»   »  "அந்த" உணர்ச்சி இன்னும் வரலை: ஸ்னேகா

"அந்த" உணர்ச்சி இன்னும் வரலை: ஸ்னேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்னேகாவைப் போல ஒரு கமுக்கமான ஆளைப் பார்க்கவே முடியாது.

ஸ்ரீகாந்த்துடன் சேர்த்து எத்தனையோ செய்திகள் வந்து விட்டாலும் இன்னும் கூட சிரித்துக் கொண்டே அதை மழுப்புவதில்அவருக்கு நிகர் அவரே தான்.

சமீபத்தில் சென்னையில் ஒரு சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஸ்னேகாவும், ஸ்ரீகாந்த்தும் கலந்து கொண்டனர்.மற்றவர்களைப் போல அல்லாமல் எக்ஸ்ட்ரா சிரிப்பு, எக்ஸ்ட்ரா உற்சாகத்துடன் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

நம்ம நிருபர்களும் வழக்கம் போல அவர்களை ஓரங்கட்டி, "ரெண்டு பேரும் காதலிக்கிறீர்களா? என்ற பழைய கேள்வியையேபுதிய எதிர்பார்ப்புடன் கேட்டனர்.

அதற்கு இருவருமே ஒரு வெடிச் சிரிப்பை உதிர்த்து விட்டு வழக்கம் போல மழுப்பினர். அதாவது, நாங்கள் ரெண்டு பேருமே நல்லநண்பர்கள். எனக்கு நிறைய நடிகைகள் தோழிகளாக உள்ளனர்.

எனக்கு நடிகைகள் மட்டுமல்லாது நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், கேமரமேன்கள் என பலதரப்பினரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

எனக்கு ஒருவரைப் பிடித்து விட்டால் அவரிடம் நெருங்கிய நட்பு வைத்துக் கொள்வேன். கடைசி வரை அந்த நட்பு நீடிக்கவேண்டும் என்றும் விரும்புவேன். அதேபோலத்தான் ஸ்னேகாவிடமும் வைத்துள்ளேன்.

அதில் ஒரு தவறும் இல்லை. நாங்க நல்ல பிரண்ட்ஸ் என்பது திரையுலகினருக்கு நன்றாகவேத் தெரியும். வேறு ஒன்றும்எங்களுக்குள் இல்லை என்றார் ஸ்ரீகாந்த்.

ஸ்னேகா அதற்கு மேல்! நட்புக்கும், காதலுக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருக்கு சார். என்னைப் பொருத்தவரை காதல்என்பது ஒரு உணர்வு. அது தானாக வர வேண்டும்.

எல்லோரும் சேர்த்து வைத்துப் பேசினால் அது வந்து விடாது. என்னைப் பொருத்தவரை இதுவரை அந்த உணர்ச்சி வரவில்லை.அது வரும்போது பார்க்கலாம்.

இப்போதைக்கு அப்பா, அம்மாவுக்குக் கட்டுப்பட்ட நல்ல பொண்ணு நான். அவர்கள் கையைக் காட்டும் நபரைத் தான்கண்டிப்பாக திருமணம் செய்வேன்.

ஒருவேளை காதல் ஏதாவது ஏற்பட்டால், அப்போதும் அம்மா, அப்பா சம்மதத்துடன்தான் கல்யாணம் செய்வேன். எனக்குக்கல்யாணம் நடக்கும்போது உங்களையெல்லாம் நிச்சயம் கூப்பிடுவேன், கவலையே படாதீர்கள் என்று கூறி விட்டு ஸ்ரீகாந்த்துடன்"கடலை"யைத் தொடர்ந்தார்.

எங்ஙன போயி முட்டிக்கிறதுன்னு தெரியலையே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil