»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

நடிகை சினேகாவுடன் தனக்கு காதல் ஏதும் இல்லை என நடிகர் ஸ்ரீகாந்த் மறுத்துள்ளார்.

ஸ்ரீகாந்த் பெயரில் புதிய இண்டர்நெட் தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் நிருபர்களிடம் பேசிய அவரிடம்சினேகாவுடனான கிசுகிசு குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஸ்ரீகாந்த்,

எனக்கும் சினேகாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. காதலும் இல்லை. இது வெறும் வதந்தி தான். ஏப்ரல் மாதத்தில் என்றபடத்தில் மட்டுமே இப்போது நானும் சினேகாவும் நடித்து வருகிறோம். வேறு எதிலும் சேர்ந்து நடிக்கவில்லை.

எனக்கு ஜோடியாக சினேகாவைப் போடச் சொல்லி நான் வற்புறுத்துவதும் இல்லை. டைரக்டரும் தயாரிப்பாளரும் யாரைப்போட்டாலும் நடிப்பேன் என்றார்.

ஆனால், சினேகாவுக்கு விபத்து ஏற்பட்டபோது அவரை மாற்றிவிட்டு வேறு கதாநாயகியைப் போட தயாரிப்பாளரும்டைரக்டரும் முடிவு செய்தபோது அதை எதிர்த்தார் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகா மருத்துவமனையில் இருந்தபோது அடிக்கடி போய் பார்த்து வந்தவர், தானும் நடிக்காமல் வீட்டில் உட்கார்ந்திருந்தார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது,

சினேகாவுக்கு 15 நாட்களில் உடல்நிலை தேறிவிடும் என்று டாக்டர்கள் என்னிடம் சொன்னார்கள். இதனால் தான் அவரை மாற்றவேண்டாம் என்று தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டேன். நானும் காத்திருந்தேன். அவரை வேறு காரணம் ஏதும் இல்லை.எனக்கும் அவருக்கும் காதல் இல்லை என்றார்.

ஸ்ரீகாந்த் இப்படிப் பேசினாலும் "ஏப்ரல் மாதத்தில்" படப் பிடிப்பில் உள்ள டெக்னீசியன்கள் சொல்வது வேறு மாதிரியாக உள்ளது.

இருவரும் ஒரு நிமிடம் கூட தனியே இருப்பது இல்லையாம். ஒட்டியே சுற்றிச் சுற்றி வருகிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil