»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் படத்தின் பிரிவியுக்காக ஸபெஷலாக சென்னைக்கு பறந்து வந்திருந்தார் தபு.

தாஜ் கன்னிமாரா ஓட்டலில் தங்கி இருந்த அவரை, சந்திக்க சென்ற போது ஜீன்ஸ் பேண்ட், பனியனில் - நன்கு அறிமுகமானவர் போல் வணக்கம்சொல்லி வரவேற்றார். தபுவை சுற்றி எப்-போ-து-மே ஒரு பெரிய கூட்டம் இ-ருக்-கும்.

அவர்-க-ளு-டன் கலகலப்பாக அரட்டை அடித்-துக் கொண்-டி--ருப்-பார். டைரக்டர் பிரியதர்ஷனின் "பூப்பூக்கும் ஒசை" படப்-பி-டிப்-பில், ஏவிஎம் ஸ்டுடியோவில்துணை நடிகைகளிடமும், ஜோதிகா போன்ற நட்சத்திரங்களிடமும் சரிசமமாக இவர் பேசியதை பார்த்த போது நிமிடம், நம்ம ஊர் நடிகைகளின் பந்தாவும் ,பகட்டும் ஒரு நிமிடம் நம் கண் முன்னே தோன்றி மறையவே செய்தது.

இந்திப்பட உலகில் ஒரு தனி இடத்தையும் பெற்றதோடு தன் சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர் தபு.

அங்கேயே தன் நட்சத்திர அந்தஸ்துடன், வலம் வராமல் மராட்டி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று பல மொழிப் படங்களில் நடிக்கிறாரே, ஏன்?

நம் முதல் கேள்வி அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும் - மனம் விட்டுச் சிரித்தார்.

நடிப்பது பணத்துக்காக. ஆத்ம திருப்திக்காக, வாய்ப்புக் கிடைத்தால் என்று மட்டும் இல்லாமல், அதற்கும் மேலேயும் ஒரு காரணம் ஒன்று உண்டு. இந்திப்படங்களில் நடிப்பதாலேயே ஒர் இண்டர்நேஷனல் நடிகை என்று பெயரெடுத்துவிட முடியும். ரீஜனல் மொழிகளில் நடிக்கும் போது, அந்தந்த மொழி பேசும்ரசிகர்களுடனும், இன்னும் கொஞ்சம் நெருக்கமான உறவு ஏற்படும். அப்படிப்பட்ட உறவை நான் விரும்புகிறேன்.

என்னிடம் பேசும் ஒரு தமிழ் ரசிகை சின்ன இடைவெளியும் இல்லாமல் என்னை தமிழ்ப் பெண்ணாகவே நினைத்துப் பேசுவதை பார்க்கிறேன். தெலுங்கு,மலையாள மொழிப்படங்களில் எனக்கு வேறு யாரோ ஒருவர் குரல் கொடுத்தாலும், ஏதோ நான் அவர்கள் மொழி பேசி நடிப்பதை, அவர்கள்ரசிக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறார்கள்.

நடிகை என்பவர்கள், எத்தனை நாட்களுக்கு பணத்துக்காக மட்டும் நடித்துக் கொண்டிருக் முடியும் - இளமை குறைந்து விட்டால் வாய்புக்களும்குறைந்துவிடலாம். ஆனால் ஒவ்வொரு மொழியிலும், நடிகையாக நான் நேசிக்கப்படுவதில் ஒரு தனி சுகம் உண்டு. அதனால் எந்த மொழியாகஇருந்தாலும் நான் ஒத்துக் கொண்டு நடிக்கிறேன்.இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னோட லட்சியம்,குறிக்கோள்.

தபு, நீங்கள் நடிக்கும் படங்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

இந்திப்படங்களை பொறுத்தவரை. எனக்கு என்று ஒரு இமேஜ் பில்டப் பண்ணி விட்டார்கள், கிளாமர் கேர்ள், ஆட்டம், பாட்டம் போடும் ஜாலியானகேரக்கடர் என்று. தெலுங்கில் கூட அப்படித்தான். என்னை முதலில் அழைத்தார். என்க்கு ஒரு வருட டேனிங் பாயிண்டை உருவாக்கி, சீரியஸான நடிப்பைவெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தபுவாலும் வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர் டைரக்டர் ப்ரியதர்ஷன் மட்டுமே. அதனாலேயோஎன்னவோ அவர் டைரக்ஷளில் நான் அதிகமான தென்னிந்தியப் படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது பெண்களை மட்டுமே நடிக்கும் மூன்று மொழியில்தயாரிக்கப்படும், பூப் பூக்கும் ஓசை படத்தில் கூட, நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

பொதுவாகவே, தபு எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க முடியும், அவருக்கு எந்தக் கதாபாத்திரம் சரிபடும். என்பதை எனக்காக கதை பண்ணும்போதே, டைரக்கடர்கள் முடிவு செய்து விடுகிறார்கள்.காதல் தேசம்படத்தில கல்லூரி மாணவியாக நான் நடித்தேன் - அந்தப்படத்தின் முடிவில் எனக்குஅதிகமான ஈடுபாடு இருந்தது. இருவரும் என்னை சமமாக காதலிக்கிறார்கள். ஒருவரை விட்டு விட்டு இன்னொருவரை மணந்தால் அவர் மனதுஎன்ன பாடுபடும் என்று சொல்லி, இருவரையும் நான் நண்பர்களாக ஏற்றுக் கொள்வது எனக்குப் பிடித்திருந்தது. அது போல கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் கதை எனக்காகவே உருவாக்கப்பட்டது போல் நான் உணர்ந்தேன்.சும்மா கிளாமராக நான்கு பாட்டு ஒரு டூயட் பாடவும்,ஆடவும் தபு தேவையில்லை என்ற முடிவில் எனக்காக கதையை அமைக்கிற -மா-தி-ரி ஆக விட்டது

டைரக்டர் ப்ரியதர்ஷனின் படமெல்லாம் நான் கதையை கேட்பதே கிடையாது.! அவர் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை. இந்திப் படம் என்றால்,முதலில் பேனர், ஹீரோ, டைரக்டர் எல்லாம் தெரிந்து கொண்டு கதை கேட்பேன். என் மனதைத் தொடும்படி இல்லாவிட்டால் மறுத்து விடுவேன். இதைதிமிராக சொல்வதாக நினைக்க வேண்டாம். இதே தேதிகளில் வேறு மொழிப் படங்களில் நடிக்கிற வாய்ப்பு வந்தால் மறுக்காமல் ஒத்துக் கொண்டுவிடுவேன்

ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்று தெரிந்த பின்பும் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நீங்கள் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டீர்கள்?

பலருக்குத் தெரியாத ஒரு உண்மையை இப்போது சொல்லப் போகிறேன். ராஜீவ் மேனின், விளம்பரப் படங்களில் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பேநடித்திருக்கிறேன். அவருடைய திறமை மேல் எனக்கு அபார நம்பிக்கை உண்டு. என் கேரக்டரை மட்டும் கேட்டுக் கொண்டு நடிக்க சம்மதித்தேன்.இந்தப் படம் ஆரம்பித்த போது ஐஸ்வர்யா ஒரு சாதாரண கதாநாயகிதான். சமீபத்தில் கிடைத்த வெற்றிகள் அவருக்கு ஸ்டார் இமேஜ் கொடுத்துள்ளது. ஒருநல்ல கதை - சிறந்த டெக்னீஷியன், அஜீத் மாதிரி வளரும் ஹீரோவுடன் நடிக்க யாருக்குத்தான் கசக்கும்!

சரி, தபு! நீங்கள் கவிதை எழுதுவதாக செய்திகள் வருகின்றனவே எந்த மொழியில் எழுதுகிறீர்கள்?

எனக்கு ஓய்வு கிடைப்பதே இல்லை. அப்படி ஓய்வு கிடைத்து நல்ல மூடில் இருக்கும் போது கவிதை எழுத வேண்டும் என்று நினைப்பேன்.ஆரம்பத்தில் உருதுமொழியிலும் இந்துஸ்தானியிலும் தொடங்கி, இப்போது இங்கிலீஷில் எழுதுகிறேன்.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படப்பிடிப்பில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஏதாவது ஒன்று சொல்லிங்களேன்?

உலகில் உள்ள பிரபலமான எல்லா நாடுகளுக்கும் போய் வந்த எனக்கு முதல் முறையாக எகிப்தை பார்க்கிற வாய்ப்பை ஏற்படுத்தியது கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில்தான். அங்கே வெயில் என்றால் சாதாரண வெயில் இல்லை, தாங்க முடியாத கொடுமையான வெயில்.மனிதர்களை.ய உருக வைத்துவிடும் அளவுக்கு அடித்தது. ஒரு கட்டத்தில் நான் ஓடிவரும் போது வெயில் தாங்க முடியாமல் மூர்ச்சையாகி விழுந்து விட்டேன்.பிறகு முதல் உதவிகள் கொடுத்து,அந்தக் காட்சியை படமாக்கினோம்.

உங்கள் திருமணம் ...?

ஒரு பெண்ணுக்கு திருமணம், மிகவும் அவசிம். ஒரு பெண், தாய்மை அடையும் போதுதான் அவள் பெண்மை நிறைவாகிறது என்று நான் படித்திருக்கிறேன்.ஆனால், இந்தியாவில் உள்ள அதிகமான மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறிய பிறகே, அது பற்றி நான் நினைப்பேன்.இப்போது நான் சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன்.

உங்கள் சினிமா வாழ்வில் மறக்க முடியாத படம் எது? ஏன்?

தேவர் மகன் இந்தி விரசாத். தமிழில் ரேவதி நடித்த அந்த கதாபாத்திரத்தில் நான் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். இந்திப் படம் என்றாலும், இந்தப் படத்தைபொள்ளாச்சி, காரைக்குடியில் படமாக்கிய போது இங்குள்ள தாய்மார்கள் , என்னை சொந்த மகளாகவும் சகோதரியாகவும் பாவித்து எனக்குதினம்தோறும் மல்லிகை பூ, மற்றும் பலகாரங்களைக் கொடுத்ததை நான் மறக்கவே மாட்டேன்.

தபுவுக்கு சமையல் தெரியுமா?

நான் வெறுக்கும் ஓரே வேலை இந்தச் சமையல் தான்.அதற்காக, சமையல் செய்யத் தெரியாது என்று முடிவு கட்டிவிட வேண்டாம்.ஆனாலும் சமையல்செய்வதை நான் வெறுக்கிறேன். ஏற்கனவே ஆண்களுக்கு என்பால் வெறுப்பு உண்டு. இந்த சமையல் செய்தி, அவர்களை நன்றாக வெறுப்பேற்றி விடும்.

கடைசியாக ஒரு கேள்வி, தபு என்றால் என்ன அர்த்தம்?

என்னோட பெயர் (TABASSUM) தபஸம் அதற்கு, புன்னகை என்று அர்த்தம். அதை சுருக்கி தபுஎன்று செல்லமாக அழைக்கத் தொடங்கி அதுவே என் பெயராகி விட்டது என்றார் த-பு-புன்-ன--கை-யு-டன்.

Read more about: tabu tamil cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil