»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

குப்புற கவுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் தப்பிப்பது எப்படி? (மீசையே வச்சுக்கக் கூடாது என்று ஏடாகூடாமாய் பதில் தரக் கூடாது).சிலம்பரசனிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.

காதல் அழிவதில்லை என்று தகர டப்பா படம் ஒன்றை இவரை வைத்து இவரது அப்பா டி.ராஜேந்தர் எடுத்தார். படத்தை 100 நாட்களுக்குதனது வசனங்களைப் போலவே ரப்பராக இழுத்து இழுத்து ஓட்டினார். வசூல்ல பிக்கிறான்யா சிம்பு... அதையும் நீ நம்பு.. என்ற ரீதியில்பத்திரிக்கைகளில் சொந்த காசில் விளம்பரமும் தந்தார்.

விளம்பரம் தான் மிஞ்சியது. வினியோகஸ்தர்களுக்கு பெரிய லாபம் ஏதும் இல்லை.

இந் நிலையில் தான் இப்போது சிலம்புவின் தம் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து சிலம்பரசன் கூறியதாவது:

என் முதல் படமான காதல் அழிவதில்லை தோல்விப் படம்னு சொல்றீங்க. ஒன்ன நீங்க புரிஞ்சுக்கனும். வில்லன், பகவதி, ரமணாபோன்ற பெரிய படங்களுடன் சேர்ந்து என் படமும் வெளியாச்சு. 100 நாள் ஓடிச்சு. மொத்த வசூல இந்த 4 படங்களும் ஈக்வலாபிரிச்சுக்கிச்சு. ஆனால், என் படம் ஓடலைன்னு மக்கள் நினைச்சுக்கிட்டாங்க. என்னைப் பொறுத்தவரை அது ஹிட் படம் தான். (இப்போதுமீண்டும் முதல் பாராவில் உள்ள கேள்வியை படிக்கவும்)

இப்போ வந்துருக்கிற தம் படம் தெலுங்கு, கன்னடத்துல பெரிய வசூல் பார்த்த படம். இதனால் தமிழிலும் ஓடும்னு ஆரம்பத்திலேயேநம்பிக்கை இருந்தது. அதுல ஹீரோவோட ரெளடி காரெக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நான் ரொம்ப ரசிச்சு நடிச்ச காரெக்டர் அது.

என் நம்பிக்கை வீண் போகலை. படம் சூப்பர் ஹிட்டாகி இருக்கு (படம் வெளியாகி ஒரு வாரம் ஆகவில்லை என்பது முக்கியமானவிஷயம்). தமிழ் சினிமா மோசமான கால கட்டத்துல இருக்கிறப்போ என் படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியா இருக்கு.

இந்தப் படம் ஆக்ஷன் படம் ஆகிப்போச்சு. அதுக்காக தொடர்ந்து அப்படிப்பட்ட கேரக்டர்கள்லயே நடிக்க மாட்டேன். எந்தப் படமாகஇருந்தாலும் கதையை வைத்து தான் முடிவு செய்வேன் என்றார்.

நீங்க ரஜினிய ஓவரா காப்பி அடிக்கிறீங்களே?

ஒரு விஷயத்தை கவனிக்கனும். நான் ரஜினியோட கிரேட் பேன். எனக்கு ஜேக்கி சானும் பிடிக்கும். அவங்களைப் பார்த்து நான் ரொம்பஆச்சியரியப்படுறேன்.

உங்களுக்கு ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு லவ்வுனு சொல்றாங்களே?

அது ஒரு புரளி. நானும் அவங்களும் ஒண்ணா படிச்சோம். என் பிறந்த நாளை பிரண்ட்சோட ஒரு ஹோட்டல்ல நான் கொண்டாடிட்டுஇருந்தேன். அப்போ எதார்தமா ஐஸ்வர்யாவும் அங்கே வந்தாங்க. உடனே என் பார்ட்டியிலே கலந்துக்கக் கூப்பிட்டேன். உடனேஅவங்களும் பார்ட்டியில கலந்துக்கிட்டாங்க.

அவ்வளவு தான். இதை வச்சு கை, கால் எல்லாம் சேர்த்து பெரிய புரளியை கிளப்பிட்டாங்க. எனக்கு ஐஸ்வர்யாவுக்கும் லவ் அது இதுன்னு.ரஜினி அங்கிள் எங்க குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமானவர். இதுக்கு மேல இதுல ஒன்னுமே இல்ல என்றார்.

அடுத்த படம்?

அடுத்து படம் அலை. இதை விக்ரம்னு ஒரு புது டைரக்டர் இயக்குறார். வேற சில படங்கள் பண்ணவும் பேசிக்கிட்டு இருக்கேன் என்றார்சிலம்பரசன்.

தம் படத்தில் இவர் ஏதோ தாவூத் இப்ராகிம் லெவல் தாதா மாதிரி தன்னை ஓவராக தூக்கி விட்டுக் கொண்டுள்ளது தான் அருவருப்பாகஉள்ளது.

கையில் தாமரைக்கனி மாதிரி பட்டை மோதிரம், கண் மேல் இமையில் வெஸ்ட்ர்ன் வாலிபர்கள் மாதிரி ஒரு தோடு, நன்றாக சாப்பிட்டுஜிம்மில் ஏற்றப்பட்ட பாடி, சல்மான்கான் மாதிரி அரை நிர்வாணம், வில்லன்களை இவர் அடிக்க நடந்து வந்தால் அட்ரா.. அட்ரா.. அட்ரா..என்று டி.டி.எஸ்.சவுண்டு, டைட்டிலில் லிட்டில் சூப்பர் ஸ்டார்.. லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பேக்கிரவுண்ட் புலம்பல் சத்தம்.

இதையெல்லாம் பார்க்கும்போது இவர் தன்னைப் பற்றி ரொம்ப ஓவராகவே எடை போட்டுக் கொண்டுள்ளது மட்டும் தெளிவாகவேதெரிகிறது.

படத்தை பார்க்கும்போதே எல்லோரும் சிரிக்கிறார்கள். நகைச்சுவைக்காக அல்ல. படத்தில் உள்ள கோமாளித்தனங்களுக்காக... பேசாமல்சிலம்பரசனின் பெயரை அலம்பல் அரசன் அல்லது சலம்பல் அரசன் என்று மாற்றிவிடலாம் போலிருக்கிறது. நடிப்பைத் தவிர வேறுஎல்லாமே சிலம்பரசனுக்கு நன்றாக வருகிறது.

டான்ஸ் ஆடினால், விரலை சுண்டும்போது (மியூசிக் டைரக்டர் உதவியால்) விஸ்.. விஸ்.. சத்தம் வந்தால் அவர் தான் தமிழ் சினிமாவில்ஹீரோ என்று ஆகிவிட்டது.

தமிழ் சினிமாவின் தம்மை (மூச்சை) நிறுத்த வந்த இன்னொரு படம் இது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil