»   »  எனக்கும் காலம் வரும்: ஸ்ரீதேவி

எனக்கும் காலம் வரும்: ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜயகுமார் குடும்பத்தின் மற்ற வாரிசுகளைப் போலவே ஸ்ரீதேவிக்கும் கோலிவுட்டில் வரவேற்பில்லை.

கோலிவுட்டில் கலைக் குடும்பம் என்று அழைக்கப்படும் விஜயக்குமார் - மஞ்சுளா வீட்டில் தடுக்கி விழுந்தால் ஒருசினிமா ஸ்டாரின் மீதுதான் விழ வேண்டும். அத்தனை நட்சத்திரப் பட்டாளம்.

ஆனால் என்ன காரணமோ விஜயகுமாரும், மஞ்சுளாவும் பெயர் வாங்கிய அளவுக்கு மற்றவர்களால் பிரகாசிக்கமுடியவில்லை. வனிதா, ப்ரீத்தி, அருண்குமார் என எல்லாரும் ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டினார்கள். எந்தப்படமும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.

விஜயகுமார் வாரிசுகள் நடித்தால் படம் பிளாப்தான் என்ற சென்டிமெண்ட் இயக்குனர்களைத் தாக்கவே,வாய்ப்புகள் இழந்து வனிதாவும், ப்ரீத்தியும் கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலானார்கள்.

சண்டை, நடனம்,நடிப்பு என எல்லாத் திறமையும் இருந்தும் அருண்குமாரால் மேலே வர முடியவில்லை.

இதற்கிடையே, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஸ்ரீதேவி, காதல் வைரஸ் என்ற அட்டர் பிளாஃப் படத்தில்கதாநாயகியானார்.

அடுத்து வந்த ப்ரியமான தோழி கொஞ்சம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ஆனால்என்ன பிரயோசனம்? வாய்ப்புகள் தான் வரவில்லை.


தெலுங்குப் பக்கம் போய் ஒன்றிரண்டு படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்தவருக்கு தனுஷ்சிபாரிசு மூலம் தேவதையைக் கண்டேன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தனுசும், ஸ்ரீதேவியும் நல்ல நண்பர்களாம்.

ஆனால் இந்தப் படமும் எப்போது வரும் என்று தெரியவில்லை. காரணம் தனுசின் அப்பா கஸ்தூரிராஜாமளமளவென்று சுள்ளான், ட்ரீம்ஸ், ஒடிப் போலாமா, அது ஒரு கனாக்காலம், ராகவா படங்களுக்குஅட்வான்ஸ்களை வாங்கிக் குவித்ததில், எந்தப் படம் எப்போது வரும் என்று தெரியாத நிலை.

இதனால் தமிழ் ரசிகர்கள் எங்கே தன்னை மறந்து விடுவார்களோ என்ற கலக்கத்தில் இருந்த ஸ்ரீதேவிக்கு ஆறுதல்அளிக்கும் வகையில், தெலுங்கில் தருணுடன் அவர் நடித்த ஒரு படம், உயிராய் நினைத்தேன் என்ற பெயரில்தமிழில் டப் செய்யப்படுகிறது.

ஒரிஜினாலிட்டிக்காக வடிவேலுவின் காமெடியை சேர்த்திருக்கிறார்கள். மனிதர் ஒன்பது வேடங்களில் நடித்துகலக்கியிருப்பதாக ஸ்ரீதேவியே கூறுகிறார். வாய்ப்புகள் குவியாததற்காக வருத்தப்படுகிறீர்களா என்று யாராவதுகேட்டால், எனக்கென்ன வயசா ஆகிவிட்டதே, எனக்கும் காலம் வரும், அப்போது அசத்துவேன் என்கிறார்சோகத்தை மறைத்துக் கொண்டு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil