வயிற்றில் இருந்த 3 மாத கரு.. ரயில் விபத்தில் இறந்த மனைவி.. மோகன் வைத்யா கண்ணீர் பேட்டி!

சென்னை: பிரபல இசைக்கலைஞரும், நடிகருமான மோகன் வைத்யா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியின் தந்தையாக நடித்து வந்தார். ஆனால் அந்த கதாபாத்திரம் திடீரென முடிக்கப்பட்ட நிலையில் கலாட்டா பிங்க் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், மன வலி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

இல்லத்தரசிகளின் எதிர்நீச்சல் சீரியலில் பாட்டு வாத்தியாராக நடித்து வந்தேன், அந்த சீரியல் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ஆனால், கடைசியில் குணசேகரன் குடும்பத்தினர் என்னை தாக்குவது போல ஒரு காட்சி வரும், அதில், காயப்பட்டு மருத்துவமனைக்கு என்னை அழைத்து செல்வார்கள் அதுவரைக்கும் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நானும் அடுத்து சீரியல் குழுவிடம் இருந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்கான அழைப்பு வரும் என்று காத்து இருந்தேன். அதன் பிறகு தான் என் கதாபாத்திரம் இறந்துவிட்டதாக காட்டி இருக்கிறார்கள் என்று, இதுபற்றி இயக்குநரிடம் கேட்டேன். என் கதாபாத்திரம் முடிந்துவிட்டது என்று சொல்லி இருக்கலாமா என்றேன், அவர் தயக்கத்துடன் அந்த கதாபாத்திரத்தை அப்படி முடித்தால் நன்றாக இருக்கும் அதற்காகத்தான் அப்படி செய்தேன் சீரியலை பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றார். இருந்த போதும் சொல்லாதது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

Mohan vaidhya interview
Photo Credit:

ரயில் விபத்தில் இறந்தார்: இதைத்தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அவர், நான் என் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத ஒரு மாற்றுத்திறனாளி. எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான், எங்களின் இல்லற வாழ்க்கை சந்தோஷமாக சென்ற நேரத்தில் தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு துயர சம்பவம் நடந்தது. அவர் ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டு இருந்த நேரத்தில், ஒருநாள் படியேற முடியாததால் ரயில்வே டிராக்கை கடந்து அலுவலகம் செல்ல முயற்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

பரிசோதனையில் வந்த அதிர்ச்சி: அந்த அதிர்ச்சியில் இருந்தே நான் மீள முடியாமல் இருந்தேன் அப்போது தான், மனைவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்தது. அதில், என் மனைவி 3 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். ஒரு பெண் குழந்தை வேண்டுமென இருவருமே ஆசை ஆசையாக காத்திருந்தோம். ஆனால், கடைசியில் இப்படி ஆகிவிட்டது. அந்த வலி வேதனையில் இருந்து என்னால் மீண்டு வரவே முடியவில்லை. இருந்தாலும் என் மகனின் எதிர்காலத்தை நினைத்து அவனுக்காக ஓடினே அவனை நன்றாக படிக்கவைத்து விட்டேன். என் மனைவியைப் போல மோகன் வைத்யாவும் காது கேட்காத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி, அவனும் இப்போது ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறான். தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். இருவரும் நன்றாக இருக்கிறார்கள், ஆனால்,அவர்களை சார்ந்து நான் வாழ விரும்பவில்லை, தனியாக என் மனைவியின் நினைவுடன் காலத்தை கழித்து வருகிறேன் என மோகன் வைத்யா அந்த பேட்டியில் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X