»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழகை தமிழ் சினிமா என்றுமே ஏமாற்றியதில்லை. தமிழக ரசிகர்களின் நெஞ்சத்தில் குடியிருந்து கொண்டிருக்கும் சிம்ரனையும் ஒரு நமது சினிமா உச்சத்தில் தான்தூக்கி வைத்திருக்கிறது.

இப்போதெல்லாம் தமிழகத்தில் பெண் பார்க்கச்செல்லும் தாய்மார்கள் வரப்போகின்ற பொண்ணு மஹாலட்சுமி மாதிரி இருக்கவேண்டும் என்று சொல்வதுமட்டுமல்ல, பார்க்க சிம்ரன் மாதிரிஇருக்கனும் என்றும் கண்டிஷன் போடுகிறார்களாம்.

ப்ரியமானவளே படப்பிடிப்பு. விஜய்யுடன் நடித்துக்கொண்டிருந்தார் சிம்ரன். உணவு இடைவேளையில் பேட்டி வைத்துக்கொள்ளலாமே என்றார்.

திடீரென்று என்ன யோசித்தாரோ, ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் பேசலாமே என்றார்.ரைடக்டர் செல்வபாரதி ஷாட்டிற்கு இடையே கட் சொல்ல....ம்ம் கேளுங்க உங்க கேள்வியை என்ன என்பார். மறுபடியும் ஷாட்ரெடி என்றவுடன் ஸாரி...ப்ளீஸ் என்று நடித்துவிட்டு வந்து தொடர்ந்தார்.

சிம்ரனிடம் நாம் ஆச்சர்யமாக பார்த விஷயங்கள் பல. அதில் ஒன்று இப்போது மிக அழகாக தமிழ் கொஞ்சுகிறார் ஸாரி பேசுகிறார்.

தமிழில் புதிய படங்கள் ஏதும் ஒப்புக்கொள்வதில்லையாமே உண்மைதானா?

நான் சினிமா உலகிற்கு நடிக்கத்தானே வந்திருக்கிறேன். பின் எதற்காக நடிக்க மறுக்கவேண்டும். இது இன்று,நேற்றல்ல நான் சினிமாவிற்குவந்ததிலிருந்து இப்படித்தான் வதந்தியை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் வட இந்தியப் பொண்ணு, சென்னைக்கு வந்ததே, படத்தில் நடிக்கத்தான். இப்படி, என்னைப்பற்றி வதந்திகளை கிளப்பிவிட்டு என் சினிமா வாழ்க்கைக்குமுற்றுப்புள்ளி வைக்க சிலர் கணக்கு போடுகிறார்கள். அது நடக்காது.

என்னிடம் கால்ஷீட் கேட்டு டேட்ஸ் இல்லாமல் நான் ஒப்புக்கொள்ளாத படங்கள் மட்டும் சுமார் பத்து பதினைந்து இருக்கும். அப்படி மிஸ் ஆன ஒரு படம்தான் தெனாலி. இப்பொழுது தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருவதால் கால்ஷீட்டில் ப்ராபளம் இருக்கிறது.

அதனாலேயே சில நல்ல நல்ல தமிழ் படவாய்ப்புக்களை இழக்க வேண்டியதாகிவிடுகிறது.தெலுங்கில் மூன்று படங்கள் தமிழில் மூன்று படங்களில்நடித்துக்கொண்டிருக்கிறேன்.

தேனப்பன் தயாரிக்கும் ராஜேஸ்வரி பிலிம்ஸூக்காக முதல் முறையாக கமல்ஜியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். டைரக்டர் மெளலி.இன்று நான் எத்தனை மொழிகளில் நடித்தாலும் கூட ஒரு நடிகை என்கிற அங்கீகாரம் தமிழ் படம் மூலமாகத் தானே கிடைத்தது.

அதை எப்படி நான் மறக்க முடியும். அடுத்து அழகான நாட்கள் என்கிற படத்தில் கார்த்திக் சாருடன் நடிக்கிறேன்.சுந்தர்.சி இயக்குகிறார்.

சென்னையில் தங்கப்போவதில்லை. பம்பாயில் எங்களுக்கு சொந்த வீடு இருக்கிறது. சென்னையில் நிச்சயம் சொந்த வீடு வாங்க மாட்டேன் என்று சொல்லிவந்த நீங்கள் சென்னையில் வீடு வாங்கிவிட்டீர்களாமே.?திநான் சென்னையில் தான் அதிக நாட்கள் தங்கி வருகிறேன். ஆரம்ப காலத்தில் ஹோட்டலில் தங்கினேன். இப்பொழுது ரசிகர்கள் என்னை அடையாளம்கண்டு கொள்கிறார்கள். அதனால் வாடகை வீட்டில் தங்கி வந்தேன்.

ஒரு பழைய வீட்டை வாங்கி புதுப்பித்து வருகிறேன் என்றவர், வாடகை வீட்டிற்கும் சொந்த வீட்டிற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.

வீடு விவகாரம் சரி, அடுத்து கல்யாணம் எப்போ? என்றோம். கடகட வென குறும்பாக சிரிக்கிறார்.

தெரியும்.சுத்திவளைச்சு நீங்க எங்க வருவீங்கன்னு. சில விஷயங்களை பேசலாம்னு இருக்கேன். நடிகைன்னு அந்தஸ்து கிடைக்கும் பொழுது கூடவே பல விஷயங்களைதியாகம் செய்தே ஆக வேண்டியிருக்கிறது.

அதில் ஒன்று திருமணம். நான் நடிக்க வந்து இப்பொழுது தான் என் மார்கெட் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தெலுங்கில் முன்னணி நடிகை என்கிறஅதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

இந்த மாதிரி நேரத்தில் திருமணம் பற்றி யோசிக்கவேயில்லை. ஐந்து வருடங்களுக்குப்பிறகு தான் திருமணம் பற்றி சிந்திக்கவேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிசாருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும்.அந்த வாய்ப்பும் விரைவில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.அந்த நாளுக்காகவும் காத்திருக்கிறேன். ( என்னஇது ,சுத்திவளைச்சு பேசாம நேரா ஏதாவது சொல்வீங்கனு பார்த்தா ஏமாத்திபுட்டாங்களே!)விடவில்லை நாம்.

நீங்களும் டான்ஸ் மாஸ்டர் ராஜூசுந்தரமும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்புடன் பழகிவருவதாக ஏகப்பட்ட செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றது.அதே நேரத்தில் நீங்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும் சொல்கிறார்கள் எது உண்மை என்பது தெரியவில்லை. தலை வெடித்துவிடும் போல இருக்கிறதுஎன்றோம்.

என்னது தலை வெடிக்குமா? என்று குறும்புடன் பார்த்தவர், நானும் ராஜுசுந்தரமும் நல்ல நண்பர்கள். எங்களுக்கிடையே பிரிவோ, சண்டையோ நிச்சயம்வராது.பிரியக்கூடிய சூழ்நிலை எங்களுக்குள் நிச்சயம் வராது. நாங்கள் பிரிய சான்ஸே இல்லை. தயவு செய்து இதற்கு மேல் ஏதும் கேட்காதீர்கள்.

சரி ஒன்றே ஒன்று மட்டும் சொல்லுங்கள் உங்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா இல்லை அரேஞ்சுடு மேரேஜாக இருக்குமா?

என்றோம். நிச்சயம் காதல் திருமணம் தான். ஆனால் அது ரகசிய திருமணமாக இருக்காது என்று கண்சிமிட்ட, கங்கிராட்ஸ் சிம்ரன் இது தானே நாங்க கேட்டோம்.ஷாட் ரெடி குரல் வந்த திசையில் திரும்பினோம். டைரக்டர் செல்வபாரதி.

ஸாரி, ப்ளீஸ் என்ற படியே விடைகொடுத்தது அந்த தேவதை.

Read more about: cinema simran interview tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil