கேட்பார்.

இவ்வாறு விஜய் குறித்த ஷோபா சந்திரசேகர் தன்னுடைய பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

English summary
Vijay's Mother Shoba Chandrasekhar Shared some Things about Vijay,Ajith Competition in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil