அப்பாவின் அந்தரங்க லவ்.. ஸ்ருதிஹாசனை கிளறினால் பல விஷயம் வெளியே வரும் போல!

சென்னை: பிரபல பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது அப்பாவிற்கு காதல், அவரை இம்ப்ரஸ் செய்வதற்காக தான் அப்பா பெங்காலி கற்றுக்கொண்டாரே தவிர படத்திற்காக இல்லை என ஸ்ருதி ஹாசன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிஸியாக நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், பட வாய்ப்பு குறைந்ததும், காதலருடன் மும்பையில் செட்டில் ஆனார். அதன்பிறகு தமிழ் திரைப்படங்களில் அவர் தலைகாட்டாமலே இருந்தார். அவர் கடைசியாக விஜய்சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் தோல்வியடைந்ததால் தெலுங்கு பக்கம் சென்ற ஸ்ருதிஹாசன், சலார், வீரா சிம்ஹா ரெட்டி என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

Shruti Haasan Kamal haasan Aparna
Photo Credit:

நடிகை ஸ்ருதி ஹாசன்: தற்போது ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படத்தில் சத்யராஜின் மகளாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூலி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சத்யராஜும், ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டு பல விஷயம் குறித்து பேசினார்கள். அப்போது சத்யராஜ் , உனக்கும் அப்பாவை போல பல மொழிகள் தெரியும், அவர் எந்த மொழி என்றாலும் உடனே கற்றுக் கொள்வார், பெங்காலி திரைப்படம் ஒன்றில் கூட நடித்து இருக்கிறார் என்று கேட்டார்.

அந்த நடிகை மீது காதல்: அப்போது, குறுக்கிட்ட ஸ்ருதிஹாசன், அவர் பெங்காலி படத்தில் நடித்தது, பெங்காலி கற்றுக் கொண்டது எல்லாம் உண்மைதான். ஆனால், அவர் எதற்காக கற்றுக்கொண்டார் என தெரியுமா... பெங்காலி நடிகையான அபர்ணா சென் மீது அப்பாவுக்கு காதல், அவரை இம்ப்ரஸ் செய்வதற்காக தான் அப்பா பெங்காலி கற்றுக்கொண்டாரே தவிர படத்திற்காக எல்லாம் அவர் பெங்காலி கற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் ஹேராம் படத்தில், ராணி முகர்ஜியின் பெயர் அபர்ணா என வைத்தார். இப்போ புரியுதா கனெக்சன் என கலகலப்பாக கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் ஸ்ருதி ஹாசனை கிண்டினால், என்னும் கமலஹாசன் பற்றிய பல அந்தரங்க காதல் விஷயம் வெளியே வரும் போலயே என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X