»   »  விஜய்யை நான் எப்படி அழைப்பது, அவர் அழைத்தால் நிச்சயம் ஆடுவேன்: சிம்பு

விஜய்யை நான் எப்படி அழைப்பது, அவர் அழைத்தால் நிச்சயம் ஆடுவேன்: சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் அழைத்தால் அவர் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவேன் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு ரசிகர்களுடன் ட்விட்டர் மூலம் உரையாடினார். ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதனால் #AskVaalu என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது.

ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளும், சிம்புவின் பதிலும்,

விஜய்

விஜய்

உங்கள் படத்தில் நடனம் ஆடுமாறு விஜய்யிடம் கேட்பீர்களா? என்ற கேள்விக்கு சிம்பு கூறுகையில், என் படத்தில் ஆடுமாறு அவரை கேட்பது நியாயம் இல்லை. ஆனால் அவர் அழைத்தால் நிச்சயம் அவர் படத்தில் நான் ஆடுவேன் என்றார்.

அஜீத்

அஜீத்

இது நம்ம ஆளு படம் எப்பொழுது ரிலீஸாகும் என்ற கேள்விக்கு, கடவுள் அருளால் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகும். தல படம் வரவில்லை என்றால் இது தீபாவளி விருந்தாக வரும் என்றார் சிம்பு.

வேட்டை மன்னன்

வேட்டை மன்னன்

வேட்டை மன்னன் படம் என்னாச்சு என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு, வேட்டை மன்னன் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், அது குறித்து ஏதேனும் புதிய தகவல் கிடைத்தால் தெரிவிப்பதாகவும் சிம்பு கூறினார்.

நடிகர் சங்க தேர்தல்

நடிகர் சங்க தேர்தல்

பரபரப்பாக பேசப்படும் நடிகர் சங்க தேர்தல் பற்றி ரசிகர் கேட்டதற்கு, நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம். அனைத்தும் விரைவில் சரியாகிவிடும் என்றார் சிம்பு.

தனுஷ் படம்

தனுஷ் படம்

தனுஷ் நடித்ததில் சிம்புவுக்கு பிடித்த படம் பற்றி கேட்டதற்கு, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆடுகளம் மற்றும் சில படங்கள் பிடிக்கும் என்றார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அவர் மிகவும் இனிமையானவர், அவருக்கு அனைத்தும் நல்லதாக நடக்க வாழ்த்துகிறேன் என்று சிம்பு தெரிவித்தார்.

முருகதாஸ்

முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸ் அல்லது பாலா, இந்த இருவரில் யார் இயக்கத்தில் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, முருகதாஸ் தான், பாலா சார் என்னை தவறாக நினைக்க மாட்டார் என்று எனக்கு தெரியும் என்று பதில் அளித்தார்.

English summary
Simbu had a great time chatting with his fans on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil