»   »  மலையாளத்தில் ஷ்ரியா

மலையாளத்தில் ஷ்ரியா

Subscribe to Oneindia Tamil

சிவாஜி வெற்றியால் சிலிர்த்துப் போயிருக்கும் ஷ்ரியா, அடுத்து மலையாளத்தின் பக்கம் தனது காந்தக் கண்களைத் திருப்பியுள்ளார்.

சிவாஜி வெளியாவற்கு முன்பு வரை ராசியில்லாத ராணிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர் ஷ்ரியா. அவருடைய மழை படம் மட்டும் சிலாகித்துப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் சிவாஜியில் நடித்த பிறகு அவரது ரேஞ்சே மாறிப் போய் விட்டது.

அத்தனை பேரும் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நாயகிகள் வரிசையில் சேர்ந்துள்ளார் ஷ்ரியா. பிசிறில்லாத நடிப்பு, செக்ஸி தோற்றம், சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டவர் ஆகிய அம்சங்கள் ஷ்ரியாவை இன்று டாப் ஸ்லாட்டில் உட்கார வைத்துள்ளது.

இந்த சூட்டோடு இந்தியில் ஆவாராபான் படம் மூலம் அங்கும் அறிமுகமாகி அலையை பரவ விட்டுள்ளார் ஷ்ரியா. தமிழிலும் படு பிசியாக உள்ளார். இந்த நிலையில் மலையாளத்திலும் இப்போது நுழைய தீர்மானித்துள்ளார்.

படு குறைச்சலான சம்பளம் கொடுக்கும் திரைத்துறை என்ற போதிலும் கூட மலையாளத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம் ஷ்ரியா. இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு திருப்திகரமான ரோல் கிடைத்தால் மலையாளத்தில் நடிப்பேன்.

மலையாளப் படவுலகம் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் நடிப்பைப் பார்த்து நான் அசந்துள்ளேன்.

எனக்குப் பிடித்த மலையாளப் படங்களில் மோகன்லால் நடித்த ஸ்படிகமும் ஒன்று. அதேபோல தமிழில் இருவர் படத்தில் மோகன்லாலின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது.

மலையாள இயக்குநர்களிடமிருந்து எனக்கு நல்ல வாய்ப்பு வருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன் என்றார்.

அடுத்து ஹ்ருத்திக் ரோஷனுடன் ஜோடி சேர்ந்து இந்தியில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ஷ்ரியா. தற்போது பாபி தியோலுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி, அஜீத்துடன் ஒரு படம் என படு பிசியாக உள்ளார் ஷ்ரியா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil