»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

எஸ்.ஜே. சூர்யாவின் பெஸ்ட் பிரண்ட் படத்தில் நடிக்கும் நிலா என்ற டெல்லி ப்யூட்டி, படத்தின் போஸ்டர்களுக்காக கொடுத்துள்ள போஸ்சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

நியூ வெற்றிக்குப் பிறகு சூர்யா இயக்கும் பெஸ்ட் பிரண்ட் (முன்பு பி.எஃப்) ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளது. முன்னோட்டமாக ஹீரோயின்நிலாவை வைத்து சில ஸ்டில்களை எடுத்துத் தள்ளியுள்ளார் சூர்யா.

இந்த ஸ்டில்கள் பட பூஜை அழைப்பிதழுக்கும், பட பூஜையன்று நகரெங்கும் ஒட்டப்படவுள்ள போஸ்டர்களுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளன.ஸ்டில்கள் அனைத்தும் படு ஏ ரகமாக உள்ளனவாம்.


டெல்லியிலிருந்து தேடிப் பிடித்துக் கொண்டு வந்துள்ள புதுமுகத்திற்கு சுத்தமான தமிழில் நிலா என்று வைத்துள்ளார் சூர்யா. நிலா ரொம்பசூட்டிகையான பெண்ணாக இருக்கிறாராம். அதாவது எள் என்றால் எண்ணெய் பிழிந்து கையிலும் கொடுக்கும் அளவுக்கு படு ஜூட்பார்ட்டி.

மூர்த்தி சிரிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது மாதிரி.. ஆள் குட்டியாக இருந்தாலும் கவர்ச்சியில் கெட்டியாக இருக்கிறார். சூர்யாவையேகவர்ச்சியில் பிரமிக்க வைக்கிறாராம். சமீபத்தில் நடந்த போட்டோ செஷனிலும் நிலா அள்ளிவிட்ட போஸ்களை கையில் அள்ளியபடிகுஷியாக இருக்கிறார் சூர்யா.

ஆங்கில முத்தத்திற்கும் குறைவில்லை. இவரை சின்ன சிம்ரன் என்று கொண்டாடுகிறார் சூர்யா.

அழைப்பிதழுக்கான டிசைனில் சூர்யாவும், நிலாவும் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாக இருப்பது போன்ற ஸ்டில் ஒன்றும் இடம் பெறப்போகிறதாம். சூர்யாவும், நிலாவும் "பிறந்த நாள்" உடையில் அருகருகே படுத்து இருப்பது போன்ற டிசைனாம் இது.

இதற்கிடையே யாருக்கும் பயந்து தனது படத்தின் பெயரை (பெஸ்ட் பிரண்ட்) நான் மாற்ற மாட்டேன் என்று துணிச்சலாகக் கூறியுள்ளார்சூர்யா.

சினிமா படங்கள், தமிழகத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயரை தூய தமிழில் வைக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைமையில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இவர்களது வேண்டுகோளை ஏற்று, இயக்குனர் சேரன் தனது புதிய படத்திற்கு வைத்திருந்த டைரி என்ற பெயரை, கடிதங்கள்என்று மாற்றிவிட்டார்.

அதேபோல் எஸ்.ஜே. சூர்யாவும் தனது பி.எப். (பெஸ்ட் பிரெண்ட்) பெயரை அன்புள்ள நண்பரே என்று மாற்றிவிட்டதாகக் கூறப்பட்டது.ஆனால் சூர்யா இப்போது அதை மறுக்கிறார்.

நிருபர்களிடம் சூர்யா பேசுகையில்,

எனது புதிய படத்திற்கு பி.எப். என்று பெயர் வைக்க வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த முடிவு. யார் என்ன சொன்னாலும்இந்தப் படத்தின் பெயரை மாற்ற மாட்டேன் என்று கூறியவர் அடுத்து ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். பிறர்க்காவது குடும்பம், குழந்தைகள் என பொறுப்பு இருக்கும். எனக்கு அப்படி யாருமில்லை.

எனவே எனக்கு எந்த பயமும் இல்லை. எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதை தைரியமாக சந்திப்பேன். தமிழை வளர்ப்போம் என்றுராமதாஸ் கூறுவதால் நான் அவரை மதிக்கிறேன். ஆனால் படத்தின் பெயரை மாற்றமாட்டேன்.


நியூ படத்தில் ஆபாசம் இருப்பதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதற்கு முன்பு பல திரைப்படங்களில் ஆபாச காட்சிகளும் வசனங்களும்வந்துள்ளன. அதெல்லாம் அவர்களின் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று ஆவேசமாகக் கேட்ட சூர்யாவை சமாதானப்படுத்தியபோதுதனது பெஸ்ட் பிரண்ட் படத்தைப் பற்றி சில தகவல்களைச் சொன்னார்.

படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். ஹாலிவுட், இந்திப் படங்களில் பிஸியாக இருந்தாலும், சூர்யாவிற்காக ஒரு வாரம் கொடைக்கானலில்தங்கியிருந்து அட்டகாசமான ட்யூன்களைப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

அசத்தலான காதல் கதையாம். பழைய நினைவுகள் எப்படி ஒரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கிறது என்பதை சூர்யா தனக்கே உரியபாணியில் கூறவிருக்கிறாராம். புத்தாண்டில் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்கள்.

ஆனால், பெயர் மட்டும் எந்தக் காரணம் கொண்டும் மாற்றப்படதாம். சரிதான், ஏதோ ஒரு முடிவோடு தான் இருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil