twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை பார்த்தவன் – இயக்குநர் சுரேஷ் சண்முகம் பேட்டி!

    |

    சென்னை: சில்லுனு ஒரு காதல் சீரியலை இயக்கி வரும் இயக்குநர் சுரேஷ் சண்முகம் அளித்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.

    கலர்ஸ் தமிழில் கலக்கி வரும் சீரியலாக சில்லுனு ஒரு காதல் இருக்கிறது.

    நாயகன் சமீர் மற்றும் நாயகி தர்ஷினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சூர்யா மற்றும் கயல் என அவர்களின் கதாபாத்திர பெயர்களாலேயே பலரும் அவர்களை ரசித்து வருகின்றனர்.

    கல்யாண ஷூட்டிங்

    கல்யாண ஷூட்டிங்

    சமீபத்தில் சில்லுனு ஒரு காதல் சீரியலுக்காக பிரம்மாண்ட கல்யாண ஷுட்டிங் நடைபெற்றது. அங்கே பரபரப்பாக ஷூட் நடத்திக் கொண்டிருந்த இயக்குநர் சுரேஷ் சண்முகத்தை மடக்கி பிடிக்க அவரும் ஏகப்பட்ட விஷயங்களையும் பல டென்ஷன்களுக்கு இடையே கூறியுள்ளார்.

    பாரதிராஜா பட்டறை

    பாரதிராஜா பட்டறை

    மிர்ச்சி செந்தில் நடிப்பில் வெளியான மதுரை சீரியலில் உதவி இயக்குநராக அறிமுகமான இவர், பாரதிராஜா, ராசு மாதவன் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமாவை கற்றவர்.

    சீமான் நிகழ்ச்சி

    சீமான் நிகழ்ச்சி

    தந்தி டிவியில் சீமான் நடத்திய மக்கள் முன்னால் தொடரையும் இவர் தான் இயக்கியதாக கூறியுள்ளார். அந்த ஷோவை இயக்கும் போது ஏகப்பட்ட அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக கூறியுள்ளார்.

    டிஆர்பியில் முதலிடம்

    டிஆர்பியில் முதலிடம்

    ஆரம்பத்தில் பலரும் அதிக டேக்குகள் வாங்கினார்கள், ஆனால், தற்போது எல்லாருமே சிங்கிள் டேக் ஆக்டராக மாறி விட்டனர். வெறும் 30 எபிசோடுகளே முடிந்துள்ள இந்த சீரியல் தற்போது ரசிகர்களின் ஹாட் ஃபேவரைட்டாக மாறி டிஆர்பியில் முதலிடம் எல்லாம் பிடித்தது செம சந்தோஷத்தை தருகிறது என்று செம கூலாக பேசும் வீடியோவை கண்டு ரசியுங்கள்!

    English summary
    Sillunu Oru Kadhal serial director Suresh Shanmugam interview out now in Tamil Filmibeat. He talks lot about his career and Sillunu Oru Kadhal serial making experience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X