»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

"எனக்கு ரகசிய நோய் எதுவும் இல்லை. ராஜு சுந்தரத்தைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்.சினிமாவிலிருந்து விலக மாட்டேன்" என்று நடிகை சிம்ரன் பரபரப்புப் பேட்டி கொடுத்துள்ளார்.

சிம்ரன் குறித்து சமீப காலமாக பதைபதைக்கும் வதந்திகள், செய்திகள் உலவி வந்தன. சிம்ரன் ரகசிய பால்வினைநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தற்கொலைக்கு முயன்றார் என்றும் ராஜு சுந்தரத்தை விட்டுப் பிரிந்தார்என்றும் தினசரி ஒரு வதந்தி என்ற விகிதத்தில் சிம்ரன் பத்திரிக்கைச் செய்திகளில் அடிபட்டார்.

இவை எதற்குமே பதிலளிக்காமல் சிம்ரன் தவிர்த்து வந்தார். அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியாமல் இருந்துவந்தது. இந்த நிலையில் திடீரென ஞாயிற்றுக்கிழமை (அக். 07, 2001) செய்தியாளர்களை வரவழைத்த சிம்ரன்கொடுத்த சிக் பேட்டி:

ஏன் சார், என்னைப் பத்தி கன்னாபின்னாவென்று எழுதுகிறீர்களே, கொஞ்சம் கேட்டு எழுதக் கூடாதா?உங்களுக்கும் மனசாட்சி இருக்கிறதல்லவா? அதைக் கூடவா கேட்க மாட்டீர்கள்?

இனிமேல் என்னைக் கேட்காமல் என்னைப் பற்றி எதையும் எழுதாதீர்கள். எனக்கு எந்த ரகசிய நோயும் இல்லை.நான் முழு உடல் நலத்துடன் உள்ளேன். எங்கும் சிகிச்சை பெறவும் இல்லை.

நீங்கள்பாட்டுக்கு எனக்கு ரகசிய நோய் என்று எழுதினால் யார் என்னைத் திருமணம் செய்து கொள்வார்கள்? நான்யாரைத் திருமணம் செய்தாலும் உங்களிடம் சொல்லி விட்டுத்தான் செய்து கொள்வேன், போதுமா?

ராஜு சுந்தரம் எனது காதலர். அதில் எந்த மாற்றம் இல்லை. அவரையே திருமணம் செய்து கொள்வேன். அதிலும்மாற்றமில்லை. எங்களுக்குள் எந்தவித சண்டையும் இல்லை. இது 100 சதவீதம் முழுமையான காதல். அதிலும்மாற்றமில்லை.

ராஜு சுந்தரம் தனது காதல் குறித்து வெளிப்படையாக கூற விரும்பவில்லை. இருப்பினும் கல்யாணம் செய்துகொள்வதற்கு முன்பு உங்களை எல்லாம் அழைத்து, "ஆமாம் நாங்கள் காதலித்துக் கொண்டுதான் இருந்தோம்"என்று அவரே கூறுவார், கவலைப்படாதீர்கள்.

"நேருக்கு நேர்" படத்தில் துவங்கிய எங்களது அறிமுகம், "எதிரும் புதிரும்" படத்தின் "தொட்டுத் தொட்டுப் பேசும்சுல்தானா..." பாடல் காட்சியின்போது காதலாக மாறியது.

எங்களது திருமணம் குறித்து நாங்கள் அவசரப்படவில்லை. நீங்கள்தான் அவசரப்படுகிறீர்கள். இப்போது நான்பிசியாக உள்ளேன். இது முறியக் கூடிய காதல் இல்லை. எனவே நாங்களோ அல்லது நீங்களோ கவலைப்படத்தேவையில்லை.

எனது கால்ஷீட்டால் "பார்த்தாலே பரவசம்" படம் தாமதமாகியது என்று டைரக்டர் பாலசந்தர் கூறியிருப்பதுசரியல்ல. உண்மையில் இந்தப் படத்தின் தாமதத்திற்குக் காரணம் ஏ.ஆர். ரஹ்மான்தான்.

அவர் பாடல்களைக் கொடுக்காமலேயே படத்தை எடுத்து முடித்து விட்டார்கள். அவர் மிகவும் மெதுவாகத்தான்பாடல்களைக் கொடுத்தார். ஆனால் அதை வெளியே கூற பயப்படும் பாலச்சந்தர், என் மீது புகார் கூறுவதுநியாயமல்ல. இதேபோலத்தான் மணிரத்னம் படமும் ரஹ்மானால் தாமதமானது.

நடிகர் சிவாஜி கணேசன் இறந்தபோது நான் வெளியூரில் இருந்தேன். அதனால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்தவர முடியவில்லை. இதற்கு வேறு எந்தக் காரணம் இல்லை.

மோனல் எனது அன்புத் தங்கை, அவள் மீது எனக்கு நிறைய பிரியம் உண்டு. நானும் அவளும் தற்போது பிரிந்துஇருக்கிறோம். ஆனால் இதற்கு சண்டை காரணமல்ல. அவள் தனியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.அதனால் தனியாக வசிக்கிறோம். வேறு எந்தக் காரணம் இதற்குப் பின்னணியில் இல்லை.

கவர்ச்சி காட்டி நடித்தது போதும் என்று முடிவுக்கு வந்து விட்டேன். அதனால்தான் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளபடங்களாகத் தேர்வு செய்து நடிக்கிறேன். இப்போது ஆங்கிலப் படம் ஒன்றில் நடிக்க புக் ஆகியுள்ளேன்."தேவதாசீஸ்-1930" என்ற படத்தில் நானும், இன்னொரு ஹீரோயினும் சேர்ந்து நடிக்கிறோம் என்றார் சிம்ரன்.

சிம்ரன் பேட்டியின்போது அவரது செய்தித் தொடர்பாளர் "மெளனம்" ரவியும் உடனிருந்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil