»   »  சோகத்தில் வந்தனா

சோகத்தில் வந்தனா

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீகாந்துக்கும், தனக்கும் நிச்சயமான கல்யாணம் ரத்தாகி விட்டதால் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார் மணப்பெண் வந்தனா. தனக்கும், தன் மீதான பண மோசடி குற்றச்சாட்டுக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் அப்பாவி என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கும், அவரது தோழியான வந்தனாவுக்கும் இடையே வரும் ஜூன் 18ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்து கொண்டிருந்த நிலையில், வந்தனா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சென்னை கனரா வங்கி சார்பில் ரூ. 18 கோடி கடன் பெற்று அதை மோசடி செய்திருப்பதாக செய்திகள் வெளியானது.

மேலும் வந்தனாவின் அண்ணன் ஹர்ஷவர்த்தன் மீது 4 மோசடி வழங்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீகாந்தின் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக கல்யாண வேலைகளை நிறுத்த ஸ்ரீகாந்த்தின் தந்தை கிருஷ்ணமாச்சாரி உத்தரவிட்டார். பத்திரிக்கை அடிக்கும் பணியும் நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த அதிரடி நிகழ்வுகளால் வந்தனா நிலைகுலைந்து போயுள்ளார். கண்ணீரும், கம்பலையுமாக உள்ளாராம். தனக்கும், இந்த மோசடிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வந்தனா கூறுகையில்,

என் பெயரில் ஒரு ரூபாய் கூட எந்த வங்கியிலும் கடன் இல்லை. வழக்கும் இல்லை. என்னுடைய கையெழுத்து எதிலும் இல்லை. என்னை நம்பி ரூ. 18 கோடி யார் கொடுப்பார்.

அண்ணன் குடும்பத்திற்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அண்ணனின் கடனுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நிச்சய தார்த்தத்திற்கு கூட அவர் வரவில்லை.

தேவையில்லாமல் அண்ணனிடம் தொடர்புபடுத்தி, திருமணத்தை கெடுக்க நினைக்கிறார்கள். 2 நாட்களாக ஸ்ரீகாந்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னுடைய வாழ்க்கையே போய்விட்டது.

நான் ஏன் ஸ்ரீகாந்திடம் பொய் சொல்லி திருமணம் செய்ய வேண்டும். 2 வருடம் நாங்கள் ப்ரண்ட்ஸ் ஆக உள்ளோம். பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நான் சின்ன பொண்ணு, என் வாழ்க்கையை கெடுத்துவிட்டார்கள். திருமணத்துக்கு எல்லா வேலையும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் யாரோ உள்நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்பியுள்ளனர்.

எங்கள் திருமணத்தை நிறுத்த மாட்டார்கள் என நம்புகிறேன். எல்லோரது ஒத்துழைப்பும் இருந்தால் உண்மை அவர்களுக்கு புரியும் என்றார் வந்தனா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil