»   »  தமிழ்ப் பெண்களே அழகு-ஹேமாமாலினி

தமிழ்ப் பெண்களே அழகு-ஹேமாமாலினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் பெண்களைப் போன்ற அழகானவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை என்கிறார் நடிகை ஹேமாமாலினி.

தமிழகத்தில் இருந்து இந்திக்குப் போய் பெரும் வெற்றி பெற்ற ஹேமா, தற்போது பாஜகவின் ராஜ்யசபா எம்பி. இவர் ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டி

60 வயதாகப் போகுகிறது. இன்னும் எப்படி இளமையை தக்க வைத்துள்ளீர்கள் என்று கேட்கிறார்கள். எங்கு போனாலும் இதைத் தான் கேட்கிறார்கள். அட, ஏன் நான் நாடாளுமன்றம் போனாலும் என்னிடம் பெர்சனலாக பல பேர் வந்து கேட்பது இதைத்தான்.

இதெல்லாம் ஒன்னும் பெரிய ரகசியம் இல்லை. எப்படிப்பட்ட கோபம் வந்தாலும் துக்கத்தை மறந்து சிரித்தால் போதும் முகம் பொலிவோடு இருக்கும். சிரிப்புதான் என் வசீகரத்திற்கு முழுக் காரணம், மருந்து.

இன்னொரு ரகசியம் சொல்கிறேன், யாரிடமும் சொல்லாதீர்கள். நானும் இந்தியாவில் எத்தனையோ இடங்களுக்கு போயிருக்கிறேன். ஆனால் நான் பார்த்த வரை தமிழ்ப் பெண்களை போல அழகானவர்கள் எங்கே தேடி பார்த்தால் கூட கிடைக்க மாட்டார்கள்.

திருச்சி அருகே அம்மன்குடி என்ற ஒரு சிறிய கிராமம் தான் ஹேமாவின் சொந்த ஊர். சென்னை ஆந்திர மகிள சபாவில் படித்த ஹேமாமாலினி, பரத நாட்டியத்தை முறைப்படி கற்றுக் கொண்டு சிறிய வயதிலேயே நிறைய அரங்கேற்றம் செய்தவர்.

திடீரென சினிமா மோகம் ஏற்பட்டு அந்த காலத்தின் மிகப் பிரபலமான டைரக்டரிடம் வாய்ப்பு கேட்டாராம். அவரோ, இந்த மூஞ்சிக்கெல்லாம் சினிமாவுக்கு லாயக்கில்லை என்று சொல்லிவிட்டாராம்.

அந்த டைரக்டருக்கு கோடி நன்றி சொல்லும் ஹேமாமாலினி, அதன் பிறகு தான் பாலிவுட் போனதையும், அங்கே தன்னை சினிமா உலகம சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதையும் சொல்லிச் சொல்லி சிரிக்கிறார்.

யாரு அந்த டைரக்டர்?!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil