»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

7ஜி ரெயின்போ காலனியின் தெலுங்குப் பதிப்பு சோனியா அகர்வாலுக்கு அங்கு பெரிய பிரேக்கைக் கொடுத்துள்ளது. இதனால்அவருக்கு அங்கிருந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் தேடி வந்து கொண்டுள்ளன.

தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள இயக்குனர் செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி தெலுங்கிலும்வெளியாகியுள்ளது. அங்கும் படம் சூப்பர் ஹிட்.

இதனால் பெரிய பிரேக் கிடைத்துள்ளது ஹீரோ ரவிகிருஷ்ணாவுக்கு அல்ல,மாறாக சோனியா அகர்வாலுக்குத்தான்.

அங்கிருந்து பெரும் சம்பளத்துடன் நிறைய அழைப்புகள் வர தெலுங்கில் நடிக்கும் ஆசை சோனியாவுக்கு வந்துவிட்டது.ஆனாலும் நடிக்கவா வேண்டாமா என்று தனது குருஜி செல்வராகவனிடம் ஆலோசனைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் சோனியா.அவர் சொல்வதையே சோனியா செய்ய இருக்கிறாராம்.

சரி, ஹீரோ ரவிகிருஷ்ணா மேட்டருக்கு வருவோம். இவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் வராவிட்டாலும் தமிழில் வாய்ப்புகளுக்குகுறைவில்லை.

எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் சுக்ரன், தனது அண்ணன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம், ஏப்ரல் மாதத்தில்இயக்குனர் ஸ்டான்லி இயக்கத்தில் சத்யம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் சுக்ரன் படத்தில் ரவிகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நதீஷா என்ற புதுமுகம் நடிக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன்படம். அப்பாவின் இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால் நடிகர் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

சுக்ரன் படப்பிடிப்பில் இதுவரை 3 முறை ரவிகிருஷ்ணாவிற்கு விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்தளவிற்கு படத்தில் ஆக்ஷன்அதிகமாம்.

காயம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரவிகிருஷ்ணாவைப் பார்த்து சினிமா வாழ்க்கை எப்படியிருக்குகேட்டபோது,

காலையில் 10 மணிக்கு எழுந்து கொண்டிருந்த நான், இப்போது 5 மணிக்கே எழுந்து சூட்டிங் போக ஆரம்பித்து விடுகிறேன்.

சினிமாவுக்கு வரவேண்டும் என்று நான் நினைத்ததில்லை. லண்டனில் பி.ஏ. மல்டிமீடியா படித்தேன். அப்போது சினிமாபார்ப்பதும், கிரிக்கெட் ஆடுவதும்தான் எனது பொழுதுபோக்கு. பிறகு அண்ணனின் வற்புறுத்தலால் நடிப்பு பயிற்சிக்குப்போனேன்.

அந்த சமயத்தில்தான் 7ஜியில் நடிக்க என் அப்பா ஏ.எம்.ரத்னம் சிபாரிசு செய்தார். செல்வராகவன் எடுத்த ஸ்கிரீன் டெஸ்டில்பாஸ் ஆனேன்.

எனக்கு டான்ஸ், பைட் எதுவும் தெரியாது. செல்வராகவன்தான் திட்டித் திட்டி சொல்லிக் கொடுத்தார். அவர் ஒருநல்ல குரு.

படம் பார்த்து விட்டு, நீ இந்த அளவுக்கு நடிப்பேன்னு நான் நினைக்கலேன்னு அப்பாவே பாராட்டினார். தியேட்டரில் மற்றநடிகர்களின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நான், இப்போது ஒரு ஹீரோ.

நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது என்றார்வெள்ளையாக. லண்டனில் எல்லாம் படித்த ரவிகிருஷ்ணாவிற்கு பிடித்த நடிகை யாரென்றால் சாவித்ரி என்கிறார்.

நம்ப முடியவில்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil