»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

வெளிப்புறப்படப்பிடிப்பில் இருந்து அப்பொழுதுதான் வந்திருந்தார் சிம்ரன். களைப்பின்றி சிரித்த முகத்துடன் சந்தோஷத்தோடு பேச ஆரம்பித்தார்.

பஞ்சாபிப் பெண்ணான என்னை தமிழ் மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டதற்காக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ்மொழிமீது எனக்கு பற்றுதல் ஏற்பட இதுவும் ஒரு காரணம். என்னிடம் தமிழிலேயே கேள்விகள் கேளுங்கள். நானும் தமிழிலேயே பதிலளிக்கிறேன்என்று நம்மை அதிர்ச்சியடையவைத்தார்.

சிம்ரன்.பேச்சு சற்று மழலையாக இருந்தாலும் சிம்ரனின் தமிழ் இனிக்கவே செய்கிறது.

இனி பேட்டி:

ஏன் இப்படிஇளைத்துப்போயிருக்கிறீர்கள்? எங்கள் ஊர் ரசிகர்களுக்கு கொஞ்சம் கொளுக் மொழுக் என்று கண்களுக்கு நிறைவாக இருப்பதையேவிரும்புவார்கள்.

அட, ரொம்ப மெலிஞ்சு போயிட்டேனா என்ன? இந்த நைட்டியில் பார்ப்பதால் அப்படி தெரிகிறேன் என்று நினைக்கிறேன். இந்தியில் அமிதாப்பச்சன்கார்பரேஷன் தயாரித்த "தேரே மேரே ஷப்னே படத்துக்குப் பின், நீண்ட இடைவெளிக்குப்பிறகு அனாரி நம்பர் ஒன் இந்திப் படத்திற்காக மும்பை போனேன்.

மும்பை பட உலகில் மெலிவாக இருப்பதைத்தான் விரும்புவார்கள் என்பதால், அங்கே தங்கி இருந்த பதினைந்து நாட்களும் உணவுக் கட்டுப்பாடு செய்துஎடையைக் குறைத்தேன்.

ஒரே ஒரு விஷயம் என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு முறை உணவுக் கட்டுப்பாடு என்று சாப்பாட்டை குறைத்து பழகிவிட்டால் அப்புறம்தாறுமாறாக சாப்பிடமுடியவில்லை.

உடலைக் குறைக்கிறேன் என்று சிலர் உடல் அழகைக்கெடுத்துக் கொள்வார்கள். சோர்வாக பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விடும். நடிகைகளுக்குஉடல் தானே முக்கியம். களைப்பாக காணப்படுகிறீர்கள்?

உங்கள் அட்வைஸூக்கு நன்றி, சரி பண்ணிக்கொள்கிறேன்.

படத்திற்கு படம் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே செல்கிறீர்களாமே?

எனக்கு நியாயமாகப்படுவதைக் கேட்கிறேன். சினிமா என்பது கூட்டுத் தொழில் தான். என்றாலும், என்னால் படம் வெற்றி பெறுகிறதுஎன்கிற பொழுது என் உழைப்புக்கு அதிக சம்பளம் தருவதில் தவறு இல்லையே.

சிம்ரனுக்காக படம் ஓடுகிறது. நான் நடித்த துள்ளித் திரிந்த காலம் படம் பெரிய வெற்றி படம். சமீபத்தில் நான் நடித்த பார்த்தேன் ரசித்தேன் படம்வெற்றிப் படம். இந்த நிலையில் எனக்கு நியாயமான சம்பளத்தைத்தான் நான் பெறுகிறேன்.

கால்ஷீட்களில் ஏகப்பட்ட குளறுபடிகள் செய்வதாகச் சொல்கிறார்கள்? உங்களைப் பற்றி பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்றுதெரியுமா?

ம்ம். எனக்கும் தெரியத்தான் செய்கிறது. அதை முடிந்தளவு சரி செய்து வருகிறேன். ஆரம்பத்தில் ஒரு மொழியில் நடித்தேன்.

என் மானேஜராக இருந்தவர் ஏமாற்றிவிட்டார். மானேஜர் சரியில்லை என்றவுடன் நானே என்னுடைய கால்ஷீட்களை கவனிக்க ஆரம்பித்தேன்.இப்பொழுது புதிய மானேஜர் வந்துவிட்டார்.

தெலுங்கில் முன்னனி நடிகையாக நல்ல வாய்ப்புக்கிடைத்தது. அங்கே மூன்று படங்களில் நடிக்கிறேன். அது போலவே தமிழிலும் நான்கு படங்கள் கமிட்பண்ணிவிட்டேன்.

ஆரம்பத்தில் அட்வான்ஸை பிடியுங்கள் அப்புறம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம் என்பார்கள். தவிர்க முடியாமல் ஏற்றுக்கொள்கிறேன். பின்புஅனைவருமே ஒரே நேரத்தில் தேதி கேட்பார்கள். குழப்பம் தான் ஏற்படும்.

தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னனி இடத்துக்கு வந்து விட்டீர்கள். ஒரு படத்தில் நீங்கள் நடிப்பதை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

தயாரிப்பாளர்கள் யார்? அவர் பின்னனி என்ன? எத்தனை படம் எடுத்தவர், படம் எடுத்தால் ரீலீஸ் செய்வாரா? என்பதைப் பார்ப்பேன். என் சம்பளம்எல்லாம் ஒத்துவந்தால் சொன்ன தேதியில் கதை கேட்பேன்.

ஹீரோ யார், டைரக்டர் யார் என்பதெல்லாம் கேட்காமல் படங்கள் ஒப்புக்கொண்ட காலம் ஒன்று உண்டு. இப்பொழுது எல்லாமே தெரிந்து கொண்டுதான் படங்களை ஒப்புக்கொள்கிறேன்.

நீங்கள் இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டீர்கள் என்று ஒரு செய்தி வருகிறதே?

அப்படியெல்லாம் இல்லை. இன்று சினிமாவில் கவர்ச்சி தானே மேலோங்கியிருக்கிறது. அதற்காக வெளிச்சம் போட்டுக் கவர்ச்சி காட்டமுடியாது.

அளவுக்கு மீறிய கவர்ச்சி வெறுப்படையச் செய்து விடும். மேலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து இப்பொழுது நடிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

பாடல் காட்சிகளில் தான் மேக்ஸிமம் கவர்ச்சியை வைத்துவிடுகிறார்களே. கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியை குறைத்துக்கொள்ளவும்ஆரம்பித்திருக்கிறேன்.

உங்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்ட ஆரம்பித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

நான்சென்ஸ். இந்தமாதிரி விஷயங்கள் எனக்கு பிடிக்காது. ரசிப்புத்தன்மையை வெளிக்காட்டுவதற்கு இப்படிக்கூடவா செய்வார்கள் நம்பவே முடியவில்லை.

ரசிகர்களை என் படங்களை பாருங்கள், ரசியுங்கள் அதற்குமேல் ஏதும் வேண்டாம். தயவு செய்து திருட்டு வீடியோ, விசிடியில் பார்க்காதீர்கள். கோயில்கட்டுவது கும்பிடுவது எல்லாம் முட்டாள் தனம் இது தான் ரசிகர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள்.

வாழ்க்கையை சந்தோஷமாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். குழப்பிக் கொள்ளாதீர்கள்.

டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரத்துக்கும் உங்களுக்கும் காதல் திருமணம் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றதே?

இந்த கேள்விக்கு எத்தனையோ முறை, பல விதங்களில் பதில் சொல்லியாயிற்று. இன்னும் இந்த கேள்வி ஓய்ந்த பாடில்லை.

நானும், ராஜூ சுந்தரம் நல்ல நண்பர்கள். நட்பு என்பது வேறு , காதல் என்பது வேறு. நாங்கள் இருவரும் நண்பர்கள். ராஜூ சுந்தரம் நல்ல டான்ஸ்மாஸ்டர். அந்த வகையில் அவருக்கு நான் மதிப்புக்கொடுக்கிறேன். என்னுடைய ப்ர்ஸனல் விஷயங்களில் மற்றவர்கள் மூக்கை நுழைப்பதை நான்விரும்புவதில்லை.

சரி, இப்பொழுது தமிழ்,தெலுங்கு இரண்டிலும் நீங்கள் தானே நம்பர் ஓன்?

எனக்கு இந்த நம்பர் ஓன், டூ இதிலெல்லாம் நிம்பிக்கையில்லை. எதை வைத்து இதையெல்லாம் முடிவு செய்கிறார்களோ தெரியவில்லை.

படங்களின் எண்ணிக்கையை வைத்து நம்பர்களை முடிவு செய்தால் தவறு. நடிகைகளுடைய நடிப்புத்திறமையை வைத்து நம்பர் ஓன், டூ என்று முடிவு செய்தால் நன்றாகஇருக்கும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil