2 குழந்தை தாரேன்.. சாந்தினியிடம் ஜொள்ளு விட்ட கூமாப்பட்டி தங்கபாண்டி.. பிக் பாஸ் போட்டியாளரா?

சென்னை: சமீபத்திய பேட்டியில் தங்கபாண்டி, "நான் உன்ன நவம்பர் மாசம் கூமாபட்டிக்கு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்," என்று கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சின்னத்திரை ஜோடியான இவர்களது கெமிஸ்ட்ரி பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

சிங்கிள் பசங்க ஷோவில் நடித்தது பற்றி தங்கபாண்டி பேசுகையில், ஆரம்பத்தில் கூமாப்பட்டியில் வீடியோ போட்டதுடன் சரி. ஆனால் சந்தினியுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்த பிறகு வாழ்க்கை வேறு பாதையில் செல்கிறது என்றார். இப்போது பலரும் தன்னை டீசன்ட்டாக பேசுவதாக சொல்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.

Thangapandi amp amp Sandhini Marriage Koomapatti Secret Revealed
Photo Credit:

சந்தினி பேசுகையில், தங்கபாண்டியை முதலில் ரீல்ஸில் பார்த்தபோது, இவரை எப்படி மென்டார் செய்வது என யோசித்தேன். ஆனால் போகப் போக அவரது நல்ல குணம் தெரிந்தது. ஷோவில் நடிப்பது வேறு, நிஜத்தில் அவர் பண்பானவர் என்றார். தனது சினிமா பயணத்தில் சந்தினி உறுதுணையாக இருப்பதாக தங்கபாண்டி கூறினார்.

சினிமாவில் கூச்ச சுபாவம் இருந்தது பற்றிக் கூறுகையில், சூரியவம்சம் படத்தில் சரத்குமார் மாதிரி கட்டிப்பிடித்து நடிக்கச் சொன்னார்கள். ஆனால் எனக்கு கூச்சமாக இருந்தது. அப்போது சந்தினி தான் தைரியம் சொல்லி எப்படி கட்டிப்பிடித்து நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார். அவர்தான் எனக்கு குரு மாதிரி, நடிக்கக் கற்றுக் கொடுத்தார் என்றார் தங்கபாண்டி.

சந்தினியிடம் தங்கபாண்டி பற்றி கேட்கையில், அவர் ரொம்ப டெடிகேட்டட். எதுவுமே தெரியாத ஒருவர் கத்துக்கணும்னு ஆர்வமா இருக்காரேன்னு தோணுச்சு. அதனால ஏதாவது பண்ணனும்னு நினைக்கிறேன் என்றார். மேலும், தங்கபாண்டி மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் பிடிக்கும் எனவும் சந்தினி கூறினார்.

தங்கபாண்டி ஊரில் எல்லோரும் தன்னை பைத்தியக்காரன் என்று சொன்னார்கள். ஆனால் இன்று கூமாப்பட்டிக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு காரணம் நீ தான் என்று பாராட்டுகிறார்கள். விரைவில் தலைமை செயலகத்தில் இருந்து நன்றி சொல்ல கூப்பிட்டு இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

தங்கப்பாண்டி பற்றி சந்தினி கூறுகையில், ஆரம்பத்தில் அவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருந்தார். போகப்போக தைரியமாக எல்லா விஷயங்களையும் செய்கிறார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். வாழ்க்கை நல்லா போயிட்டு இருக்கு என்று சந்தோஷமாக கூறினார்.

ஆனால், வேடிக்கையாக தங்கப்பாண்டி கூமாப்பட்டிக்கு கூட்டிட்டுப் போய் கல்யாணம் பண்ணி 2 குழந்தைகள் கொடுக்கணும் என ஜொள்ளு விட்டார். சாந்தினி பிரகாஷ் தங்கபாண்டி தன்னுடைய நண்பர் தான் என்றும் நீங்க எல்லாம் நினைப்பது போல காதலர் இல்லை என்றும் ஒவ்வொரு முறையும் ஓபனாகவே பேசிவிட்டார்.

கூமாப்பட்டி தங்கதுரை திடீரென ஃபேமஸ் ஆன நிலையில், பிக் பாஸ் சீசன் 9ல் அவரும் ஒரு போட்டியாளராக போகிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜி.பி. முத்து போல இவரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளே செல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி வேறலெவல் லுக்கில் வந்து முதல் ப்ரோமோவை வெளியிட்டுள்ள நிலையில், யாரெல்லாம் இந்த சீசனில் உள்ளே வந்து கலக்கப் போகின்றனர் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியிருக்கிறது.

பலூன் அக்கா என ரசிகர்கள் அழைக்கப்படும் அரோரா சின்க்ளேரும் ஒரு போட்டியாளர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விஜே பார்வதி உள்ளிட்ட பலரும் கெஸ்ஸிங் போட்டியாளர் வரிசையில் உள்ளனர். சினி உலகம் யூடியூப் சேனலுக்கு கூமாப்பட்டி தங்கப்பாண்டியன் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X