»   »  ஸ்ரீகாந்த் ஒரு வரம் - வந்தனா

ஸ்ரீகாந்த் ஒரு வரம் - வந்தனா

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீகாந்த் எனக்குக் கிடைத்த வரம் என்று அவரை மணக்கப் போகும் வந்தனா கூறியுள்ளார்.

ரோஜாக் கூட்டம் மூலம் தமிழில் நடிக்க வந்தவர் ஸ்ரீகாந்த். அதற்குப் பிறகு அவருக்கென்று ஒரு இடம் கிடைத்து நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் ஸ்ரீகாந்த்தின் மார்க்கெட் படு சூடாக இல்லாமல் நிதானமாகவே பிக்கப் ஆனது.

இடையில் சினேகாவுக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் காதல் என்று செய்தி கிளம்பியது. அதற்கு முன்பு பூமிகாவுடன் இணைத்துப் பேசப்பட்டார் ஸ்ரீ. இந்த நிலையில்தான் ஸ்ரீகாந்த்துக்கும், வந்தனாவுக்கும் அவரது பெற்றோர் கல்யாணம் நிச்சயம் செய்துள்ளனர்.

தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் வந்தனாவை வெகுவாகப் புகழந்து பேசியிருந்தார் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் வந்தனாவும் தனது வருங்கால கணவரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

எட்டு மாதங்களுக்கு முன்பே கல்யாணம் குறித்துப் பேசி விட்டனராம். இதனால் சின்னதாக ஒரு காதலையும் முடித்து விட்டு கல்யாணத்திற்கு ரெடியாகியுள்ளாம் ஸ்ரீகாந்த்-வந்தனா ஜோடி.

ஸ்ரீகாந்த் குறித்து வந்தனாவிடம் கேட்டபோது, அவரது ரோஜாக்கூட்டம் முதல் கிழக்குக் கடற்கரைச் சாலை வரை அத்தனை படங்களையும் நான் பார்த்துள்ளேன்.

இதை காதல் கல்யாணம் என பலரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. ஒருவேளை கல்யாணத்திற்கு முன்பு காதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் நிச்சயம் ஸ்ரீகாந்த்தை மறுத்திருக்க மாட்டேன்.

இருவரும் நல்ல நண்பர்கள். கல்யாணத்திற்கு முன்பே இருவரும் மிகவும் நெருங்கி விட்டோம். எனது குடும்பத்தாருடன் நன்கு பழகி ஒட்டிக் கொண்டு விட்டார். அவர்களுக்கும் ஸ்ரீகாந்த்தை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

ஸ்ரீகாந்த் எனக்குக் கிடைத்தது நான் செய்த பாக்கியம், வரம். கல்யாணத்திற்குப் பிறகு ஸ்ரீகாந்த்தின் திரையுலக வாழ்க்கையில் நல்ல மாற்றம் தென்படும். அவருக்கு நான் அனைத்து வகையிலும் உதவியாக இருப்பேன் என்றார் நந்தனா.

நல்லாருங்க.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil