»   »  சுஜாதா பாராட்டிய தங்கர்

சுஜாதா பாராட்டிய தங்கர்

Subscribe to Oneindia Tamil

உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விருதுக்காக தனது பள்ளிக்கூடம் படத்தை அனுப்பியுள்ளார் நடிகரும், இயக்குனருமான தங்கர்பச்சான்.

கல்கிக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

எழுத்தாளர் சுஜாதா, என்னுடைய ஒன்பது ரூபாய் நோட்டு என்ற கதையை திரைப்படமாக்கினால் உலகின் சிறந்த விருதான கேன்ஸ் விருது பெறும் என்றார். அதனால் அந்த கதைக்கு பொருத்தமான ஹீரோவாக ரஜினி இருப்பார் என நினைத்ததனால் அவரிடம் கால்ஷீட் கேட்டேன்.

அவரும் கதை மிக நன்றாக இருக்கிறது என பாராட்டினார். ஆனால் பின்னர் என்னை கைவிட்டுவிட்டார். ரஜினி மாதிரி இயல்பாக நடிப்பவர் யாருமில்லை. ரஜினிக்கு ஏற்றதாக இருக்கும் இந்த படத்தில் நடித்தால் அவரை உலக தரத்திற்கு என்னால் கொண்டு வரமுடியும்.

பிரான்ஸ் கேன்ஸ் திரைப்படப் போட்டி 65 வருடங்கள் மேல் நடந்துக் கொண்டிருக்கிறது. உலக மொழிகளில் 2,000க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொள்ளும் இந்த திரைப்பட போட்டியில், ஒரு படத்தை மட்டுமே தேர்வு செய்து சிறந்த படமாகவும், அதன் இயக்குனரை சிறந்த இயக்குனராகவும் தேர்வு விருது அளிப்பார்கள். ஆனால் இதுவரை தமிழ்ப் படங்கள் கலந்து கொண்டது இல்லை.

இந்த போட்டியில் கலந்து கொண்டு தோற்றாலும் பெருமைதான். இதுவரை தேர்வு செய்த 400 படங்களில் என்னுடைய பள்ளிக் கூடம் படமும் வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ரிலீஸ் செய்த படங்களை போட்டி எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதால் நான் இன்னும் அந்த படத்தை திரையிடவில்லை. மே மாதம் 16ம் தேதி போட்டியின் முடிவு தெரிந்துவிடும்.

நான் ஓர் இலக்கியவாதி. நேர்மையானவனாகவும், சமூக அக்கறையுள்ளவனாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். இன்றைய சினிமா உலகில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக படம் தயாரிக்கிறார்கள். ஆனால் மக்களின் மனதை கொள்ளையடிக்க சினிமா எடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.

பெரிய ஹீரோக்கள் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. அவர்களை வைத்து நான் படம் இயக்கவில்லை என்றால் எனக்கு ஒன்றும் இழப்பில்லை. நான் சொல்கிறபடி அவர்கள் நடித்தால் என்னால் இந்த சமூகத்தையே மாற்றிக் காட்ட முடியும் என்கிறார் தங்கர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil