Just In
- 8 min ago
அய்யோ.. இன்னையோடு முடியப் போகுதா.. சோகத்தில் ரசிகர்கள்.. குக் வித் கோமாளி 2 கிராண்ட் ஃபினாலே!
- 47 min ago
‘’கர்ணன்’’ ரொம்ப நல்லா இருக்கு..வீட்டிற்கே சென்று பாராட்டிய விக்ரம்
- 1 hr ago
அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா? என்ன செய்ய போகிறார் விஜய்?
- 2 hrs ago
போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !
Don't Miss!
- News
மராட்டியத்தில் 144 தடை, திடீர் அச்சம்.. ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்.. ரயில்வே துறை கோரிக்கை
- Automobiles
செம பவர்ஃபுல் எஞ்சின் தேர்வுகள், சூப்பரான வசதிகள்... பிரிமீயம் எஸ்யூவிகளை மிரட்டும் புதிய ஸ்கோடா கோடியாக்!
- Sports
இனிமே தூக்கணும்னா.. தோனியத்தான் தூக்கணும்.. பலருக்கு போடப்பட்ட "ஸ்கெட்ச்'.. கவலையில் சிஎஸ்கே டீம்!
- Finance
ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் ரூ.300 கோடி வசூல்.. வழிகாட்டுதலை மீறிய SBI!
- Lifestyle
12 ராசிகளுக்குமான பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்!
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குட்டி பிரேக், உடல்நலப் பிரச்சனை, விமர்சனம்: மனம் திறந்த ஸ்ருதி ஹாஸன்
சென்னை: தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதை தான் கண்டுகொள்வது இல்லை என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன்.
ஸ்ருதி ஹாஸன் ஒரு குட்டி பிரேக்கிற்கு பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் அவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து லாபம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்தபோது அவர் குண்டாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்கள்.
இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி ஹாஸன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

விமர்சனம்
சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது என்னை பாதிப்பது இல்லை. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு அது பெரிதாக தெரியவில்லை. அண்மையில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் ஸ்ருதிக்கு திருமணம், அவர் குண்டாகிவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். அப்பொழுது எனக்கு கஷ்டமாக இருந்தது.

10 ஆண்டுகள்
எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பது எனக்கு தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் நான் எனக்காக நேரம் ஒதுக்கவில்லை, என்னை கவனித்துக் கொள்ளவில்லை. எனக்கு அன்பு, அமைதி தேவைப்பட்டது. விமர்சனங்கள் என்னை பாதிப்பது இல்லை. ஏனென்றால் அனைவருக்கும் அவரவர் வாழ்க்கை மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொண்டுள்ளேன் என்கிறார் ஸ்ருதி.

தெலுங்கு படம்
பிரேக்கிற்கு பிறகு நடிக்க வந்த வேகத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்களில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாஸன். பாலிவுட்டில் நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் அவர். இது தவிர அவர் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஸ்ருதி ஹாஸன்
அமெரிக்க தொலைக்காட்சி தொடரான டிரெட்ஸ்டோனில் சிஐஏ ஏஜெண்டாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஸ்ருதி ஹாஸன். அந்த தொடரில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வசதியாக பயிற்சி பெற்று வருகிறார் அவர். ஸ்ருதி ஹாலிவுட் தொடரில் நடிப்பதை நினைத்து அவரை விட அவரின் ரசிகர்கள் தான் அதிகம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப் சீரீஸ்களில் நடிக்கவும் ஸ்ருதி ஹாஸனுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் சில வாய்ப்புகளை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் வெப் சீரீஸ்களில் நடிக்கும் ஆசை அவருக்கு உள்ளது.