twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அக்ஷராக்கு அழுகையே வரல.. இயக்குனர் ராஜா சொன்ன செம மேட்டர்!

    |

    சென்னை: அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படம் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியானது. இத்திரைபடத்தை நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தயாரித்து நடித்துள்ளார். இயக்குனர் ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ளார்.

    இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளனர்.

    பெண்கள் அதிகமாக நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் ராஜா ராமமூர்த்தி, நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இப்போது பார்ப்போம்.

     ஓடிடி தளத்தில் இன்று வெளியான படங்கள்...முழு விவரம் ஓடிடி தளத்தில் இன்று வெளியான படங்கள்...முழு விவரம்

    குணநலன்கள்

    குணநலன்கள்

    கேள்வி: படத்தின் தலைப்பே வித்தியாசமாக உள்ளதே. அதன் பின்னணி என்ன?

    பதில்: கதை எழுதி முடித்த பிறகு டைட்டில் முடிவு செய்தோம். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற தலைப்பு கதைக்கேற்றதாக அமைந்தது. முதலில் இந்த தலைப்பை உருவாக்கிய கிரியேட்டிவ் புரோடியூசர் வித்யாவுக்கு எனது நன்றி. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற குணநலன்களை வைத்து எந்தவொரு பெண்களையும் முடிவு செய்யக்கூடாது என்பதே படத்தின் மையக்கருத்து.

    மாறுபடும் நிஜவாழ்க்கை

    மாறுபடும் நிஜவாழ்க்கை

    கேள்வி: ஒவ்வொரு நடிகைகளுக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளீர்கள். எதனால்?

    பதில்: இந்த படத்தில் நடிக்கக்கூடிய நடிகைள் யாரும், இது போன்ற கதாபாத்திரத்தை முன்பு ஏற்று நடித்திருக்க கூடாது. மேலும் அவர்களது நிஜவாழ்க்கையில் இருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். இதை மனதில் வைத்து தான் நிஜவாழ்க்கையில், உஷா உதுப் ராக் ஸ்டார் பாடகி. ஆனால் இந்த படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் கர்நாட்டிக் இசை பாடகர். அஞ்சனா ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரம் துறுதுறுப்பாக இருக்க வேண்டும் என எண்ணினோம். அது போன்றே அமைந்தது. நடிகை அக்ஷராவும் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா நடித்துள்ளார். அழுகை சீனில் நடிக்கும்பொழுது நடிகை அக்ஷரா கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டார்.

    புரோபஷனல் பாடகர்கள்

    புரோபஷனல் பாடகர்கள்

    கேள்வி: படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் பாடகர்கள். யாரெல்லாம் அதிகமான டேக் வாங்கி நடித்தார்கள்?

    பதில்: யாரும் அதிகமாக டேக் வாங்கி நடிக்கவில்லை. அனைவரும் புரோபஷனல் பாடகர்கள். அதனால் அவர்கள் சிரமம் இல்லாமல் நடித்தார்கள். உஷா உதுப் தமிழில் ரொம்ப நாட்கள் கழித்து தற்போது நடிக்கிறார். ஹிந்தி மற்றும் மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்துள்ளார். மால்குடி சுபா ஹிந்தியில் நடித்துள்ளார். தமிழில் தான் நடிக்கவில்லை. அனுபவம் வாய்ந்தவர்கள். அதனால் எங்களால் எளிதாக படத்தை முடிக்க முடிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களில் முடிக்கப்பட்டது.

    ரொம்ப எளிமையானவர்கள்

    ரொம்ப எளிமையானவர்கள்

    கேள்வி: மால்குடி சுபா, உஷா உதுப் ஆகியோரிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது?

    பதில்: உஷா உதுப், மால்குடி சுபா ஆகியோர் ரொம்ப எளிமையானவர்கள். நிறைய சாதித்த பிறகும் கூட இவர்கள் பொறுமையானவர்கள். அவர்களுடன் நான் பணிபுரிவது இதுவே முதல்முறை. இருந்தபோதிலும் என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள். இயக்குனர் சொல்வது கேட்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். அந்த பொறுமையை நான் அவர்களிடம் கற்றுக் கொண்டேன்.

    ஆம்... இல்லை...விவாதம்

    ஆம்... இல்லை...விவாதம்

    கேள்வி: படத்தின் டிரெய்லர் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: படத்தின் டிரெய்லரின் போது ரசிகர்களை யோசிக்க வைக்க வேண்டும். அக்ஷரா ஏதோ பண்ண போறாங்க... டிரெய்லரை வைத்து படத்தின் கதையை யாரும் அறிந்து கொள்ள கூடாது. படத்தை பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சீனிலும் ஆம் ...இல்லை என்ற விவாதம் தொடர வேண்டும் என்று விரும்பினோம். முதல் நாள் இரவு நடந்தது மறுநாள் நடக்கக்கூடாது என்று எண்ணி தான் டிரெய்லர் தயார் செய்தோம்.

    ஜாலியான படம்

    ஜாலியான படம்

    கேள்வி: இத்திரைப்படம் ஆண்களுக்கானதா? பெண்களுக்கானதா?

    பதில்: இந்த படமானது பெண்களுக்கானது, ஆண்களுக்கானது என்று மட்டுமில்லாமல் அனைவரும் பார்க்கும் வகையில் ஜாலியான படம். கமர்ஷியல் படமாக இல்லாமல் இது ஒரு பொழுதுபோக்கான படம். பெண்களே பெண்களுக்கு எதிரி என்ற வாசகத்தை நான் முழுமையாக மறுக்கிறேன். ஏனென்றால் இந்த படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள் தான்.

    தமிழில் இவருக்கு முதல் படம்

    தமிழில் இவருக்கு முதல் படம்

    கேள்வி: படத்தின் இசை, பாடல் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: படத்தின் பாடலை மதன்கார்க்கி எழுதியுள்ளார். கதையை கூறியவுடன் ஒரே நாளில் பாட்டு எழுதி கொடுத்தார். வழக்கமான பாடல் போல் இருக்காது. படத்தின் கதையை சொல்வது போல் எழுதி கொடுத்தார். பாடலின் வரிகள் எதார்த்தமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.

    படத்தின் இசையமைப்பாளர் சுஷா. இவர் கர்நாடக பாடகர். இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். பின்னணி இசை ரொம்ப இருக்காது. முதன்முதலாக தமிழில் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரேயா ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தமிழில் ஒளிப்பதிவு செய்யும் முதல்படம் இதுவாகும்.

    முழு சுதந்திரம்

    கேள்வி: நடிகர் கமலஹாசன் எப்போது இந்த திரைப்படத்தை பார்க்கிறார்?

    பதில்: மூத்த நடிகர்கள் சுரேஷ்மேனன், ஜானகி சபேஷ் மற்றும் வசனம் எதுவும் பேசாமல் நடிகை கலைராணி நடித்துள்ளார். நடிகர் ஜார்ஜின் கதாபாத்திரம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். இந்த படமானது முழுவதுமாக ஒடிடியில் வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட படம். இதனால் எனக்கு பிடித்த மாதிரி படத்தை எடுக்க முடிந்தது. இந்த படத்தை எடுக்க எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது என்றார். மேலும் நடிகர் கமலஹாசன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் வரும் வாரங்களில் படத்தை பார்ப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு வீடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=B5ag52iWk84&t=27s இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    Tears Does Not come for Akshara Haasan Says Director Raja Ramamoorthy in Exclusive interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X