For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Exclusive: சூப்பர் டூப்பர்ல துருவா இந்துஜா ஜெல் மட்டுமில்ல ஜொள்ளும் இருக்கு - அருண் கார்த்திக்

|
INDHUJA கு GLAMOUR நல்லா வருது | SUPER DUPER MOVIE INTERVIEW | FILMIBEAT TAMIL

சென்னை: சூப்பர் டூப்பர் படத்தில நாயகன் துருவா, நாயகி இந்துஜா இவங்க ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரியும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். நல்லா ஒர்க்கவுட் ஆகியிருக்குது. கேமராவும் நல்ல புகுந்து விளையாடியிருக்கு. மியூசிக்கும் நல்லா வந்திருக்கு. அந்த சீன் ஒரு மாதிரி ஜெல்லா வந்திருக்கு. சுருக்கமா சொல்லணும்னா ஜெல்லும் இருக்கு, ஜொள்ளும் இருக்கு என்றார் இயக்குநர் அருண் கார்த்திக். தன்னுடைய சூப்பர் டூப்பர் படத்தில் நடித்த நாயகி இந்துஜா பற்றியும், இந்த படத்தில் கிடைத்த இனிமையான அனுபவங்களை நம்முடைய ஃபிலிமி பீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

என்னோட சொந்த ஊர் ஈரோடு. சினிமா மேல இருந்த தீராத ஆசையினால நான் பார்த்துக்கிட்டு இருந்த பேங்க் வேலைய ரிஸைன் பண்ணிட்டுதான் சென்னைக்கு வந்தேன், சினிமால சேர்றதுக்கான வழியை தேடி கண்டுபிடிச்சு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடிச்சி. அதே மாதிரி நான் யார் கிட்டேயும் அசிஸ்டெண்ட்டா இருந்தது கிடையாது. எல்லாமே படங்களை பார்த்து கத்துகிட்டது தான்.

நாம படத்தை பார்க்கிறோம். அதுல ஒரு விஷயம் நடக்குது. அதுக்கு பின்னாடி என்ன நடக்குது. அதே மாதிரி ஒரு விஷயம் நடக்கலை, எதனால அந்த விஷயம் நடக்கலை, அந்த இடத்துல எதை மிஸ் பண்ணி இருப்பாங்க. அதுக்கு பின்னாடி என்ன நடக்குது அப்படிங்குறது நமக்கு புரியும். இது நிறைய படம் பார்த்தால் தான் நமக்கு அந்த அனுபவம் கிடைக்கும்.

அட பிக் பாஸ் வீட்ல இப்டிகூட நடக்குமா.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய சேரன்.. கவினுக்கு ஒரு சபாஷ் பார்சல்!

விளம்பரப்பணி தீவிரம்

விளம்பரப்பணி தீவிரம்

அறிமுக இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கத்தில் நாயகன் துருவா மற்றும் இளம் நாயகி இந்துஜா நடிக்கும் படம் சூப்பர் டூப்பர் திரைப்படம். வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியிடப்படும் இத்திரைப்படத்தை விளப்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறது.

வைரலான ஸ்னீக் பிக் வீடியோ

வைரலான ஸ்னீக் பிக் வீடியோ

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் மற்றும் ஸ்னீக் பிக் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இளசுகளை சூடேற்றி வருகிறது. இதுவரையிலும் இந்த வீடியோவை 3.5 லட்சம் பேர் பார்த்து ஏங்கிக்கிடக்கின்றனர். இப்படத்திற்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஜில் ஜில் ராணி

ஜில் ஜில் ராணி

சமீபத்தில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜில் ஜில் ராணி என்ற குத்துப்பாட்டை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்தப்பாடலில் நடிகை இந்துஜா செம்மையாக குத்தாட்டம் போட்டிருந்தார். இந்தப்பாடல், இளைஞர்களை கவர்வதாக இருந்தாலும், இதற்கு முன்பு நடித்த படங்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்திருந்ததால், இந்தப் பாடல் விமர்சனத்துக்கு உள்ளானது.

ஒண்ணுமில்லைன்னு சொல்லக்கூடாது

சூப்பர் டூப்பர் திரைப்படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. இருந்தாலும் கூட ரொம்ப ஜாக்கிரதையா செய்யவேண்டிய விஷயம் இது. படம் வெளியாவதற்கு முன்னாடியே சூப்பர் டூப்பர்ன்னு சொல்லிட்டாங்க. அதனால படத்துலே ஒண்ணுமில்லேன்னு யாரும் சொல்லிடக்கூடாது. அதனால் படத்தோட டைட்டிலை வச்சதுக்கு பின்னாடி கொஞ்சம் ரெஸ்பான்சிபிலா ஃபீல் பண்ணினோம்.

கமர்ஷியல் கிராமர் இருக்கு

கமர்ஷியல் கிராமர் இருக்கு

சொல்றது மட்டும் சூப்பர் டூப்பர்னு இருக்கக்கூடாது, படமும் சூபபர் டூப்பர்னு எல்லோரும் சொல்லணும், அதனால அதுக்குண்டான வேலைகளை நாங்க செய்ய ஆரம்பிச்சோம். இது வரைக்கும் நாம எத்தனையோ கமர்ஷியல் படங்கள் பாத்திருக்கோம். இதுவரைக்கும் நாம பார்த்த அத்தனை கமர்ஷியல் படங்கள்ல இருந்த அத்தனை கிராமரும் (Grammar) இந்த சூப்பர் டூப்பர் படத்துல இருக்கு.

சூப்பர் டூப்பர் புது அனுபவம்

சூப்பர் டூப்பர் புது அனுபவம்

அதையும் தாண்டி அங்கங்க புதுசா சில சுவையான காட்சிகளை அங்கங்க தெளிச்சிருக்கோம். ஏன்னா நான் ஒரு டைரக்டர் அப்படிங்குற முறையில ஏதாவது சொல்லணுமில்லையா. அதுக்காகவே சில விஷயங்களை நான் பண்ணியிருக்கேன். அதே மாதிரி அதை வேணுமின்னே திணிச்ச மாதிரி இல்லாம ரசிகர்களுக்கு அது ஒரு புது அனுபவமா இருக்கும்.

கொஞ்சம் லேட்டாயிடிச்சி

கொஞ்சம் லேட்டாயிடிச்சி

என்னோட சொந்த ஊர் ஈரோடு. சினிமா மேல இருந்த தீராத ஆசையினால நான் பார்த்துக்கிட்டு இருந்த பேங்க் வேலைய ரிஸைன் பண்ணிட்டுதான் சென்னைக்கு வந்தேன், அதுக்கான வழியை தேடி கண்டுபிடிச்சு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடிச்சி. அதே மாதிரி நான் யார் கிட்டேயும் அசிஸ்டெண்ட்டா இருந்தது கிடையாது. எல்லாமே படங்களை பார்த்து கத்துகிட்டது தான்.

அனுபவம் கிடைக்கும்

அனுபவம் கிடைக்கும்

நாம படத்தை பார்க்கிறோம். அதுல ஒரு விஷயம் நடக்குது. அதுக்கு பின்னாடி என்ன நடக்குது. அதே மாதிரி ஒரு விஷயம் நடக்கலை, எதனால அந்த விஷயம் நடக்கலை, அந்த இடத்துல எதை மிஸ் பண்ணி இருப்பாங்க. அதுக்கு பின்னாடி என்ன நடக்குது அப்படிங்குறது நமக்கு புரியும். இது நிறைய படம் பார்த்தால் தான் நமக்கு அந்த அனுபவம் கிடைக்கும். அதோடு, படங்களைப் பத்தி தெரிஞ்சவங்களோட அதைப்பத்தி டிஸ்கஸ் பண்றது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் மத்தவங்க எடுக்குற ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கறது. இப்படி எல்லாம் பண்ணி தான் எனக்கு அந்த அனுபவம் கிடைச்சது.

கிளாமர் இந்துஜா

கிளாமர் இந்துஜா

சூப்பர் டூப்பர் படத்துல இந்துஜா கிளாமரா நடிச்சதைப் பத்தி தான் எல்லோருமே கேக்குறாங்க. நானும் அதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தேன். இதுல ஒரு பக்கம் சந்தோசமும் இருக்கு, இன்னோரு பக்கம் பயமும் இருக்கு.

எப்போ ஹீரோயின் ஆவாங்க

எப்போ ஹீரோயின் ஆவாங்க

என்னன்னா, இதுல இந்துஜாவ ரெண்டு விதமா ரசிகர்கள் ரசிக்கிறாங்க. அதாவது ரொம்ப ஹோம்லியான பொண்ணா ஒரு பக்கம் ரசிகர்கள் ரசிக்கிறாங்க. இன்னோரு பக்கம் எப்ப இவங்க ஹீரோயினா மாறப்போறாங்கன்னு எதிர்பாத்துக்கிட்டு இருக்காங்க. இந்த ரெண்டாவது செட் ரசிகர்களுக்கான படம் தான் இந்த சூபபர் டூப்பர் படம். அவங்களோட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்றதுக்கு தான் இந்துஜாவை இந்தப் படத்தில் ஹீரோயினா கொண்டு வந்திருக்கேன்.

வேற இந்துஜா

வேற இந்துஜா

இப்ப சமீபத்தில ரிலீஸான மஹாமுனி படத்துல இந்துஜாவை ஆடியன்ஸ் எல்லாருமே ஹோம்லியா பாத்திருப்பாங்க. நம்ம சூப்பர் டூப்பர் படம் இப்போ ரிலீஸாகப்போகுது. இதுல அவங்ளை டோட்டலா வேற மாதிரி ஒரு இந்துஜாவ ஆடியன்ஸ் பாக்கப்போறாங்க. நிறைய ஆக்ஷன் சீன்களையும் இதுல பார்க்கலாம். இதனால ஒரு நடிகையா அவங்களோட டேலன்ட் என்னன்னு ஆடியன்ஸுக்கு தெரிய வரும்.

கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட்

கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட்

அதே மாதிரி இந்தப் படத்தில நாயகன் துருவா, நாயகி இந்துஜா இவங்க ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரியும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். நல்லா ஒர்க்கவுட் ஆகியிருக்குது. கேமராவும் நல்ல புகுந்து விளையாடியிருக்கு. மியூசிக்கும் நல்லா வந்திருக்கு. அந்த சீன் ஒரு மாதிரி ஜெல்லா வந்திருக்கு. சுருக்கமா சொல்லணும்னா ஜெல்லும் இருக்கு, ஜொள்ளும் இருக்கு என்றார் இயக்குநர் அருண் கார்த்திக்.

English summary
In the movie 'Super Duper', the chemistry of the hero Dhruva and the heroine Indhuja is brilliant. They have worked well. The cinematography has been good. Director Arun Karthik said that the music is good as well.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more