»   »  கெட்டவன் சிம்பு!

கெட்டவன் சிம்பு!

Subscribe to Oneindia Tamil

சிம்பு புதிய அவதாரத்தில் அசத்தும் கெட்டவன் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

முற்றிலும் வித்தியாசமான ஸ்கிரிப்டுடன் சிம்பு புத்தம் புதிய கெட்டப் பூண்டு, கெட்டவன் மூலம் கோலிவுட்டைக் கலக்க வருகிறார்.

அதிரடி, ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய வித்தியாசமான கதை கெட்டவன். வல்லவன் படத்தில் சிம்புவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சி.டி.நந்து என்கிற நந்தகுமார்தான் இப்படத்தை இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனம் சிம்பு. இயக்கம் மேற்பார்வையும் கூட சிம்புதான் என்கிறார்கள்.

படத்தின் ஷூட்டிங் தொடங்கி விட்டது. சிம்புவுக்கு ஜோடியாக எஸ்.எஸ். மியூசிக் அழகிய தொகுப்பாளினி லேகா வாஷிங்டன் நடிக்கிறார். நமீதாவும் இருக்கிறார். இரு பெரும் அழகிய கோபுரங்களும், நியூயார்க் நகர இரட்டை கோபுரம் போல கெட்டவன் படத்தை தூக்கி நிறுத்தும் கிளாமர் தூண்களாக இருப்பார்கள் என்று நம்பலாம்.

படத்தில் காமெடி பகுதி படு கலாய்ப்பாக இருக்கும் என்று நம்பலாம். லொள்ளு சபா சந்தானம், சென்னை 600028 படத்தில் காமெடியில் கலக்கிய கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் ஆகியோர் புதுக் கூட்டணி அமைத்து வயிறுகளைப் பதம் பார்க்கவுள்ளனர்.

கெட்டவன் குறித்து சிம்பு கூறுகையில், கோலிவுட்டில் கெட்டவன் டிரண்ட் செட்டராக அமையும். ஒரு கிரியேட்டராக, நடிகராக இந்தப் படத்தை எனது கனவுப் படமாக நான் கருதுகிறேன்.

இது ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. எனது சொந்த வலிகளிலிருந்தும் பல காட்சிகளைப் புனைந்துள்ளேன்.

காதலில் பெண்கள் எவ்வளவு சுயநலமாக இருக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தில் சொல்லவுள்ளேன். பெண்களை நெகட்டிவானவர்களாக காட்டுவதில் பலரும் பயப்படுவார்கள், தயங்குவார்கள்.

அழுதே தாங்கள் செய்யும் தவறுகளை மறைத்து விடுபவர்கள் பெண்கள். ஆனால் ஒரு ஆணின் மனது படும் பாடு, அவன் படும் வலியை பெண்கள் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

வல்லவனில் இப்படி ஒரு கதையைத்தான் எடுத்தேன், வெற்றியும் பெற்றேன். ஆனால் கெட்டவன் இன்னும் வித்தியாசமாக இருக்கும், காதலர்களுக்கான படம் இது.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று முகங்கள் உண்டு என்று கமல் சார் ஒரு முறை கூறினார். வெளியுலகம் பார்ப்பது முதல் முகம். தன்னைத் தானே பார்த்துக் கொள்வது, அறிந்து கொள்வது 2வது முகம். ஆனால் 3வதாக உள்ள முகம்தான் அந்த மனிதனின் உண்மையான முகம்.

அந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் கெட்டவன் கதையை உருவாக்கியுள்ளேன் என்றார் சிம்பு.

யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைக்கிறார். தீபாவளிக்குப் படத்தைத் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

சொந்த வலின்னா நயன்தாரா சமாச்சாரம் தானே சிம்பு சார்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil