»   »  ஜிலு ஜிலு தீ நகர்!

ஜிலு ஜிலு தீ நகர்!

Subscribe to Oneindia Tamil

தீ நகர் என்று படத்திற்கு அணல் பறக்க பெயர் வைத்திருந்தாலும் படம் முழுக்க ஜில்லான ஐட்டங்கள் நிறையவே இருக்கிறதாம்.

கொக்கி, கருப்பசாமி குத்தகைதாரர் ஆகிய இரு வெற்றிப் படங்களின் நாயகனான முன்னாள் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கரண், நடித்துள்ள 3வது ஹீரோ படம்தான் தீ நகர்.

திருமலை என்பவர் படத்தை இயக்கியுள்ளார். கருப்பசாமிக்கு முன்பாகவே கரண் புக் ஆன படம்தான் தீ நகர். ஆனால் கருப்பசாமி முந்திக் கொள்ளவே தீ நகர் பின் தங்கி விட்டது.

இப்போது தீ நகரும் முடிவடைந்து விட்டது. சில நாட்களுக்கு முன்புதான் கடைசிக் கட்ட படப்பிடிப்பு முடிந்ததாம். கொக்கியைப் போலவே தீ நகரும் அதிரடிப் படமாம். கரண் பின்னி எடுத்து கலக்கியுள்ளாராம்.

படத்தில் இரண்டு முக்கியமான அம்சங்களும் உள்ளதாக திருமலை கூறுகிறார். அதாவது நாயகி உதயதாரா, பாடல் காட்சிகளில் படு கிளாமராக தோன்றியுள்ளாராம். ரசிகர்களின் மனதில் காதல் தீயை கிளப்புவது நிச்சயம் என்று கண் சிமிட்டி களிப்பூட்டுகிறார்.

அதேசமயம், அவருக்கு நடிக்கவும் நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறார்களாம். நடிப்பிலும் சரி, கிளாமரிலும் சரி உதயதாரா டிஸ்டிங்ஷனோடு பாஸ் மார்க் வாங்கியுள்ளாராம்.

அடுத்த சிறப்பு சமிக்ஷா. கொஞ்ச காலமாக காணாமல் போயிருந்த சமிக்ஷா, இப்படத்தில் ஒரு சிறப்புப் பாட்டுக்கு (குத்துப் பாட்டுதான்) வகை தொகையாக ஆடி வசீகரித்திருக்கிறாராம். சமிக்ஷாவின் ஆட்டம் அத்தனை பேரையும் உருக வைக்கும் என்று மறுபடியும் கண் சிமிட்டினார் திருமலை.

இப்படி படம் முழுக்க ஜிலு ஜிலு ஐட்டங்கள் நிறைய இருக்கிறதாம். படத்தின் பெயர்தான் சூடாக இருக்கும். அதேசமயம், இன்றைய காலகட்டத்திற்கேற்ற விஷயங்களையும் படத்தில் வைத்துள்ளேன் என்று கூறும் திருமலை, அதற்காக படத்தை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள், இளைஞர்களுக்கு படத்தில் அருமையான ஒரு செய்தியை வைத்துள்ளேன் என்றார்.

ஆமாண்ணே, அதுதான் ரொம்ப முக்கியம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil