»   »  தப்புவாரா ஸ்னேகா?

தப்புவாரா ஸ்னேகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமலுடன் நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் எனது நடிப்பு மெருகு கூடி வருகிறது என்று புளகாங்கிதப்படுகிறார் ஸ்னேகா.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக, கமலுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும்ஸ்னோகாவின் உதடுகளை பதம் பார்க்க கலைஞானி முயல்வதாக சொல்கிறார்கள்.

ஆனால், லிப்-டு-லிப் எல்லாம் கிடையாது என்று தெளிவாகவே தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டுத் தான்அட்வான்ஸையே வாங்கினாராம் ஸ்னேகா.

ஆனாலும் உதட்டுப் போராட்டத்தை கமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதாகவும், படம் முடிவதற்குள் அந்தக் காட்சிநடந்தேறி, படத்தில் சேர்க்கப்பட்டுவிடும் என்கிறார்கள்.


கமலுடன் ஏற்கனவே பம்மல் கே சம்பந்தம் படத்தில் ஸ்னேகா நடித்திருந்தாலும் அதில் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்தார்.இதனால் நல்லவேளையாக உதட்டு கடியில் இருந்து தப்பிவிட்டார். இப்போதுதான் முதல் முறையாக கமலுடன் ஜோடிசேருகிறார்.

இந்த உம்மா விவகாரத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஸ்னேகாவிடம் பேசினால், கமலுடன் நடிப்பது குறித்து கண்கள்விரியப் பேசுகிறார்.

தனது ஸ்பெஷல் புன்னகையுடன் கமலைப் புகழ்ந்து தள்ளுகிறார். கமலுடன் நடிக்கும்போதல்லாம் எனக்கு என்னவே நான்முதன்முதலாக கேமரா முன்னால் நிற்பது மாதிரி நெர்வஸ்ஸாகிவிடுகிறது. நிச்சயம், அவர் ஒரு ஜீனியஸ் தான்.

இதுவரை 23 படங்களில் நடித்து விட்டேன், ஆனாலும் அவருடன் நடிக்கு ஒவ்வொரு காட்சியிலும் எனக்குள் டென்ஷன்தான்.ஆனால், கமல் என்னை ஆசுவாசப்படுத்துகிறார். இயல்பாக நடிக்க வைக்கிறார். நிறைய சொல்லிக் கொடுக்கிறார்.

பதற்றம் நம் மனசுக்குள் இருந்தாலும் கண்டுபிடித்துவிடுவார். பேசி நார்மலாக்கிவிட்டுத் தான் கேமரா பக்கம் போகச் செய்வார்.கமல் சாருடன் நடிப்பது பெரிய அனுபவமாக இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் நிச்சயந் எனது நடிப்புத் திறமையும் கூடியிருப்பதாகவே கருதுகிறேன். அதற்கான பெருமை கமலையேசாரும் என்றார்.

அந்த முத்தக் காட்சி... என்று இழுக்க,

விட மாட்டீங்களே என்று பொய்க் கோபத்துடன் பார்த்தவர், கமல் சாருடன் நான் முத்தக் காட்சியில் நடிக்கிறேனா என்று நீங்கள்மட்டுமல்ல, என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் கேட்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு காட்சியே படத்தில் இல்லை என்றார்.

எங்களுக்கு என்னவோ நம்பிக்கை இல்ல என்று அவருக்கு உண்மையிலேயே கோபத்தை வரவழைத்துவிட்டு இடத்தைஅவசரமாய் காலி செய்தோம்.

படத்தில் சொந்தக் குரலில் பேச வேண்டும் என்று ஸ்னேகா விருப்பமாக உள்ளாராம். இயக்குனரிடமும் கமலிடமும் அது குறித்துப்பேசியிருக்கிறாராம்.

அப்புறம் இன்னொரு விஷயம், இந்தப் படத்தில் கமலுக்கு அப்பாவாக நடிக்க ஆள் கிடைத்துவிட்டார். முதலில் கே.பாலசந்தரிடம்கேட்டு அவர் நோ சொல்லியதால், தெலுங்கு இயக்குனர் கே.விஸ்வநாத்தில் ஆரம்பித்து அமிதாப்பச்சன் வரை கமலுக்குஅப்பாவாக நடிக்கப் போவதாக அடுத்தடுத்து செய்திகள் வந்தன.

ஆனால், இப்போது அந்தக் கேரக்டரில் நடித்து வருவது த கிரேட் நாகேஷ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil