»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கத்தில் நடிப்புக்கும் அது தவிர இத்யாதி சமாச்சாரங்களுக்கும் மிகவும் பெயர் போன கலைக் குடும்பம்தனது ஒட்டு மொத்த நம்பிக்கையையும் வைத்து களத்தில் இறக்கி விட்ட கடைசி வாரிசு ஸ்ரீதேவி.

பார்க்க மெழுகு பொம்மை மாதிரி ரொம்ப அழகாகவே இருக்கிறார். இவர் நடித்த பிரியமானதோழி,தித்திக்குதே ஆகிய இரு படங்களுமே முதலுக்கு மோசம் செய்யாமல் ஓடிவிட்டன.

பிரியமான தோழி படத்தில்இவரது நடிப்புக்கு நல்ல பாராட்டும் கிடைத்தது. இந்தப் படத்தின் பாட்டுக்கள் பட்டிதொட்டியெல்லாம்எதிரொலிக்கின்றன. இதனால் தனக்கு வாய்ப்புக்கள் குவியும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஸ்ரீதேவி.

ஆனால், இதுவரை அடுத்து எந்தப் படமும் புக் ஆகவில்லை. இதனால் அந்த மெழுகு முகத்தில் கொஞ்சமாய்சோகம் தெரிய ஆரம்பித்துள்ளது. இருந்தாலும் நானாகப் போய் யாரிடமும் வாய்ப்பு கேட்க மாட்டேன் என்றுபிடிவாதம் பிடிக்கிறாராம் ஸ்ரீதேவி.

நேரில் போய் தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை பார்க்கச் சொல்லி வீட்டில் நச்சரித்தாலும் அதை ஏற்க மறுத்துவருகிறாராம்.

என் அழகுக்கும், நடிப்புத் திறமைக்கு நிச்சயம் சான்ஸ்கள் என்னைத் தேடி வந்திருக்க வேண்டும். வரவில்லை.இருந்தாலும் நான் பொறுமை காக்கப் போகிறேன். என்னைத் தேடி நிச்சயம் தயாரிப்பாளர்கள் வருவார்கள்என்கிறார்.

வருவார்களா?

Please Wait while comments are loading...