பார்கவியின் வாழ்க்கையை கெடுக்க வரும் அன்புக்கரசி..கதறி அழும் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன், பார்கவி இருவருக்கும் தல தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நேரத்தில், ரேணுகா, நந்தினியின் அம்மா வீட்டுக்கு வந்ததைப்பார்த்து, கதிர் அவர்களை தரகுறைவான வார்த்தைகளால் பேசி வெளியில அனுப்புகிறான். இதைப்பார்த்து ஆத்திரப்படும் நந்தினி, நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க, உங்களை யாரு கூப்பிட்டது. இவர்களிடம் எத்தனை முறை அவமானப்படுவீங்க. இது வீடு இல்ல சுடுகாடு. நாங்களே தெரியாமல் வாழ்க்கைப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் இங்கே வாழ்த்து கொண்டு இருக்கிறோம். வீட்டை விட்டு போன மனுஷன் எங்கே போனார் என்றே தெரியவில்லை. இன்னும் வாரத்தில் இந்த வீட்டில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. தயவு செய்து வீட்டுக்கு போங்க என்று சொல்லி அவர்களை அனுப்பி வைக்கின்றனர்.
மறுபக்கம் ராமேஸ்வரத்தில் இருக்கும் குணசேகரன், தனது நண்பனிடம் ராமேஸ்வரம் விஷயம் வெளியே தெரிந்தால் இத்தனை நாட்களாக நான் கட்டிக்காத்த, என்னுடைய கௌரவம் போய்விடும். அந்த விஷயம் வெளியில் தெரியவே கூடாது என்கிறார். அப்போது குணசேகரனின் நண்பர், அந்த விஷயம் யாருக்குமே தெரியாது, நீ பயப்படாத குணசேகரா என சொல்கிறார். உடனே குணசேகரன் இந்த விஷயத்தை பற்றி தெரிந்தவர்கள் நீயும் நானும் மட்டும் தான். வேற யாராவது இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள இங்கே வந்தார்கள் என்றால், அவர்கள் என்னுடைய ரத்தமாக இருந்தாலும் அவர்களை இங்கேயே வெட்டி புதைத்து விடு என சொல்கிறார். அதைத்தொடர்ந்து கதிருக்கு ஃபோன் செய்யும் குணசேகரன், ஜனனி, சக்தி இருவரும் அந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. வெளியில் போனார்கள் என்றால் பல விஷயத்தை நோண்டி எடுப்பார்கள். அதனால் அவர்கள் வெளியில் போகாதபடி பார்த்துக்கொள், அப்படி மீறி வெளியில் போனார்கள் என்றால், ஏதாவது பெரிய ரகளை செய் என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் அறிவுக்கரசி சிறையில் இருப்பதால் அவளை எப்படியாவது வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அன்புகரசி மற்றும் முல்லை இருவரும் குணசேகரன் வீட்டுக்கு வந்து உதவி கேட்கின்றனர். இவர்களைப் பார்த்து ஆத்திரப்படும் கதிர், எதற்காக இங்கே வந்தீர்கள் என கேட்கிறார். அப்போது முல்லை, சிறையில் இருக்கும் அறிவுக்கரசியிடம் பேசும்படி சொல்கிறான். அப்போது அறிவுக்கரசி, நான் அவர்களை அங்கே போக வேண்டாம் என்றுதான் சொன்னேன். என் மீது இருக்கும் பாசம் காரணமாக அவர்கள் அங்கே வந்து விட்டார்கள். அவர்களை அனுப்பி வைத்து விடுங்கள் என சொல்கிறாள். அதை தொடர்ந்து, முல்லையிடம் பேசும் அறிவுக்கரசி என் புள்ளைய எதுக்கு அங்கு கூட்டிக்கொண்டுபோன, உன்னால் முடிந்தால் அட்வகேட்டை வைத்து என்னை வெளியில் எடு, இல்லை என்றால், ஜெயிலேயே சாகிறேன். அதற்காக என் மகளை அங்கே அனுப்பி கஷ்டப்படுத்தாதே என்கிறாள். அதன் பின் முல்லை, அன்புக்கரசியிடம் வீட்டிற்கு போகலாம் வா.... அறிவு இங்கிருந்து போக சொல்லிவிட்டால் என்கிறான். அப்போது, விசாலாட்சி, எங்கேபோறீங்க, அன்புக்கரசி இங்கேயே இருக்கட்டும் என சொல்கிறாள். இதைக்கேட்டு ஜனினியின் டீம் மொத்தமும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கின்றனர். இதையடுத்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











