சொட்டை தலையனை மட்டுமில்லை.. யாரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் - பிக் பாஸ் வர்ஷினி பேட்டி!
சென்னை: 'சொட்ட சொட்ட நனையுது' திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நிஷாந்த், ஷாலினி மற்றும் பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். கூடிய விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ள நிலையில், அந்த படக்குழுவினர் ஒன் இந்தியா தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பிக் பாஸ் வர்ஷினி ஓபனாக பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
படத்தின் பிரஸ் மீட்டில் நிஷாந்த் வித்தியாசமான கெட்டப்பில் வந்தது பற்றி கேட்டபோது, ரசிகர்கள் தன்னை அந்த கேரக்டராகவே ஏத்துக்கணும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்ததாகக் கூறினார். மேலும், படத்தின் புரொமோஷன்களில் அந்தக் கெட்டப்பில் வரத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதிக நேரம் எடுத்ததால் ஆடியோ வெளியீட்டு விழாவில் மட்டும் பங்கேற்றதாகவும் தெரிவித்தார்.

படத்தில் சுருதி மற்றும் பிரியா என்ற கதாபாத்திரங்களில் ஷாலினி மற்றும் வர்ஷினி நடித்துள்ளனர். இருவரும் கான்ட்ராஸ்ட்டான கேரக்டர்களில் நடித்திருப்பதாகவும், மாடர்ன் மற்றும் ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் ஷாலினி கூறினார். நிஷாந்த் இவரை காதலிக்க, இவர் இன்னொருவரை காதலிக்கும் முக்கோண காதல் கதை இது.
இன்றைய இளைஞர்கள் முடி கொட்டுவதால் திருமணமே நின்று போகும் சூழல் உள்ளதை படத்தில் காட்டியிருப்பதாக நிஷாந்த் கூறினார். முடி இல்லாததால் சமூகத்தில் அவர்கள் அனுபவிக்கும் வலியைப் பற்றி பேசியிருப்பதாகவும், அதை ஜாலியாகவும் சென்சிடிவ்வாகவும் கையாண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரியல் லைஃப்ல இதுபோன்ற ஆண்களை ஏத்துப்பீங்களா என்ற கேள்விக்கு வர்ஷினி, "நான் எந்த ஆம்பளையும் ஏத்துக்க மாட்டேன்ற ஸ்டாண்ட்லயே நான் நிக்கறேன்" என ஜாலியாக பதில் அளித்தார். திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றார். ஷாலினி, தனக்கு கேரிங் மற்றும் கனெக்ட் இருந்தா ஓகே என்றார், லுக்கு எல்லாம் முக்கியம் இல்லை எனவும் கூறினார்.
படத்தின் கதை கேட்டபோது, வழுக்கை உள்ளவர்களின் வலியை சரியாக கன்வே செய்ய முடியுமா என்ற கேள்வி தனக்கு இருந்ததாக நிஷாந்த் கூறினார். பிறகு தன்னுடைய நண்பரிடம் இதுகுறித்து பேசியதாகவும், அதன் பிறகுதான் கதை கனெக்ட் ஆனதாகவும் அவர் கூறினார். முதலில் வழுக்கை அடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அது சாத்தியமில்லாததால் ப்ராஸ்தெடிக் மேக்கப் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தூங்காமல் இருப்பதுதான் தனக்கு சேலஞ்சாக இருந்தது என்று வர்ஷினி கூறினார். ஏடி டீம் ஏதாவது கவுண்டர் போட்டுக்கொண்டே இருப்பதால் சிரிப்பை அடக்குவது கஷ்டமாக இருந்தது என்றும் அவர் கூறினார். கிளைமாக்ஸ் காட்சியில் சிரிப்பை கட்டுப்படுத்தியது பெரிய டாஸ்க் என ஷாலினி கூறினார்.
விக்ரம் சார்தான் தனது இன்ஸ்பிரேஷன் என்று நிஷாந்த் கூறினார். அவர் பல மணி நேரம் மேக்கப் போட்டு கஷ்டப்பட்டதை நினைத்து வியப்பதாகக் கூறினார். மூன்று மணி நேரம் மேக்கப் போட்டதற்கே தலை வலித்தது என்றும், விக்ரம் சார் ஒரு நாள் முழுவதும் ஐ படத்திற்காக மேக்கப் போட்டு நடித்துள்ளார் என்பது பெரிய விஷயம் எனவும் கூறினார்.
படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் ஒரு ஃபீல் குட் மூவியாக இது இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். சொட்டையின் வலியை காட்டியிருப்பதுடன், ஒரு சோஷியல் மெசேஜும் படத்தில் இருப்பதாக அவர்கள் கூறினர்.


Click it and Unblock the Notifications











