»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

தனக்கு நிறைய நடிகைகள் கேர்ள் பிரெண்ட்ஸாக இருக்கிறார்கள் என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

மாடலிங்கிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் ஸ்ரீகாந்த். அதனால் பெர்ஸனாலிட்டிக்கு குறைச்சல் இல்லாத ஆள்.நடிகைகளைப் பார்த்து மட்டும்தான், எப்போது கல்யாணம் என்று கேட்க வேண்டுமா? ஒரு சேஞ்சுக்குஸ்ரீகாந்த்தைப் பார்த்து அந்தக் கொக்கியைப் போட்டோம்.

கல்யாணமா எனக்கா என்று கேட்டவர், இப்போதுதான் எனக்கு 25 வயதாகிறது. நான் சாதிக்க வேண்டியது நிறையஇருக்கிறது. அதன் பிறகுதான் திருமணம். அது காதல் திருமணமா என்பதை இப்போது கூற முடியாது என்றுநழுவினார். விடாமல் அவரைப் பேசவைத்தபோது, தொடர்ந்து கூறியதாவது:

மாடலிங் செய்து கொண்டிருந்தபோது, ஒருமுறை எனது புகைப்படம் பத்திரிகையில் வந்தது. அதைப் பார்த்துவிட்டுஒரு இயக்குநர் என்னை நடிக்க அழைத்தார். நானும் போனேன். ஆனால் படம் தொடங்கப்படவேயில்லை. பிறகுரோஜாகூட்டத்தில் நடிக்க சசி அழைத்தார். எம்சிஏ படிப்பை முதல் வருடத்தோடு நிறுத்திவிட்டு நடிக்கஆரம்பித்தேன்.

நான் சென்டிமெண்ட் பார்ப்பவன். முன் கோபி. அதே சமயம் எல்லோரிடமும் நட்பாகப் பழகப் விரும்புவேன்.நண்பர்கள் யாராவது எனக்குத் துரோகம் செய்தால் மனம் உடைந்து போகும்.

விஜய், அஜீத் ஆகியோருடன் நான் போட்டியில் இல்லை. அவர்கள் எனக்கு சீனியர்ஸ். நான் இப்போதுதான்சினிமாவுக்கு வந்தவன்.

காதல், சண்டை என எல்லா கேரக்டர்களையும் சிறப்பாக நடிக்கவே நான் விரும்புகிறேன். இது மட்டும்தான்செய்வேன் என்று நான் கூறுவதில்லை.

ஜூட் படத்தில் திரைக்கதையில் சில தவறுகள் நேர்ந்ததால் படம் ஓடவில்லை. ஆனாலும் முதல் வாரத்தில் அதிகவசூலை ஈட்டித் தந்தது. அதே வசூல் தொடர்ந்திருந்தால் படம் ஹிட்டாகியிருக்கும். இருந்தாலும்விநியோகஸ்தர்களுக்கு அப்படத்தால் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை.

இப்போது நான் நடித்து வரும் சதுரங்கம் படம் காதல் கதை. பத்திரிகை நிருபர் ஒருவர் காதல் வலையில் விழுந்தால்என்னவாகும் என்பதுதான் கதை. சோனியா அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறேன்.

ஸ்னோகவுடன் நடிக்கும் போஸ் ஒரு அதிரடி படம். இதில் கமாண்டோ படை வீரனாக வருகிறேன். கடமைக்காகஒருவன் என்னவெல்லாம் செய்யத் துணிவான் என்பதே படத்தின் கதை.

இதையடுத்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் முழுக்க முழுக்க காதல் படம் ஒன்றில் நடிக்க உள்ளேன். அடுத்துகனகவேல் ஒரு ஆக்ஷன் படம்.

சினிமா உலகில் எனக்கு தோழிகள் பலர். பூமிகா, ஸ்னேகா, மீரா ஜாஸ்மின், சோனியா அகர்வால் என என்னுடன்நடித்த எல்லோருமே எனது தோழிகள். என்னுடன் நடிக்காத நடிகைகள் சிலர் கூட தோழிகளாக உள்ளனர்.

எல்லோரிடமும் நட்புறவு கொள்வது அவசியம் என கருதுபவன் நான். என்னுடன் நடிப்பவர்களுக்கு நான்சிபாரிசும் செய்திருக்கிறேன். பூமிகாவுக்காக நான் ஒரு முறை சிபாரிசு செய்திருக்கிறேன்.

ஹீரோயின்கள் மட்டுமல்ல, ஹீரோக்களிலும் எனக்கு நிறைய பேர் நண்பர்கள் உண்டு. விக்ரம் எனக்கு குளோஸ்பிரெண்ட். அவர் கொடுக்கும் அட்வைஸ் எல்லாம் எனது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது என்று நமதுகேள்விகளுக்கு சளைக்காமல் பதில் கூறினார்.

ஸ்னேகா மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் பிரெண்டாமே என்ற கேள்வியை மட்டும் கேட்கவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil