குணசேகரன் சொம்ப பயலா? தர்ஷனின் கதி என்ன? சக்தியிடம் சிக்கிய ஆதாரம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நந்தினி, தர்ஷன், சக்தி அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியே செல்வற்காக வர, குணசேகரன் அவர்களை கண்டுபிடித்து விடுகிறார். மாறு வேஷத்தில் இருந்தது நந்ததி தான் என தெரிந்து ஆத்திரப்படுகிறார். உடனே நந்தினி, தர்ஷனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. எங்களுக்கு வேறு வழி தெரியாமல் வேஷம் போட்டு தர்ஷனை கல்யாணத்தை நிறுத்த பார்த்தோம் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்படும் கதிர் நந்தினியை அடிக்கிறார். அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் அனைவருக்கும் இடையே கைகலப்பு நடந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றனர்.

அப்போது சக்தி, தர்ஷனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. இந்த திருமணத்தை நான் நடத்த விட மாட்டேன் என சொல்கிறான். இதனால், கோவத்தின் உச்சிக்கு சென்ற குணசேகரன், இதை சொல்வதற்கு நீ யாருடா... இந்த கல்யாணம் நடக்கும், நடந்தே தீரும், நீ ஆம்பளையாக இருந்தால் இந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி காட்டு என சவால் விடுகிறார். அதன்பின், அனைவரையும் மண்டபத்தைவிட்டு வெளியில் அனுப்பிவிட, அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் மண்டபத்திற்கு வெளியில் இருக்கின்றனர். அப்போது ஜனனியிடம் இருந்த ஃபோன் வருகிறது. அதில் பேசும் ஜனனி, நாங்கள் ரௌடிகளிடம் இருந்து தப்பித்துவிட்டோம். மண்டபத்திற்கு தான் வந்து கொண்டு இருக்கிறோம் என சொல்கிறாள். இதைக்கேட்ட சக்தி, நாங்கள் தர்ஷனை வெளியில் அழைத்து வரும் போது, அனைவரும் பார்த்துவிட்டார்கள். இப்போது எங்களை வெளியில் அனுப்பிவிட்டார்கள், பெரிய பிரச்சனை ஆகிவிட்டது என்று சொல்கிறான். உடனே ஜனனி சரி சக்தி, நீங்க கவலைப்பட வேண்டாம், நாங்க சரியான நேரத்திற்கு வந்துவிடுவோம் என்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மண்டபத்தில் அறிவுக்கரசி, வீடியோ கிராபரின் உடல் இல்லாததைப்பார்த்து பதற்றப்பட்டு, தனது அடி ஆட்களுக்கு ஃபோன் செய்கிறாள். அடி ஆட்கள், அவன் உடலை அடையாளம் தெரியாதபடி செய்துவிட்டோம். நீங்கள் இதுபற்றி எந்த கவலையும் படாமல் கல்யாண வேலையை பாருங்கள் என சொல்கிறான். இதை அடுத்து அறிவுக்கரசி, குணசேகரனிடம் வந்து கல்யாணத்தை கோவிலில் வைத்துக் கொள்ளலாம் நிச்சயமாக ஜீவானந்தமும் பார்கவையும் இங்கு வந்து பிரச்சனை செய்வார்கள் என சொல்கிறாள் . இதைக்கேட்டு ஆத்திரப்படும் குணசேகரன், அவர்களுக்கு பயந்து கொண்டு நான் கல்யாணத்தை கோவிலில் நடத்த வேண்டுமா? எல்லாம் எனக்கு தெரியும் என சொல்லிவிட்டு ரவுடி வீராவிற்கு ஃபோன் செய்கிறார். ரவுடி வீரா ஃபோனை எடுத்து அனைவரும் அங்கிருந்து காரில் தப்பி விட்டார்கள். அந்தக் காரை பின்தொடர்ந்து லாரி சென்று கொண்டிருக்கிறது சரியான நேரம் பார்த்து அவர்களின் கதையை முடித்துவிடுவார்கள் என சொல்கிறான்.

அதிர்ச்சி அடைந்த தர்ஷன்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க, வீடியோகிராபரின் நண்பன், அவனை காணாமல் தேடுகிறான். இதை கவனித்த நந்தினி, வீடியோகிராபர் எங்கே என்று தெரியவில்லை. நிச்சயமாக அந்த போனில் ஏதோ ஒரு ஆதாரம் இருக்கிறது. அதனால் தான் அந்த போனை குணசேகரன் மாமா தன்னுடைய அறையில் வைத்திருக்கிறார். அந்த போனை எடுத்தால் நிச்சயமாக பல விஷயம் நமக்கு தெரியவரும் என சொல்கிறாள். இந்த நேரத்தில் அனைவரும் மண்டபத்தில் இருக்கின்றனர். வீட்டிற்கு ஃபோனால் அந்த ஃபோனை எடுத்து விடலாம் என சக்தி வீட்டுக்கு வந்து ஃபோனை குணசேகரன் அறையில் தேடுகிறார். ஆனால், போன் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, தன்னுடைய சொத்தை சரிபாதியாக அனைவருக்கும் புரிந்துதாக குணசேகரன் கொடுத்த பாத்திரம் அங்கே இருக்கிறது. இதைப்பார்த்து சக்தி அதிர்ச்சி அடைகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X