twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓ...இது தான் அர்த்தமா...மாநாடு டைட்டிலுக்கு புது அர்த்தம் சொன்ன டி.ராஜேந்தர்

    |

    சென்னை : சிம்பு நடித்த மாநாடு படத்திற்கு அவரது தந்தையும், பிரபல டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று புதிய அர்த்தம் ஒன்றை சொல்லி உள்ளார். இதை கேட்டு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும், ஓ...இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா என ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.

    நடிகர் சிம்பு இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு சோஷியல் மீடியா மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிம்பு தற்போது நடித்து வரும் பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற படக்குழுவினர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளனர்.

    மகளை அசிங்கமாக திட்டிட்டு உள்ளே வேஷம் போடுறாரு.. இன்ஸ்டாகிராம் லைவில் தாடி பாலாஜி மனைவி விளாசல்!மகளை அசிங்கமாக திட்டிட்டு உள்ளே வேஷம் போடுறாரு.. இன்ஸ்டாகிராம் லைவில் தாடி பாலாஜி மனைவி விளாசல்!

    சிம்பு பிறந்தநாளை கொண்டாடிய மாநாடு டீம்

    சிம்பு பிறந்தநாளை கொண்டாடிய மாநாடு டீம்

    சமீபத்தில் சிம்பு நடித்து பிரம்மாண்ட வெற்றியை பெற்ற மாநாடு படக்குழுவினரும், மாநாடு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவை அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதே போல் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர் மன்றம் சார்பில் சென்னையில் ரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் துவக்கி வைத்தார்.

    சிம்பு இப்போது எங்கு இருக்கிறார்

    சிம்பு இப்போது எங்கு இருக்கிறார்

    ரத்த தானத்தை துவக்கி வைப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், என் மகன் சிம்புவிற்கு பதிலாக தான் நான் இங்கு வந்திருக்கிறேன். அவர் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங்கிற்காக வெளிநாடு சென்றுள்ளார். அவரது பிறந்தநாளில் ஒரு விழா நடத்தி, மாநாடு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அது முடியாமல் போனதற்காக அவர் ஆதங்கப்பட்டார். ஒமைக்ரான், கொரோனா காரணமாக விழாக்கள் ஏதுவும் நடைபெறாமல் போனது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்த முடியாமல் போனது.

    ஓ...இது தான் அர்த்தமா

    ஓ...இது தான் அர்த்தமா

    மாநாடு படத்தின் வெற்றிக்கு காரணம் கடவுள் தான். அவர் அருளால் தான் இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சிம்பு ரசிகர்களை தான் கடவுளாக நினைத்தார். அந்த நம்பிக்கை, அவரின் உழைப்பு வீண் போகவில்லை. மாநாடு என்ற தலைப்பிற்கு ஏற்ப மாபெரும் வெற்றியை, ஆதரவை என் மகனுக்கு இந்த நாடு கொடுத்துள்ளது. சிம்பு எங்களை வந்து நாடு...நாடு என என் மகன் நாடியதால் தான் இந்த மாநாடு வெற்றி பெற்றது.

    100 வது நாளை நோக்கி மாநாடு

    100 வது நாளை நோக்கி மாநாடு

    என் மகனும் நாங்களும் கஷ்டப்பட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்தோம். அதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் உதவி கேட்டால் அவர்கள் எப்படி ரெட்கார்டு போடலாம் என்று தான் யோசித்தார்கள். அத்தனை தடைகளையும் தாண்டி இன்று மாநாடு 100 வது நாளை நோக்கி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் தான் சிம்பு இந்த நிலைக்கு வர காரணம். என் வழி வேறு. என் மகனின் வழி வேறு என்றார் டி.ராஜேந்தர்.

    Recommended Video

    Maanadu படம் இன்னும் நான் பார்க்கவில்லை!! | ஆவேசமாக பேசிய T.Rajendran, STR
    ரத்தான சிம்புவின் விழா

    ரத்தான சிம்புவின் விழா

    மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமம் விற்பனை தொடர்பாக டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது. இதன் காரணமாகவே மாநாடு 25வது நாளில் நடந்த வெற்றி விழாவிற்கு சிம்பு வரவில்லை என கூறப்பட்டது. சிம்பு வராததை பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆனால் மாநாடு வெற்றிக்கு நன்றி சொல்வதற்காக சிம்பு தலைமையில் ஜனவரி 6ம் தேதி ஒரு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பிறகு கொரோனா பரவல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

    English summary
    On the occassion of Simbu's birthday, his father T.Rajender inagurated the blood donation camp in chennai.He told media that god is the only reason behind simbu's maanaadu success. now simbu is in foregin for his upcoming movie vendhu thanindhadhu kaadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X