»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீண்ட நாட்களாக சான்ஸ் இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் சில வாய்ப்புக்கள் கிடைத்தன. இதனால்மகிழ்ச்சியுடன் இருந்தார். ஆனால், இப்போது அந்தப் படங்களும் ட்ராப் செய்யப்பட்டுவிட்டன.

இதனால் இனியும் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என்று காத்திருந்து பாட்டியாகிவிடாமல் கைக்கு வரும் எந்தவாய்ப்பையும் ஏற்றுக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.

இரண்டாவது நாயகியாகவும் நடிக்கத் தயாராகி விட்டார். சின்ன ரோல்களில் நடிக்கவும் தயார் என்று பலதயாரிப்பாளர்களுக்கு ரகசியமாக அழைப்பும் விடுத்திருக்கிறார்.

இதற்கு கைமேல் பலனும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. முதலில் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி தனது மகன்ஜீவாவை வைத்துத் தயாரிக்கும் இரண்டாவது படமான தித்திக்குதேயில் ஸ்ருத்திகாவை இரண்டாவது ஹீரோயின்ஆக்கிவிட்டார். இதில் ஒரு பாட்டுக்கு டான்சும் ஆடியிருக்கிறார் ஸ்ருத்திகா.

இதையடுத்து நளதமயந்தியில் தான் தேடி வந்த ஒரு துணை ஹீரோயின் கேரக்டருக்கு ஸ்ருதிகாவைப் பிடித்துப்போட்டுவிட்டார் படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன்.

சின்ன ரோல்கள்தான் என்றாலும் ஆர்.பி. செளத்ரி சார் மற்றும் கமல் சார் தயாரிப்பாயிற்றே என்று பெருமையுடன்கூறிக் கொள்கிறார் ஸ்ருதிகா.

ரொம்ப நல்லா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதிகாவின் முதல் சுற்றில் தேறவில்லை. துணை ரோல்கள்மூலமாவது முன்னுக்கு வருகிறாரா பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil