»   »  தேடி வரும் வெற்றி-சுஹாசினி

தேடி வரும் வெற்றி-சுஹாசினி

Subscribe to Oneindia Tamil


எனக்கு சிறு வயது முதலே போட்டி என்றால் ரொம்பப் பிடிக்கும். என்னை விட யாருமே முதலில் வந்து விடக் கூடாது என்று ரொம்ப கவனமாக இருப்பேன் என்கிறார் நடிகை சுஹாசினி மணிரத்னம்.

Click here for more images

கேமரா உமனாக, பின்னர் நடிகையாக, அதன் பிறகு தயாரிப்பாளராக, இயக்குநராக பல அவதாரம் எடுத்தவர் சுஹாசினி. இப்போது டிவி பக்கம் ஒதுங்கி விட்டார் சுஹாசினி.

கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுஹாசினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், எனக்கு சிறு வயதிலிருந்தே போட்டி மனப்பான்மை உண்டு. யாரும் நம்மை முந்தி விடக் கூடாது என்ற துடிப்போடு இருப்பேன்.

பள்ளியில் முதல் ரேங்க்கை வேறு யாரும் வாங்கி விடக் கூடாது என்பதற்காக விழுந்து விழுந்து படிப்பேன். எனக்குப் போட்டி என்றால் ரொம்பப் பிடிக்கும். நான்தான் முதலில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் போட்டி போடுவேனே தவிர மற்றபடி வேறு எந்த வகையிலும் நான் போட்டி போட மாட்டேன்.

ஆனால் இந்த போட்டியெல்லாம் 19 வயதில் சினிமாவில் நடிக்க வந்த பிறகு போயே போய் விட்டது.

நான் எப்பவுமே சிம்பிளாக இருக்கத்தான் விரும்புவேன். ஆடம்பரம் சுத்தமாக பிடிக்காது. படத்திற்கேற்ப என்னை சுத்தமாக மாற்றிக் கொள்வேன்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. நம்முடைய வேலையை சரியாக செய்யும் போது பணமும், வெற்றியும் தானாக தேடி வரும். நாம் அதனை தேடி செல்ல வேண்டியதில்லை என்றார் சுஹாசினி.

Read more about: suhasini
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil