கொச்சையா பேசாதீங்க.. எங்களுக்குள் எதுவுமே நடக்கல.. ஆத்திரப்பட்ட தர்ஷன்..எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில், சக்தி, ஜனனி இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஜனனி, என்னை மன்னித்துவிடு சக்தி அனைவரும் போல மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என நீ ஆசைப்பட்டு தான் என்னை கல்யாணம் செய்து இருப்பாய். ஆனால், நான் தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை கொண்டு வந்து உன்னுடைய நிம்மதியை நான் கேட்கிறேன் என சொல்லி வருத்தப்படுகிறாள். அப்போது சக்தி, எனக்கு ஏத்த சரியான பார்ட்னர் நீதான், தயவுசெய்து தேவையில்லாமல் இப்படி பேசி என்னை கஷ்டப் படுத்தாதே என்கிறான்.
அதைத்தொடர்ந்து, நான் சொல்லும் விஷயத்தை யாரிடமும் சொல்லாதே, அண்ணனுடைய அறையில் நான் போனை தேடி சென்ற போது ஒரு லெட்டரை எடுத்தேன். அது 30 வருஷத்துக்கு முன்பு ராமேஸ்வரத்திலிருந்து யாரோ ஒரு பெண் எழுதிய கடிதம், அண்ணனுக்கு ராமேஸ்வரத்தில் ஏதோ ஒரு மர்மமான வாழ்க்கை இருக்கிறது. அது என்ன என்பது தெரிந்து கொள்வதற்காக நான் ராமேஸ்வரத்திற்கு நான் செல்ல வேண்டும் என சொல்கிறான். உடனே ஜனனி, அப்படி என்ன இருந்தது கடிதத்தில் இருந்தது என்று கேட்க, அதை பற்றி எல்லாம் இப்போது நாம் பேச வேண்டாம். அது என்ன என்று தெரிந்து கொண்டு நான் சொல்கிறேன் என்கிறான். அப்போது ஜனனி, அதற்கு முன்பாக கவின் நண்பனிடம் இருந்து அந்த வீடியோவை வாங்க வேண்டும் என சொல்கிறாள். அதன்பின், போட்டோகிராபர் கவினின் நண்பனுக்கு, சக்தி போன் செய்து அந்த வீடியோவை கேட்கிறான். கவினின் நண்பனும் வீடியோ தருவதாக சொல்ல, சக்தி அவனுக்கு லொகேஷன் அனுப்பி அந்த இடத்திற்கு வர சொல்கிறான். சக்தி, ஜனனி இருவருமே அவரை பார்க்க செல்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இந்த நேரத்தில்,கதிர், தர்ஷன், பார்கவி இருக்கும் அறையின் கதவை வேகமாக தட்டுகிறான். அப்போது நந்தினி ஓடி வந்து, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா, நீயும் கல்யாணமானவன் தானே, எதற்காக இப்படி நடந்து கொள்கிறாய் என திட்டுகிறாள். அந்த நேரத்தில் கரிகாலன், கல்யாணம் ஆனவன் தான் கதவை தட்டக்கூடாதா, அப்போ நான் கதவை தட்டுகிறேன் என கதவை தட்டுகிறான். இதைப்பார்த்த தர்ஷினி, கரிகாலனை தள்ளிவிட்டு உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா என கேட்கிறாள். அப்போது, உங்க ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கு, இது எல்லாம் ஒரு வாரத்திற்கு தான். அதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என சொல்கிறான்.
அடுத்து நடக்கப்போவது என்ன: அந்த நேரம் ஜனனி கீழே இறங்கி வந்து, எல்லா விஷயத்தையும் கண்டுபிடிப்பதற்கு எனக்கு ஒரு வாரம் போதும். அதன் பிறகு என்ன நடக்கிறது என பார்க்கலாம் என சொல்கிறான். அந்த நேரம் ஞானம், கண்டுபிடிச்சேன்,கண்டுபிடிச்சேன் என்றால் எதை கண்டுபிடிச்ச என கேட்கிறான். உடனே சக்தி, நான் என்ன கண்டுபிடிச்சேன் என்று அண்ணனிடம் கேள், அவர் எதற்கான அமைதியாக இருக்கிறார் என்றும் கேள். அவர் சொல்வார் என சொல்கிறான். இதைக்கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அமைதியாக இருக்கின்றனர்.
கொந்தளித்த சக்தி: இன்றைய எபிசோடில், சக்தியும் ஜனனியும் வீடியோ கிராபரை சந்தித்து பேசிவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். அப்போது, ஞானம், சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்க இதனால் ஆத்திரமடைந்த சக்தி தேவையில்லாமல் பேசினால் அவ்வளவு தான் என சொல்கிறான். அப்போது ஞானம், பொண்டாட்டியின் முந்தானையை பிடித்து அலைந்து கொண்டிருக்கும் நீ எல்லாம் யாரைப் பற்றியும் பேசக்கூடாது என்று சொல்ல ஆத்திரப்படும் சக்தி, இனிமேல் நீ பேசிக்கொண்டு இருப்பதெல்லாம் என்னால் கேட்டுக் கொண்டு இருக்க முடியாது. ஒரு அடி அடித்தால் அது பத்தாக திரும்ப கிடைக்கும் ஜாக்கிரதையாக இருங்க என மிரட்டுகிறான்.
பின், நந்தினி, காலையிலிருந்து யாரும் சாப்பிடவே இல்லை. தினமும் வெளியில் வாங்கி சாப்பிட முடியாது. சமைக்க ஆரம்பிக்கலாமா என கேட்கிறாள். அப்போது ஜனனி, கொஞ்சம் அமைதியாக இருங்க அக்கா எல்லாம் சரியாகட்டும் என்கிறாள். அந்த நேரம் தர்ஷன் தூங்கிக் கொண்டு இருக்க அப்போது சக்தி இந்த நேரத்தில் என்ன தூக்கம் என எழுப்புகிறான். உடனே நந்தினி நேற்று தான் திருமணமாகி இருக்கு அதன் களப்பில் தூங்குகிறான் என சொல்ல, ஆத்திரப்படும் தர்ஷன், நீங்கள் நினைப்பது போல எதுவுமே நடக்கவில்லை தயவு செய்து கிண்டல் செய்யாதீர்கள் என கோவப்பட்டு கத்துகிறான்..


Click it and Unblock the Notifications











