பாத்ரூமில் விஜே வைஷு செய்த வேலை.. நாஞ்சில் விஜயன் மீது புகாரளிக்க காரணமே இதுதான்.. சுசித்ரா பேட்டி!
சென்னை: விஜய் டிவியில் சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து அவர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் குழந்தை பிறந்து இருக்கும், நிலையில், விஜே வைஷு என்பவர் நாஞ்சில் விஜயன், என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என புகார் கூறியது பரபரப்பாக பேசப்பட்டது.
சோஷியல் மீடியாவில் இது பெரும் புயலை கிளப்பு இருக்கும் நிலையில், பாடகி சுசித்ரா குமுதம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில். வைஷுவுக்கு ஆதரவாக நான் எந்த கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. நாஞ்சில் விஜயன் பணத்தை ஏமாற்றி இருந்தால், அடித்து இருந்தால் புகார் கொடுக்கலாம் என்று தான் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், வைஷு அளித்த பேட்டியில் சுசித்ரா எனக்கு ஆதரவாக பேசி இருக்கிறார் என கூறிவிட்டார். என் பெயரை பயன்படுத்தி வைஷு பிரபலமாக நினைக்கிறார். இதனால் தான், நாஞ்சில் விஜயன் மற்றும் வைஷு விவகாரத்தில் என் தலை உருளுகிறது.

சுசித்ரா பேட்டி: வைஷுவை எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். ஆனால், இப்போது பேச்சு வார்த்தை இல்லை. பலர் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார்கள், வாழ்க்கையில் பிரச்சனை, சினிமாவில் நிறைய அடிவாங்கிவிட்டேன் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும் என்று உதவி கேட்டுத்தான் என்னிடம் வந்தார். அப்போது தான், நான் திருநங்கைகளுக்கு வாழ்க்கை கொடுக்கும் ஒரு நிறுவனத்தில் அவருக்கு வேலை வாங்கி கொடுத்தேன். ஆனால், அங்கும் வேலை செய்யாமல், பாத்ரூமில் நேபாலி ஆணுடன் தவறான நடந்துள்ளார். இதனால், வைஷுவை வேலையில் இருந்த நிறுத்திவிட்டார்கள்.
பாத்ரூமில் வைஷு செய்த வேலை: இந்த விஷயம் தெரிந்ததும் நான் வைஷுக்கு ஃபோன் செய்து, என்ன நடந்தது, வேலை வாங்கி கொடுத்தால் என் பெயரை கெடுத்துட்டியே என்று கேட்டேன். அப்போது வைஷு, அவர்கள் சொல்வதெல்லாம் பொய் அக்கா, அந்த பையன் தான் பாத்ரூமில் என்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்றார். அப்போது நான், ஆண்கள் பாத்ரூமில் உனக்கு என்ன வேலை என்று கேட்டேன். உடனே ஃபோனை கட் செய்து விட்டு போய்விட்டாள். அதன் பிறகு வைஷுவிடம் என்னிடம் பேசவே இல்லை.
பிக் பாசுக்கு போக: நாஞ்சில் விஜயன் மீது வைஷு புகார் கொடுத்ததற்கு முக்கிய காரணமே பப்ளிசிட்டிக்காகத் தான். பப்ளிசிட்டியை வைத்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து விடலாம் என அவர் திட்டம் போட்டு தான் இப்படி ஒரு விஷயத்தை கிளப்புகிறார். இது போன்ற ஆட்களை நிச்சயம் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கவே அழைக்காது. ஏனென்றால் மீரா மிதுனால் விஜய் தொலைக்காட்சி பலவிதமான சங்கடங்களை அனுபவித்து விட்டது. அதனால் இது போன்ற சர்ச்சையான நபர்களை நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்ப மாட்டார்கள் என சுசித்ரா அந்த பேட்டியில் பேசி இருக்கிறாள்.


Click it and Unblock the Notifications











