»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

மச்சி நாயகி சுபா புன்ஜா திருடிய இதயத்தை என்ற படத்தில் புதுமுகம் ரோஹனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மச்சி படம் மூலம் பெரிய அளவுக்கு வந்து விட முடியும் என்று நினைத்த ஜூனியர் சிவாஜியும், இசையமைப்பாளர் ரெஹ்னாவும்(ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை) சத்தமே இல்லாமல் இருக்க, அந்தப் படத்தில் அறிமுகமாகிய சுபா புன்ஜா அமர்க்களமாக அடுத்த படத்தில்நடித்து வருகிறார்.

பார்வை ஒன்று போதுமே, பேசாத கண்ணும் பேசுமே போன்ற மகா தோல்விப் படங்களை இயக்கிய முரளிகிருஷ்ணாதான் இந்தப் படத்தைஇயக்குகிறார். (எப்படிதான் தயாரிப்பாளர்களைப் பிடிக்கிறாரோ?)

புதுமுகம் ரோஹன், சுபா புன்ஜா ஆகியோருடன் குணால், நிழல்கள் ரவி, ராம்ஜி, அஞ்சலி தேவி ஆகியோர் படத்தில் நடிக்கிறார்கள்.

முதல் படம் போணியாகாவிட்டாலும் இரண்டாவது படம் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் சுபா. பிறந்தது மங்களூர், படித்ததுபெங்களூர், பிழைப்பது சென்னை என்று இருக்கும் சுபாவை சந்தித்து, சினிமாவிற்கு எப்படி வந்தீர்கள் என்ற தொன்று தொட்டு கேட்கப்படும்கேள்வியைக் கேட்டோம்.

தமிழ் ரசிகர்களை உய்விக்கும் இந்தக் கேள்விக்கு சுபா கூறிய பதிலாவது:

படிக்கும்போதிருந்தே சினிமா என்றால் எனக்கு உயிர். ஸ்கூலில் டான்ஸ், டிராமா என்று எல்லாத்திலேயும் பட்டையைக் கிளப்புவேன்.அப்படியே மாடலிங்கிலும் நுழைந்தேன். அவிட்டா சிப்ஸ், கசானா ஜூவல்லரி விளம்பரங்களில் நடித்தேன்.

2003ல் சென்னையில் நடந்த மாடலிங் போட்டியில் முதல் பரிசு எனக்குக் கிடைத்தது. அந்த சமயத்தில் தான் மச்சி பட வாய்ப்பு வந்தது.

நிறைய நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்திருந்ததால், கேமரா பயமே எனக்கு இல்லை. நிஜத்தில் நான் ஜாலியான பெண்.படத்திலும் அதே கேரக்டர் என்பதால் ரசித்துச் செய்தேன்.

மச்சி படத்தில் என் சொந்தக்குரலில்தான் பேசி நடித்தேன். உங்களது வாய்ஸ் நன்றாக இருக்கிறது, அழகாக தமிழ் பேசுகிறீர்கள் என்றுஇயக்குநர் சொன்னதால் சொந்தமாகவே டப்பிங் பேசினேன்.

தமிழ், துளு, கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேச எனக்குத் தெரியும்.

கன்னடம் எனது தாய்மொழி என்றாலும் தமிழ் படம் மூலம் அறிமுகமாகத்தான் நான் விரும்பினேன். ஏனெனில் புதியவர்களை வரவேற்று,ஆதரவு கொடுப்பதில் தமிழ் திரையுலகினருக்கு ஈடில்லை.

எனக்கு நடிகை ஸ்ரீதேவி போல் வரவேண்டும் என்று ஆசை. நடிப்பு, கிளாமர் இரண்டிலும் கலக்கியவர் அவர். நானும் அவர் போல நடிக்கவிரும்புகிறேன் என்றார் சுபா புன்ஜா.

அப்புறம் வாசகர்களுக்கு ஒரு பொது அறிவு மேட்டர், புன்ஜா என்பது அவரது குடும்பப் பெயராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil