»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜோதிகாவுக்கு சிபாரிசு செய்யும் அவசியம் எனக்கோ, அவருக்கோ இல்லை என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

இப்போது தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் ஹீரோக்கள் என்றால் அது விக்ரமும், சூர்யாவும்தான். இவர்களை வைத்து ஒரு படம்எடுத்தவர்கள், அடுத்த படத்தையும் இவர்களை வைத்தே எடுக்கும் அளவிற்கு இயக்குனர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்துவைத்திருக்கிறார்கள்.

பாலாவின் சொந்த தயாரிப்பில் உருவாகும் மாயாவில் படத்தில் ஜோதிகாவுடன் நடித்து வரும் சூர்யா, அடுத்து செல்லமே வெற்றுப் படத்தின்இயக்குனர் காந்தி கிருஷ்ணாவின் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மாயாவியில் பிஸியாக இருந்தவரை பிடித்து, உங்கள் படங்களில் எல்லாம் ஜோதிகாவிற்கு சிபாரிசு செய்கிறீர்களாமே என்றுவம்பிழுத்த்தால், சூர்யா டென்ஷனே ஆகாமல் நிதானமாக சொன்ன பதில்,

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவருக்கு ரஜினி, சிரஞ்சீவின்னு சூப்பர் ஸ்டார் படங்களில் எல்லாம் நடிக்க வாய்ப்பு வருகிறது.அவருக்கு நான் போய் சிபாரிசா? அதற்கான அவசியம் அவருக்கும் இல்லை; எனக்கும் இல்லையே.

இப்போது நான் நடித்து வரும் மாயாவி படத்தின் இயக்குனர் சிங்கப்புலி சார், பிதாமகன் படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தவர்.பேரழகன் படத்தின்போது எனக்கு பக்கபலமாக இருந்து நடிப்புக் கற்றுத் தந்தவர்.

சிங்கப்புலி ஒரு ஜாலியான ஆள். அதனால் சூட்டிங்கும் ஜாலியாகவே நகர்கிறது. இந்தப் படத்தில் எனது பெயர் அபேஸ் பாலையா.ஏதாவது திருடிவிட்டு உடனே எஸ்கேப் ஆகிவிடும் கேரக்டர்.

இயக்குனர் பாலா எனக்கு அண்ணன் மாதிரி. அவர்தான் சினிமாவை நேசிக்கக் கற்றுக் கொடுத்தார். அவருக்கு ஏதாவதென்றால் நான் அங்குஇருப்பேன். எனக்காக எதையும் செய்பவர் பாலா அண்ணன்.

மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை, ஆய்த எழுத்து மூலம் நிறைவேறியது. அதில் எனது கேரக்டருக்கு நல்லவரவேற்பு கிடைத்தது. ஹிந்தியில் யுவா பார்த்துவிட்டு, அஜய் தேவ்கனைவிட நான் நல்லா செய்திருப்பதாக பலரும் சொன்னார்கள் என்றார்தெளிந்த நீரோடையாய்.

அதென்ன அஜீத் நடிக்க இருந்த மிரட்டல் படத்தில் இப்போது நீங்கள் நடிக்கிறீர்கள்? என்று கேட்டபோது,

என்னான்னு தெரியவில்லை. நந்தா, நேருக்கு நேர், ப்ரெண்ட்ஸ் இந்த மூன்று படங்களுமே அஜீத் செய்ய இருந்தவை தான் தெரியுமா.ஆனால் அந்த கேரக்டர்களில் நடிக்க கடைசியில் எனக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. அந்த வரிசையில் இப்போது மிரட்டல் படத்திலும்அவருக்குப் பதிலாக நான் நடிக்கிறேன்.

முருகதாஸ் என்னிடம் கதை சொன்னார். கதை எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. ரமணா போல் இந்தப் படமும் முருகதாஸூக்கு பெரியஹிட்டாக அமையும். எனக்கும் இது நல்ல படமாக இருக்கும் என்றார் சூர்யா சிரிப்பு மட்டும் மாறாமல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil