Don't Miss!
- News
மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சுருள் முடியுடன் ஷோக்கா பேசி... கண்களால் கைது செய்த டாணாகாரி, அஞ்சலி நாயர்
சென்னை: நடிகர் விக்ரம் பிரபு எனது கண்கள் அழகாக இருப்பதாக கூறியுள்ளார் என்று நடிகை அஞ்சலி நாயர் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடந்த படப்பிடிப்பில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே தான் சிரித்துக் கொண்டே இருந்ததாக நடிகை அஞ்சலி நாயர் தெரிவித்தார்.
நடிகர் விக்ரம் பிரபு, நடிகை அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் டானாக்காரன் படத்தின் புரோமேஷன் நிகழ்வில், நடிகை அஞ்சலி நாயர் நமது பிலீம் பீட் வினோத்துக்குள் அளித்த சிறப்பு பேட்டி இங்கு பார்க்கலாம்.
முடிவெடுத்தால் முதல்வர்... தமிழ்நாட்டிற்கா? புதுச்சேரிக்கா?...முடிவெடுத்து விட்டாரா விஜய்?

Curly hair பிடிக்கும்
கேள்வி: அஞ்சலி நாயகர் உங்களின் மேடைப்பேச்சு உணர்ச்சி பூர்வமாக இருந்தது. உங்களின் சுருட்டை முடியை எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?
பதில்: என்னுடைய Curly hair ஐ எனக்கு ரொம்ப பிடிக்கும். Curly hair வைத்திருக்கும் ரித்திகா சிங்கை பிடிக்கும். நடிகை என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறை ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். அதனால் தான் எனது Curly hair ஐ கவனத்துடன் பராமரித்து வருகிறேன் என்றார்.

சிரித்துக் கொண்டே இருந்தேன்
கேள்வி: தற்போது நீங்கள் நடித்துள்ள டானாக்காரன் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நான் முதன்முதலில் நடித்த நெடுநல்வாடை படத்தின் என்னுடைய கதாபாத்திரம் வேறு. ஆனால் டானாக்காரன் படத்தில் நான் போலீஸ் உடையில் வருகிறேன். இதன் படப்பிடிப்பு வேலூரில் நடந்தது. முதலில் நான் ஷூட்டிங் சென்றபோது வெயிலின் தாக்கம் தெரியவில்லை.ஆனால் இரண்டாம் நாள் திறந்தவெளியில் படப்பிடிப்பு நடந்தது. ஒரு மரம் கூட அங்கு கிடையாது. ஆனால் அங்கிருந்து அனைத்து நடிகர் மற்றும் கலைஞர்களும் வெயிலை பொருட்படுத்தாமல் கடினமாக உழைத்தனர். அதை நான் பார்க்கும்பொழுது நானும் என்னை மறந்து கடினமாக உழைத்தேன். எல்லோரும் என்னை ஊக்கப்படுத்தினர். வெயிலின் தாக்கம் தெரியாமல் நான் சிரித்துக் கொண்டே பணியாற்றுவதாக அனைவரும் தெரிவித்தனர். எனக்கு மன அழுத்தம் ஏற்படாமல் அனைவரும் என்னை பார்த்துக் கொண்டனர். இந்த படத்தின் கதையானது 1990ம் ஆண்டில் நடைபெற்ற ஆணாதிக்கம் மற்றும் அதிகார துஷ்ப்ரயோகம் குறித்தது. பெண்கள் அதிகம் இல்லை. இக்கதையானது போலீஸ் பயிற்சியில் நடந்த கதை. படம் ரொம்ப அருமையாக வந்துள்ளது.

கண்கள் அழகு
கேள்வி: வேலூரில் நீங்கள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு மேல் ஸ்பெஷல்லாக நடந்துள்ளது. எதனால்?
பதில்: எனக்கு அது ஆச்சரியமாக உள்ளது. கேமராமேன் மதேஷ் என்னுடைய கண்களை அழகாக காட்டியிருப்பதாக நடிகர் விக்ரம் பிரபு கூறினார். அவர் கூறியதை எனக்கு பெருமையாக இருக்கிறது. முதலில் கேமராமேன் மாதேஷ்க்கு நன்றி. இப்படத்திற்கு வெயில் என்று பாராமால் தயாரிப்பாளர், கேமராமேன் என அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர்.
காலங்களில் அவள் வசந்தம்
கேள்வி: உங்களது அடுத்த படம் என்ன?
பதில்: என்னுடைய அடுத்த படம் சி.வி.குமரன் தயாரிப்பில் காலங்களில் அவள் வசந்தம். பி.பி.சீனிவாஸ் பாடிய காலங்களில் வசந்தம் என்ற வார்த்தையை படத்திற்கு தலைப்பாக பயன்படுத்தியுள்ளோம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்கு பிறகு இரண்டு மாதங்களில் "காலங்களில் அவள்வசந்தம்" திரைப்படம் வெளியாகும் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/gbZ1lOFYg9Y இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகை அஞ்சலி நாயர் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.