»   »  சிவாஜி விசிட்டிங் கார்ட் ..ஷ்ரியா

சிவாஜி விசிட்டிங் கார்ட் ..ஷ்ரியா

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படம் எனக்கு விசிட்டிங் கார்டு மாதிரி என்று புளகாங்கிதப்படுகிறார் ஷ்ரியா.

எல்லோருக்கும் கிடைக்காத அரும் பெரும் வாய்ப்பான ரஜினியுடன் ஜோடி போட்டு அசத்தியுள்ள பின்னணியில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார் ஷ்ரியா. சிவாஜி அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

தனது திரையுலக வாழ்க்கையில் ரஜினியுடன் நடிக்க நேர்ந்தது எதிர்பாராத ஒரு ஜாக்பாட் என்று சந்தோஷத்துடன் கூறினார் ஷ்ரியா.

ரஜினி சாருடன் ஒரு சீனிலாவது நடித்து விட வேண்டும் என்பதே எல்லோருடைய கனவாக இருக்கும். ஆனால் கடவுள் எனக்கு பம்பர் பரிசே கொடுத்து, ரஜினி சாரின் ஜோடியாக்கி விட்டார்.

இப்போது கூட ரஜினி சாருடன் இணைந்து நடித்ததை என்னால் நம்பவே முடியவில்லை. எனது வாழ்க்கை முழுவதும் இந்த அனுபவத்தை நான் மறக்க மாட்டேன்.

ரஜினி சார் சிம்ப்ளி சூப்பர்ப். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது.

சிவாஜி படத்தால் எனது கேரியர் உயர்ந்துள்ளது. புதிய உயரத்தை எட்டியுள்ளது. தமிழில் எனக்கு சிவாஜி ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி.

சிவாஜிக்குப் பிறகு நான் இந்தியில் ஆவாராபான் என்ற படத்தில் நடித்துள்ளேன். அதில் சில காட்சிகளில் கிளாமராக நடித்துள்ளேன். இருப்பினும் அவை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்காது.

என்னை செக்ஸி ஃபிகர் என்று கூறுவதை நான் வரவேற்கிறேன். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். செக்ஸியான ரோல்களில் நடிப்பதை நான் வெறுக்கவில்லை. அதேசமயம், அதில் ஒரு நாகரீகம் இருக்கும். ரசனை இருக்கும்.

வெறுமனே கிளாமர் மட்டும் காட்டுவதால் ஒரு நடிகை பெரிய ஆளாகி விட முடியாது. கூடவே நளினம், நடிப்பும் இருக்கவ வேண்டும். அது என்னிடம் இருப்பதாக உணர்கிறேன். எனவே வெறும் கிளாமர் ரோல்களில் மட்டும் நடிக்க மாட்டேன் என்றார் ஷ்ரியா.

தயாரிப்பாளர்களுக்கு சிக்னல் கொடுத்து விட்டார் ஷ்ரியா, உரிய முறையில் எடுத்துக் கொள்ள வேண்டியது இனி அவர்கள் பாடு.

Please Wait while comments are loading...