அவரின் இறப்பு பெரிய இழப்பு.. அவரை என்னால் மறக்கவே முடியல.. பாடகி நித்ய ஸ்ரீ மகாதேவன் வேதனை!

சென்னை: பிரபல கர்நாடக மற்றும் சினிமா பின்னணி பாடகியான பாடகி நித்ய ஸ்ரீ மகாதேவனின் குரலுக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. மேடையில் அமர்ந்து ராகம் பிடிக்கும் போது மயங்காத உள்ளங்களும் மயங்கி விடும். கச்சேரி முடியும் வரை தனது குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டுவிடுவார். ஏஆர் ரஹ்மான் இசையில் பல திரைப்படங்களிலும் பாடி உள்ளார். தற்போது Miss Wow Tamizhaa யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Singer Nithyasree Mahadevan interview
Photo Credit:

அதில், பல விஷயத்தை பேசி இருக்கும் நித்ய ஸ்ரீ, இந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள், தனியாக சுயமாக சம்பாதிக்கிறார்கள. இது பாராட்டக்கூடிய விஷயமாக இருந்தாலும், இதன் மூலமாக தான் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பல திருமணங்கள் முறிந்து போகின்றன. பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி இருவருக்கும் இடையே புரிதல், விட்டுக்கொடுத்தல் நிச்சயம் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். ஆனால், ஒரு உறவை சரி செய்யவே முடியாது என்று நினைக்கும் போது அந்த உறவில் இருந்து விலகுவதில் தவறு இல்லை.

பாடகி நித்ய ஸ்ரீ: தொடர்ந்து தனது கணவர் குறித்து பேசிய நித்ய ஸ்ரீ, என்னுடைய கணவர் இப்போதும் உயிருடன் இல்லை என்றாலும், அவரை என்னால் மறக்கவே முடியவில்லை. அவர் என்னுடைய நினைவிலும், என்னுடைய வாழ்க்கையிலும் இரண்டற கலந்து இருக்கிறார் என்றார். அதைத் தொடர்ந்து, என்னுடைய நிறைவேறாத ஆசை குறித்து பேசிய நித்ய ஸ்ரீ, என்னுடைய தாத்தா மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர், அவரை நான் பார்த்த ஞாபகம் கூட இல்லை, அவர் மிகப்பெரிய ஒரு மிருதங்க மேதை, அவருடைய காலத்தில் நான் இல்லையே, அவரை பார்க்கவில்லையே என்பது என்னுடைய நிறைவேறாத ஆசை என்றார்.

கணவர் தற்கொலை: அதேபோல என்னுடைய சிறந்த குணம் என்னவென்றால் நான் யாரையும் எப்போதும் எந்த சூழ்நிலையிலும், கஷ்டப்படுத்தவே மாட்டேன், அவர்களுக்கு தீங்கு நினைக்க மாட்டேன். அது என்னுடைய சிறந்த குணம் என நினைக்கிறேன். ஆனால், இதனால் பல கஷ்டங்களை நான் சந்தித்து இருக்கிறேன் இருந்தாலும் அந்த குணத்தை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை என பாடகி நித்ய ஸ்ரீ அந்த பேட்டியில் பேசி உள்ளார். நித்ய ஸ்ரீயின் கணவர் மகாதேவன், 2012 ஆம் ஆண்டு கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து ஆற்றில் தற்கொலை செய்து கொண்டார்.

More from Filmibeat

Read more about: singer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X