»   »  சிங்கப்பூர், அமெரிக்காவில்கோலிவுட் கலை விழா

சிங்கப்பூர், அமெரிக்காவில்கோலிவுட் கலை விழா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் பிரமாண்ட கலை விழாவை நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குப் புதிய கட்டடம் கட்ட தேவையான நிதி இந்த விழா மூலம் வசூலிக்கப்படவுள்ளது.

விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பிரமாண்ட கலை விழா நடத்தப்பட்டது. நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க அந்த கலை விழா நடந்தது. அந்த கலைவிழாவில் சூப்ரபர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் உள்பட அத்தனை பேரும் கலந்து கொண்டனர்.

அந்தக் கலைவிழாவில் ரூ. 6 கோடி வசூல் ஆனது. அந்த பணத்தைக் கொண்டு நீண்ட காலமாக சங்கத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த கடனை அடைத்தார் விஜயகாந்த். ஒரு வழியாக கடன் தொல்லையிலிருந்து மீண்டது நடிகர் சங்கம்.

தற்போது தலைவராக உள்ள சரத்குமாரும், கேப்டன் பாணியில் பிரமாண்ட கலைவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த கலைவிழாவில் வசூலாகும் நிதியைக் கொண்டு, நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்ட வணிக வளாகத்தை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து சரத்குமாரும், துணைத் தலைவர் ராதாரவியும் செய்தியாளர்களிடம் கூறுகையில், நடிகர் சங்கத்திற்குப் புதிய கட்டடம் கட்டுவதற்காக, தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள் பங்குபெறும் தமிழ் சினிமா-75 ஆண்டுகள் என்ற கலைநிகழ்ச்சி சிங்கப்பூரில் ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் ராதிகாவின் ராடான் நிறுவனம் செய்து வருகிறது. வழக்கமான நிகழ்ச்சியாக இல்லாமல், பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நட்சத்திர கலைவிழா நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் இது நடைபெறும் என்று சரத்தும், ராதாரவியும் தெரிவித்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவில் பங்கேற்கக் கூடும் என்று தெரிகிறது. மற்ற முன்னணி ஸ்டார்களையும் கலந்து கொள்ள வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுதவிர மலையாளம் மற்றும் தெலுங்கு நடிகர், நடிகைகளையும் இந்த விழாவில் பங்கேற்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil