»   »  சிம்புவை நிராகரித்த ஸ்னேகா!

சிம்புவை நிராகரித்த ஸ்னேகா!

Subscribe to Oneindia Tamil

சிம்புவுடன் நடிக்க மறுத்து விட்டாராம் ஸ்னேகா.

சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பை நிராகரிக்கும் நடிகைகளின் பட்டியல் பெரிதாகிக் கொண்டே வருகிறது. முதலில் திரிஷா, பிறகு பூஜா, அப்புறம் பாவனா, கடைசியாக அனுஷ்கா என பலரும் சிம்புவுடன் நடிக்க மறுத்தனர். லேட்டஸ்டாக ஸ்னேகா மறுத்துள்ளார்.

இது வதந்தியா, உண்மையா என்பதை அறிய ஸ்னேகாவிடமே இதுகுறித்துக் கேட்டபோது, இது வதந்தி அல்ல, 100 சதவீதம் உண்மைதான்.

சமீபத்தில்தான் தனது படத்தில் நடிக்க வேண்டும் என சிம்பு என்னை தொடர்பு கொண்டார். ஆனால் படத்தில் எனக்கு ஹீரோயின் ரோல் இல்லை, வில்லியாக நடிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் கவர்ச்சியாகவும் நடிக்க வேண்டும் என்று கேட்டார்.

நான் உடனடியாக மறுத்து விட்டேன். அப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, வரவில்லை. ஹீரோயின் ரோல் கொடுப்பதாக இருந்தால் பரிசீலிப்பேன்.

அதுவும் கூட எனது கேரக்டருக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்தது என்றார் படபடவென்று.

ஸ்னேகாவோடு புள்ளி வைக்கப்படுமா அல்லது கமா ஆகுமா, சிம்புவை நிராகரிக்கும் நடிகைகளின் பட்டியல்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil