»   »  1.5 கோடி கேட்கிறாரா சுந்தர்.சி?

1.5 கோடி கேட்கிறாரா சுந்தர்.சி?

Subscribe to Oneindia Tamil

வீராப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி.யைத் தேடி நிறைய படங்கள் வரத் தொடங்கியுள்ளன. அதேசமயம், ஹீரோவாக நடிக்க ரூ. 1.5 கோடி சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகின்றன.

ஆனால், அதை சுந்தர் மறுக்கிறார்.

பிரபல நடிகர்களை பின்னாலிருந்து இயக்கி வந்த சுந்தர் தலைநகரம் மூலம் திடீரென ஹீரோவாக அவதாரம் எடுத்தார். முதல் படமே கிளிக் ஆகி விட்டதால், அவர் குறித்த எதிர்பார்ப்பு எகிறியது. சின்னதாக இடைவெளி விட்ட சுந்தர் அடுத்து வீராப்பு படத்தில் நடித்தார்.

வீராப்பு சூப்பர் ஹிட் பட வரிசையில் சேர்ந்துள்ளதால், சுந்தர்.சியும் வெற்றிகரமான நாயகனாக உயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் படத்தில் நடிக்க ரூ. 1.5 கோடி சம்பளம் கேட்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

இது குறித்து அவரிடம் கேட்டால் திட்டவட்டமாக மறுக்கிறார்.

வீராப்பு படத்தின் வெற்றியை பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து கொடுத்து கொண்டாடிய சுந்தர் மனம் விட்டுப் ேபசினார்.

அவர் கூறுகையில், எனக்கு கதைதான் முக்கியம், சம்பளம் அல்ல. படத்தின் கதை பிடித்திருந்தால்தான் நான் நடிப்பேன். மற்றபடி நான் ரூ. 1.5 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுவதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.

வீராப்பு அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. கேரளாவில் உள்ள எனது நண்பர்கள் கூட, இப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.

நான் எந்த இமேஜுக்குள்ளும் சிக்காத ஹீரோவாக இருக்க விரும்புகிறேன். நல்ல கதையுடன், தயாரிப்பாளர்களுக்கு அதிகம் செலவு வைக்காத இயக்குநர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். பெரும் பொருட் செலவிலான படங்களில் நடிக்க நான் விரும்பவில்லை.

புதிய ஐடியாக்களில் சேர்ந்து நடிக்கும்போது படமும் வெற்றி பெறும், நமக்கும் அதுதான் பாதுகாப்பு. கமர்ஷியல் ஹீரோவாக வெற்றி பெற நான் விரும்புகிறேன். என்னால் எந்தத் தயாரிப்பாளரும் வெறும் கையுடன் திரும்புவதை நான் விரும்ப மாட்டேன் என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil